Forum Members

By In

RTI ஊடகவியலாளர் மன்றம் 

இலங்கையில் தகவல் அறியும் உரிமைச்  சட்டம் அமுல்படுத்தப்பட்டதில் இருந்து இலங்கையில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை நடைமுறைப்படுத்தியது வரையில் அது தொடர்பில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் (SLPI) முக்கிய பங்காற்றியுள்ளது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் சுதந்திரம் குறித்து ஊடகவியலாளர் மன்றமொன்று பேணப்படுவது இத்திட்டத்தின் மற்றுமொரு சிறப்பு அம்சமாகும். 

தகவல் அறியும் உரிமைச் சட்டம் பிரஜைகளின் உரிமையாகும். இந்தச் சட்டத்தைப் பயன்படுத்த எந்தவொரு பிரஜைக்கும் உரிமை உண்டு. தொழில் ரீதியாக ஊடகவியலாளர்கள் இந்தச் சட்டத்தின் மூலம் நீண்ட தூரம் செல்ல முடியும். நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள ஊடகவியலாளர்கள் இந்தச் சட்டத்தைப் பயன்படுத்தி அறிக்கையிடும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். இந்தச் சட்டத்தைப் பயன்படுத்தும் ஊடகவியலாளர்களுக்கு உதவும் வகையில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் ஏற்பாட்டில், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ஊடகங்களில் புதிய போக்குகளை உருவாக்கும் செயலூக்கமுள்ள ஊடகவியலாளர்களின் மாதாந்த ஒன்றுகூடல் நடாத்தப்படுகின்றது.

2018 மே மாதம், முதல் கட்டமாக, தகவல் அறியும் உரிமைச் சட்டம் தொடர்பான ஊடகவியலாளர் மன்றம் ஆரம்பிக்கப்பட்டது. தகவல் அறியும் உரிமைச் சட்டம் தொடர்பான தற்போதைய நிலவரம், தகவல் கோரிக்கைகளை முன்வைக்கும் போது பெறப்பட்ட அனுபவம், பொது அதிகாரசபைகளின் பதில், பெறப்பட்ட தகவல்களை திறம்பட பயன்படுத்துதல், ஒரு ஊடகவியலாளராக பொதுமக்களுக்கு ஆற்றக்கூடிய சேவை போன்ற பல்வேறு தலைப்புகளும் தகவல் அறியும் உரிமையின் மூலம் உலகளவில் மேற்கொள்ளப்படும் முன்னேற்றகரமான நடவடிக்கைகள் குறித்தும் இந்த மன்றத்தில் விவாதிக்கப்பட்டுள்ளன. 

 

தற்போது, இலங்கையின் பல பாகங்களிலும் உள்ள பல்வேறு ஊடக நிறுவனங்களைச் சேர்ந்த சிங்கள, தமிழ் மற்றும் ஆங்கில ஊடகங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் 35 இற்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள் தகவல் அறியும் உரிமைச் சட்ட ஊடகவியலாளர் மன்றத்தில் இணைந்துள்ளனர்.

மங்களநாத் லியனாராய்ச்சி

திருகோணமலை மாவட்டத்தில் 20 வருடங்களுக்கும் மேலாக இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகவியலாளராகப் பணிபுரிந்து வரும் இவர், போர்க்கால செய்திகள் மற்றும் சுனாமி போன்ற  அனர்த்தங்கள் ஏற்பட்ட காலங்களிலும் செய்தியறிக்கையில் ஈடுபட்ட அனுபவமுள்ளவர். அவர் அருண, சிலுமின, News First, தெரண, ரூபவாஹினி மற்றும் சுயாதீன தொலைக்காட்சி ஆகிய ஊடகங்களிற்கு பங்களிப்பு செய்கின்றார். RTI ஊடகவியலாளர் மன்றத்தின் ஆரம்பகால உறுப்பினராகவும் இருந்து வருகின்றார். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைப் பயன்படுத்தி செய்தி வெளியிட்டதற்காக பல சந்தர்ப்பங்களில் அவர் பாராட்டப்பட்டார். இவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் இதுவரை 100க்கும் மேற்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளார்.

ராகுல் சமந்த ஹெட்டியாராச்சி

சுமார் 18 வருடங்களாக ஊடகத்துறையில் பணியாற்றி வரும் ராகுல் சமந்த ஹெட்டியாராச்சி தற்போது ‘அத’ பத்திரிகையுடன் இணைந்து பணியாற்றி வருகிறார். இவரிற்கு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை  பயன்படுத்துவதில் ஆர்வம் அதிகம். இலங்கையில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் அமுல்படுத்தப்பட்டதில் இருந்து 300க்கும் மேற்பட்ட செய்திகள் மற்றும் விவரணக் கட்டுரைகளை எழுதியுள்ளார். RTI  ஊடகவியலாளர் மன்றம் ஆரம்பித்ததிலிருந்து அதன் உறுப்பினராகவும் இருந்து வருகிறார். அவர் இதுவரை 3000க்கும் மேற்பட்ட RTI விண்ணப்பங்களை பல்வேறு நிறுவனங்களுக்கு சமர்ப்பித்துள்ளார். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைப் பயன்படுத்தி அறிக்கை செய்ததற்காகவும், சட்டத்தைப் பயன்படுத்துவதில் அவர் ஆற்றிய பங்கிற்காகவும் அவர் பல விருதுகளையும் அங்கீகாரங்களையும் பெற்றுள்ளார்.

சாமர சம்பத்

சுமார் 6 வருடங்களாக ஊடகவியலாளராக இருக்கும் சாமர சம்பத், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை தீவிரமாகப் பயன்படுத்தும் மற்றுமொரு ஊடகவியலாளராவார்.  இவர் ‘அத’ பத்திரிகையின் முழுநேர ஊடகவியலாளர் ஆவார். தகவல் அறியும் உரிமைச் சட்டம் அமுல்படுத்தப்பட்ட ஆரம்பத்திலேயே தகவல் அறியும் சட்டத்தைப் பயன்படுத்த ஆரம்பித்து அதன் மூலம் பல தகவல்களைப் பெற்ற ஊடகவியலாளர் என இவரை குறிப்பிடலாம். அவர் 2019 ஆம் ஆண்டில் RTI ஊடகவியலாளர் மன்றத்தில் இணைந்தார், அவர் அம் மன்றத்தில் செயற்பாட்டு  உறுப்பினராகவும் உள்ளார். அவர் இதுவரை பல்வேறு பிரிவுகளுக்கு சுமார் 100 முதல் 150 தகவல் விண்ணப்பங்களை தாக்கல் செய்துள்ளார்.

சரத் மனுல விக்ரம

சுமார் 25 வருடங்களாக ஊடகவியலாளராக கடமையாற்றும் சரத் மனுல தற்போது லங்காதீப பத்திரிகையில் இணைந்து பணியாற்றி வருகின்றார். RTI ஊடகவியலாளர் மன்றத்தின் ஆரம்பத்திலிருந்தே அதன் உறுப்பினராக இருக்கும் மற்றுமொரு ஊடகவியலாளராவார். அனுராதபுரம் மாவட்டத்தை மையமாகக் கொண்ட பிரச்சினைகளுக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை அதிகம் பயன்படுத்திய ஊடகவியலாளராவார். தகவல் அறியும் உரிமைச் சட்டம் பல வேலைகளை செய்ய அனுமதித்துள்ளதாக அவர் நம்புகிறார். இன்றுவரை, 100 க்கும் மேற்பட்ட தகவல் கோரிக்கைகளை சமர்ப்பித்துள்ளார்.

குசும்சிறி விஜயவர்த்தன

குசும்சிறி `தேசய` பத்திரிகையின் துணை ஆசிரியராகவும் எழுத்தாளராகவும் பணிபுரிவதோடு 12 வருடங்களுக்கும் மேலாக ஊடகவியலாளராகவும் பணிபுரிந்து வருகின்றார். RTI ஊடகவியலாளர் மன்றம் ஆரம்பித்ததிலிருந்து அதன் உறுப்பினராகவும் இருந்து வருகின்றார். அவர் பல்வேறு அமைப்புகளிற்கும் தகவல் கேட்டு பல தகவல் கோரிக்கைகளை அனுப்பியுள்ளார்.

கருப்பையா பிரசன்னகுமார்

நுவரேலியா மாவட்டத்தினைச் சேர்ந்த கருப்பையா பிரசன்னகுமார் தினக்குரல் பத்திரிகையில் கடந்த 8 வருடங்களாக பணிபுரிந்து வருகின்றார். இதுவரையில் 500 தகவலறியும் விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளார். அத்துடன் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தினால் நடாத்தப்படும் ஊடகவியலாளர்களுக்கான விருது வழங்கலில் தகவலறியும் உரிமைச் சட்டத்தினை பயன்படுத்தி எழுதப்பட்ட விவரணக் கட்டுரைகளுக்கான விருதுகளில் பிரசன்னா விருதினை பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. இவர் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் RTI ஊடகவியலாளர் மன்றத்தில் 2021 ஆம் ஆண்டு தொடக்கம் இணைந்துள்ளார்.

பா. நிரோஸ்

நுவரேலியா மாவட்டத்தினைச் சேர்ந்த பா. நிரோஸ் தமிழ்மிரர் பத்திரிகையில் ஊடகவியலாளராக பணிபுரிந்து வருகின்றார். இவர் ஊடகத்துறையில் 5 வருட அனுபவத்தினை கொண்டவர். தகவலறியும் உரிமைச் சட்டத்தினை பயன்படுத்தி இவரினால் எழுதப்பட்ட கட்டுரைகளில் பிரதானமாக இறுதி யுத்தகாலத்தில் இராணுவத்திடம் சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பான தகவல்கள், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபாலவின் ஹெலிகொப்டர் பயணங்கள் தொடர்பான தகவல்கள், கொட்டகலையில் விமானநிலையம் தொடர்பான தகவல்கள் போன்றவை முக்கியமானவை. இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் RTI ஊடகவியலாளர் மன்றத்தில் 2020 ஆம் தொடக்கம் உறுப்பினராக இருக்கின்றார்.

ம. சுசிகலா

கொழும்பினைச் சேர்ந்த ம. சுசிகலா ஊடகத்துறையில் 4 வருட அனுபவத்தினை கொண்டவர். சுசிகலா தற்போது தமிழன் பத்திரிகையின் உதவி ஆசியராக கடந்த ஒரு வருட காலமாக பணிபுரிகின்றார். இதற்கு முன்னர் சுடர்ஒளி பத்திரிகையில் 3 வருடங்களாக பணிபுரிந்த அனுபவத்தினையும் கொண்டுள்ளார். இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் RTI ஊடகவியலாளர் மன்றத்தில் 2021 செம்டெம்பர் மாதம் தொடக்கம் உறுப்பினராக இணைந்துள்ளார்.

ஷபீர் முகமட்

கேகாலை மாவட்டத்தினைச் சேர்ந்த ஷபீர் முகமட் தமிழன் பத்திரிகையில் சுயாதீன ஊடகவியலாளராக பணிபுரிகின்றார். 2019 ஆம் ஆண்டு முதல் பல ஊடக நிறுவனங்களில் சுயாதீன ஊடகவியலாளராக பணியாற்றிய அனுபவம் இவருக்கு உண்டு. இவரின் ஊடகப் பயணம் நவமணி பத்திரிகையிலிருந்து ஆரம்பமாகியது. இதுவரையில் 50 RTI விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளார்.

தனுஜா நாகராஜா

தனுஜா நாகராஜா வீரகேசரி பத்திரிகையில் முழுநேர ஊடகவியலாளராக 2018 ஆம் ஆண்டு தொடக்கம் பணியாற்றி வருகின்றார். வீரகேசரி பத்திரிகையின் செய்திப்பிரிவில் பணியாற்றும் இவர் அரசியல், பொருளாதாரம் மற்றும் சமூகம் சார்ந்த விடயங்களில் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் RTI ஊடகவியலாளர் மன்றத்தில் 2021 ஜூன் இணைந்து கொண்டார்.

பாத்திமா அப்ரா

களுத்துறை மாவட்டத்தினைச் சேர்ந்த பாத்திமா அப்ரா கடந்த இரண்டு வருடங்களாக ஊடகவியலாளராக பணிபுரிந்து வருகின்றார். இவர் தற்போது Newsnow நிறுவனத்தில் பணிபுரிகின்றார். ஜூன் 30 2021 தொடக்கம் RTI ஊடகவியலாளர் மன்றத்தில் இணைந்துள்ளார். இவர் இம் மன்றத்திற்கு புதியவர்.

பிரசாத் பூர்ணமால் ஜெயமன்ன

சுமார் 25 வருடங்களாக ஊடகத்துறையில் பணிபுரியும் பிரசாத் பூர்ணமால் சிலாபத்தில் தனது பணியை ஆரம்பித்தார். 1997 இல் லேக் ஹவுஸ் மற்றும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் இணைந்து, 2000 ஆம் ஆண்டில் பிபிசியில் நிருபராக இணைந்தார். அவர் 2001 ஆம் ஆண்டு முதல் சிரச தொலைக்காட்சியில் பணிபுரிந்து வருகிறார். 2018 ஆம் ஆண்டளவில் RTI ஊடகவியலாளர் மன்றத்தில் இணைந்தார். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைப் பயன்படுத்துவதில் முன்னணியில் இருக்கும் ஒரு ஊடகவியலாளர் என்று இவரை கூறலாம். அவர் பல புலனாய்வுத் தகவல் இற்றைப்படுத்தலுக்காக தகவலறியும் உரிமைச் சட்டத்தைப் பயன்படுத்துகிறார். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை சமூகத்துக்குப் பயனுள்ள வகையில் பயன்படுத்தும் ஊடகவியலாளராவார்.

குசும்சிறி விஜயவர்த்தன

குசும்சிறி `தேசய` பத்திரிகையின் துணை ஆசிரியராகவும் எழுத்தாளராகவும் பணிபுரிவதோடு 12 வருடங்களுக்கும் மேலாக ஊடகவியலாளராகவும் பணிபுரிந்து வருகின்றார். RTI ஊடகவியலாளர் மன்றம் ஆரம்பித்ததிலிருந்து அதன் உறுப்பினராகவும் இருந்து வருகின்றார். அவர் பல்வேறு அமைப்புகளிற்கும் தகவல் கேட்டு பல தகவல் கோரிக்கைகளை அனுப்பியுள்ளார்.