Uncategorized

20 மில்லியன் மக்களுக்கு 40 மில்லியன் கையடக்கத் தொலைபேசி சாதனங்கள்!

By In

ஜே.ஏ.ஜோர்ஜ்

உலகில் தொலைத் தொடர்பு துறை நாளாந்தம் வளர்ச்சியடைந்து வரும் நிலையில்,  அதன் வேகத்திற்கேற்ப இணையம் மற்றும் கையடக்க தொலைபேசி பாவனை அதிகரித்து வருவதை அண்மைய தரவுகள் காட்டுகின்றன. 

இவ்வாறான ஒரு நிலையில், இலங்கையிலும் கணிசமான அளவு கையடக்கத் தொலைபேசி பாவனை அதிகரித்து வருகின்றதை தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவிடமிருந்து பெற்ற தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன.

தொடர்பாடல், தகவல் அணுகல் மற்றும் டிஜிட்டல் மயமாக்களுக்கு மொபைல் சாதனங்கள் என்பது ஒவ்வொருவருக்கும் துணையாக மாறியிருக்கும் ஒரு யுகத்தில், இலங்கையில் மொபைல் தொழில்நுட்பத்தின் நிலப்பரப்பைப் புரிந்துகொள்வது அவசியம். 

இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு (TRCSL) என்பது நாட்டில் கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் சாதனங்களின் சுமுகமான இறக்குமதி மற்றும் விநியோகத்தை உறுதி செய்வதற்காக வலுவான ஒழுங்குமுறை கட்டமைப்பை நிறுவியுள்ள ஒரு நிறுவனமாகும்.

கிட்டத்தட்ட 20 மில்லியன் மக்களைக் கொண்ட இலங்கையில் சுமார் 40 மில்லியன் கையடக்கத் தொலைபேசி சாதனங்கள் புழக்கத்தில் உள்ளதால், இந்தக் கட்டுரையில் இலங்கையின்  கையடக்கத் தொலைபேசி பயன்பாட்டில் பரவலை சற்று ஆராய்ந்து பார்க்கலாம்.

இலங்கையில் கையடக்க சாதனங்கள்

இந்தியப் பெருங்கடலில் அதுவும் தெற்காசியாவின் கேந்திரமாக அமைந்துள்ள இலங்கையானது மொபைல் சாதனங்களை மையமாகக் கொண்ட, செழிப்பான தொலைத்தொடர்புத் துறையைக் கொண்டுள்ளது. இலங்கையின் மொபைல் சாதன பரப்பானது,  நாட்டின் வளர்ந்து வரும் டிஜிட்டல் பிரசன்னத்தை பிரதிபலிக்கின்றது. ஏறக்குறைய 40 மில்லியன் மொபைல் சாதனங்கள் புழக்கத்தில் இருப்பதால், இந்த கையடக்க கருவிகள் இலங்கையர்களின் அன்றாட வாழ்வில் ஒரு முக்கிய பாத்திரத்தை வகிக்கின்றன என்பது தெளிவாகிறது.

39,695,280 சாதனங்கள் இறக்குமதி

இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு வழங்கியுள்ள அண்மைய தரவுகளின்படி, இலங்கையில் சுமார் 39,695,280 கையடக்க தொலைபேசி சாதனங்கள் உள்ளன. இந்த எண்ணிக்கையானது அன்ரோய்ட் மற்றும் அப்பிள் சாதனங்களை உள்ளடக்கியுள்ளமை குறிப்பிடத்தக்க அம்சமாகும் என்பதுடன், இது இலங்கை அலைபேசி சந்தையின் பன்முகத்தன்மையைக் காட்டுகிறது. 

மேலும், கொவிட் பெருந்தொற்றுக்குப் பின்னரான பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் 2022ஆம் ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில், 352,706 கையடக்கத் தொலைபேசிகள் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

ஒழுங்குமுறை நடவடிக்கைகள்

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் கையடக்க தொலைபேசி சாதன சந்தையை கண்காணிக்கவும் அதனை கட்டுப்படுத்தவும் இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு தொடர்ச்சியான ஒழுங்குமுறை நடவடிக்கைகளை செயல்படுத்தி வருவதாக தெரிவிக்கின்றது.

இந்த நடவடிக்கைகள் நுகர்வோர் நலன்களைப் பாதுகாக்கவும், கையடக்கத் தொலைபேசிகளின் தரம் மற்றும் அதன் பாதுகாப்புத் தரங்களை மேம்படுத்தவும், சந்தையின் ஒருமைப்பாட்டை பராமரிக்கவும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இதன் முக்கிய ஒழுங்குமுறை நடவடிக்கைகளில் ஒன்றாக இறக்குமதி செய்யப்படும் கையடக்கத் தொலைபேசிகளின் தரம் சோதிக்கப்படுவதுடன், இந்த செயல்முறையை வெற்றிகரமாக பூர்த்தி செய்யும் சாதனங்கள் மட்டுமே இலங்கை சந்தையில் நுழைய அனுமதிக்கப்படும் என ஆணைக்குழு தெரிவிக்கின்றது.

இலங்கைக்கு கையடக்கத் தொலைபேசிகளை உத்தியோகபூர்வமாக இறக்குமதி செய்வதற்கு இலங்கை தொலைத்தொடர்பு ஆணைக்குழுவில் பதிவு செய்யப்பட்ட தகைமைபெற்ற வர்த்தகர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன், குறித்த வர்த்தகர்களால் இறக்குமதி செய்யப்படும் கையடக்கத் தொலைபேசிகள் தொகை அடிப்படையில் ஐஆநுஐ (ஐவெநசயெவழையெட ஆழடிடைந நுஙரipஅநவெ ஐனநவெவைல) இலக்கங்கள் சரிபார்த்தலின் அடிப்படையில் பதிவு செய்யப்படும் என்றும், ஐஆநுஐ சரி பார்த்தல் முறைமையில் வத்தகர்களினால் இறக்குமதி செய்யப்படுகின்ற கையடக்க தொலைபேசிகள் மாத்திரமே பதிவு செய்யப்படுவதாக தெரிவித்துள்ள இலங்கை தொலைத்தொடர்புச் ஆணைக்குழு, வகை அங்கீகார செயன்முறையின் ஊடாக அங்கீகரிக்கப்பட்ட அலைபேசி வகைகளை மாத்திரமே இலங்கைக்கு இறக்குமதி செய்ய முடியும் என்றும் கூறுகின்றது. 

அத்துடன், இலங்கை தொலைத்தொடர்பு சட்டத்தின் (1996 ஆம் ஆண்டின் 27ஆம் இலக்க சட்டத்தால் திருத்தப்பட்டது) பிரிவு 21 இன் கீழ் அனுமதிப் பத்திரத்தைப் பெற்றுள்ள வர்த்தகர்கள் மாத்திரமே கையடக்கத் தொலைபேசி இறக்குமதியில் ஈடுபட முடியும்.

இதற்கு மேலதிகமாக, இலங்கை தொலைத்தொடர்புச் சட்டத்தின் 21ஆவது பிரிவின் கீழ் வழங்கப்பட்ட உரிமத்தைப் பெறுவதற்கு விற்பனையாளர்கள் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளதாகவும், சந்தையில் கையடக்க தொலைபேசிகளை விற்க விற்பனையாளர்களுக்கு அங்கீகாரம் இருப்பதை இந்த உரிமம் உறுதி செய்வதுடன், விற்பனையாளர்கள் செல்லுபடியாகும் உரிமங்களை வைத்திருப்பதை சரிபார்க்க தம்மால் வழக்கமான ஆய்வுகள் நடத்தப்படுவதாக இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு கூறுகின்றது.

இதேவேளை, முறையான உரிமம் இன்றி  தொடர்ந்து செயற்படுபவர்களுக்கு, இலங்கை தொலைத்தொடர்பு சட்டத்தின் (1996ஆம் ஆண்டின் 27ஆம் இலக்க சட்டத்தால் திருத்தப்பட்டது) பிரிவு 21(5) மற்றும் பிரிவு 65 இல் குறிப்பிடப்பட்டுள்ளபடி பொருத்தமான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள தமக்கு அதிகாரம் உள்ளதாக ஆணைக்குழு, தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்வியொன்று பதிலளித்துள்ளது.

ஜூன் 2023 நிலவரப்படி, இலங்கையில் 3,586,880 கையடக்க தொலைபேசி சாதனங்கள் உள்ளதாக ஆணைக்கு தெரிவித்துள்ள நிலையில், இந்த எண்ணிக்கையானது அண்மையில் இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதை அடுத்து, பாரியளவில் அதிகரித்திருக்கும் வாய்ப்பு காணப்படுகின்றது. 

இலங்கையின் ஏறக்குறைய 22 மில்லியன் மக்கள்தொகையுடன் ஒப்பிடும் போது, இந்த அதிகரித்த எண்ணிக்கையானது தனிநபர் ஒருவருக்கு பல சாதனங்கள்  உள்ளதை காட்டுவதுடன், நாட்டில் கையடக்க தொலைபேசி சாதன சந்தையின் தொடர்ச்சியான வளர்ச்சியைக் காட்டுகிறது. 2022 டிசெம்பரில் நாட்டின் நிலையான தொலைபேசிகளின் செறிவு நூற்றுக்கு 12 என்பதுடன், கையடக்கத் தொலைபேசிகளின் செறிவு 130 என, இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, இலங்கையில் கையடக்கத் தொலைபேசி சேவையை வழங்குவதற்கு நான்கு செயற்படுத்துநர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், இலங்கையில் மொபைல் பாவனையானது, நகர்ப்புறங்களிலிருந்து தொலைதூர கிராமங்கள் வரை பரந்துள்ளதுடன், கையடக்க தொலைபேசி சேவை வழங்குவதற்காக நாடு முழுவதும் 6451 தொலைத் தொடர்புக் கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளமை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை பயன்படுத்தியதன் ஊடாக தெரியவந்துள்ளது.

அதன்படி, மத்திய மாகாணத்தில் 634 தொலைத் தொடர்புக் கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன், கிழக்கு மாகாணத்தில்  487 தொலைத் தொடர்புக் கோபுரங்களும், வட மத்திய மாகாணத்தில் 416 தொலைத் தொடர்புக் கோபுரங்களும் காணப்படுகின்றன. அத்துடன், வட மேற்கு மாகாணத்தில் 746 தொலைத் தொடர்புக் கோபுரங்களும் வடக்கு மாகாணத்தில் 371 தொலைத் தொடர்புக் கோபுரங்களும் சப்ரகமுவ மாகாணத்தில் 409 தொலைத் தொடர்புக் கோபுரங்களும் உள்ளதுடன், தென் மாகாணத்தில் 611 தொலைத் தொடர்புக் கோபுரங்களும் ஊவா மாகாணத்தில் 328 தொலைத் தொடர்புக் கோபுரங்களும், மேல் மாகாணத்தில் 2449 தொலைத் தொடர்புக் கோபுரங்களும் உள்ளதாக இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு வழங்கிய தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

பல இலங்கையர்களுக்கு கையடக்கத் தொலைபேசிகள் என்பது தொடர்பாடல் மற்றும் இணைய அணுகலுக்கான முதன்மையான வழிமுறையாக இருப்பதால், இந்த சாதனங்கள் மலிவாகவும் அனைவருக்கும் அணுகக்கூடியதாக இருக்க வேண்டும். எனினும், டொலரின் அதிகரிப்பினை அடுத்து, இலங்கைச் சந்தையில் அனைத்து பொருட்களின் விலைகளும் தாறுமாறாக அதிகரித்துள்ள நிலையில் அலைபேசிகளின் விலை மற்றும் உதிரிப் பாகங்களின் விலைகள் கடுமையாக உயர்வடைந்துள்ளன. இதற்கான விலை நிர்ணயம் குறித்து உரிய ஒழுங்கு முறைகள் இல்லாத நிலையில், விற்பனையாளர்கள் தான்தோன்றித் தனமாக விலைகளை அதிகரித்து அதிக இலாபம் உழைத்து வருவதாக நுகர்வோர் குற்றம் சுமத்துகின்றனர்.

இதேவேளை, கொழும்பின் பல பகுதிகளில் உள்ள கையடக்க தொலைபேசி விற்பனை நிலையங்களில் இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் (வுசுஊளுடு) அனுமதி பெறப்படவில்லை என்று குறிப்பிடப்பட்டு விற்பனை செய்யப்படுவதையும், அதேநேரத்தில் கையடக்கத் தொலைபேசி சேவையை வழங்கும் பிரதான நிறுவனமொன்றின் காட்சியறையில் வுசுஊளுடு அனுமதி பெறப்பட்டுள்ளது என்று விற்பனை செய்யப்படுவதையும் மூன்று மாதங்களுக்கு முன்னரான கள விஜயத்தின் ஊடாக நேரடியாக எம்மால் அவதானிக்க முடிந்தது.

இவ்வாறானதொரு பின்புலத்தில் இது தொடர்பில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை பயன்படுத்தி இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவிடம் வினவியபோது, வுசுஊளுடு அனுமதி கட்டாயம் என பதில் கிடைத்தது. ஆனால் இந்தக் கூற்றுக்கும் சந்தையின் நிலைவரத்துக்கும் பாரிய முரண்பாடுகள் உள்ளதை காணமுடிகின்றது. 

News, Uncategorized

இரத்தினபுரி மாவட்ட ஊடவியலாளர்களுக்கான தகவலறியும் உரிமைச் சட்டம் தொடர்பான பயிற்சிப்பட்டறை  

பொறுப்புக்கூறல் மற்றும் வெளிப்படைத்தன்மைக்கான தகவல் அறியும் உரிமைக் கட்டமைப்பை வலுப்படுத்துதல்: தகவல் அறியும் உரிமைச் சட்டம் (RTI) குறித்து ஊடகவியலாளர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துதல் எனும் தொனிப்பொருளில் RTI…

By In
News, Uncategorized

லங்காதீப செய்திப்பிரிவிற்கான இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் விஜயம்

இணைந்த செயற்பாட்டு அணுகுமுறையை ஊக்குவிக்கும் வகையில், லங்காதீப பத்திரிகையின் பிரதம ஆசிரியர், உப ஆசிரியர் மற்றும் செய்திப்பிரிவு ஊடகவியலாளர்களை இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் (SLPI) RTI குழுவினர்…

By In
News, Uncategorized

சமூக பங்கேற்பு நிருவாக கருத்தியலும் இலங்கையில் உள்ளூராட்சி நிறுவனங்களும்

– சாமர சம்பத் பாராளுமன்றம், மாகாண சபைகள், உள்ளூராட்சி அமைப்புகள் போன்ற தற்போதுள்ள நிர்வாகக் கட்டமைப்புகளில், மக்களுக்கு மிக நெருக்கமான நிர்வாகக் கட்டமைப்பு உள்ளூராட்சி நிறுவனங்களேயாகும். தற்போதைய…

By In
News, Uncategorized

சபாநாயகர் பாராளுமன்ற மரபுகளை மீறியுள்ளாரா?

– சாமர சம்பத் முழுமையான ஜனநாயக ஆட்சிக் கட்டமைப்பில் சட்டமியற்றும் அதிகாரம் கொண்ட பாராளுமன்றம் ஒரு சிறப்பான இடத்தைப் பெற்றுள்ளது. பாராளுமன்றம் சுயாதீன நிறுவனமாக நடத்தப்பட வேண்டும்…

By In

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *