ஆர்ரிஐ இன் நன்மைகள்

By In

ஆர்ரிஐ இன் நன்மைகள்

பொது அதிகார சபைகளின் முடிவுகள் பிரஜைகளின் வாழ்வில் தாக்கம் செலுத்தும். எனவே பிரஜைகள் மீது தாக்கம் செலுத்தும் முடிவெடுக்கும் செயல்முறைகளில் அவர்களும் ஒரு பகுதியாக இருக்கவேண்டும். ஆர்ரிஐ இன் ஊடாக உங்களுக்காக, உங்கள் அயலவர்களுக்காக, சமூகத்திற்காக அல்லது நாட்டிற்காக தகவல்களைக் கேட்டுப்பெறுவதனால் ஆட்சியில் நீங்கள் பங்கெடுக்க முடியும். இவ்வாறு அவர்களுடன் தொடர்புபட்ட அரசின் முடிவுகளை தெரிந்துகொள்வதற்கு பிரஜைகளுக்கு உரிமையுள்ளது. அரசும் பொதுமக்கள்சார்  அலகுகளும் பொதுமக்களின் வாழ்வில் தாக்கம் செலுத்துகின்ற தனியார் நிறுவனங்களும்கூட பிரஜைகளுக்கு பதிலிறுக்க வேண்டியவர்களே. எனவே அரசியலமைப்பால் உத்தரவாப்படுத்திய தகவல் பெறுவதற்கான அடிப்படை உரிமையை அனுபவிப்பதற்கு  ஆர்ரிஐ சட்டமானது (2016 சட்ட இல.12) பிரஜைகளுக்கு உதவுகிறது. இந்தச் சட்டத்தில் பொது அதிகாரசபைகளில் இருந்து தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்கு பின்பற்றவேண்டிய நடைமுறைகளும் பொறிமுறைகளும் தெளிவாக அமைக்கப்பட்டுள்ளது.