Uncategorized

தகவலறியும் உரிமை இது யாருடைய உரிமை?

By In

RTI என்றால் Right To Information. அதாவது தகவலறியும் உரிமை என்று தமிழில் கூறுவார்கள். 2016 ஆம் ஆண்டின் ஜுன் 23 ஆம் திகதி இலங்கை நாடாளுமன்றம் தகவலறியும் உரிமைச் சட்டத்தினை நிறைவேற்றியது.  

பொது அதிகாரத்தளங்களின் சில தீர்மானங்கள் பொதுமக்களாகிய எங்களில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். ஆகவே எங்களில் தாக்கம் செலுத்தும் விடயங்களை தீர்மானிக்கும் போது நாங்களும் அதில் ஒரு பகுதியாக இருக்க வேண்டும். தகவலறியும் உரிமையூடாக எங்களுக்காகவோ, அயலவருக்காகவோ அல்லது எமது சமூகத்திற்காகவோ நாம் தகவல்களை கோரலாம். தம்முடன் தொடர்புபட்ட தகவல்களை அரசாங்கத்திடமிருந்து பெற்றுக் கொள்வதற்கான உரிமை ஒவ்வொரு பிரஜைக்கும் உண்டு. 2016 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க தகவலறியும் உரிமைச் சட்டம் பிரஜைகளுக்கு அரசியலமைப்பால் உத்தரவாதமளிக்கப்பட்ட தகவல் தொடர்பான அடிப்படை உரிமையைப் பயன்படுத்த உதவுகின்றது. இச் சட்டம், பொது அதிகாரத்தளங்களிலிருந்து தகவல் பெறுவதற்காக பின்பற்ற வேண்டிய செயல்முறைகள் மற்றும் பொறிமுறைகள் பற்றியும் கூறுகின்றது

அரசாங்கம், பொது அமைப்புகள் மட்டுமல்ல அந் நாட்டு மக்களின் பொது வாழ்வில் தாக்கம் செலுத்தும் தனியார் நிறுவனங்களும் கூட பிரஜைகளுக்கு பதிலளிக்க வேண்டியவர்களாவர். இவர்களிடமிருந்து பகுதியளவிலோ அல்லது முழுமையாகவோ நாம் தகவல்களை பெற்றுக் கொள்ளலாம். அதிகபட்ச வெளிப்படுத்துதல் கோட்பாடானது இயன்றளவு சாத்தியமான தகவல்களை வெளிப்படுத்துமாறு அரசாங்கத்தினை கோருகின்றது. அதாவது அவர்களிடமுள்ள உத்தியோகபூர்வத் தகவல்களை பொதுமக்களுக்கு வழங்கவேண்டும். தன்னிச்சையாக வெளிப்படுத்துதல் கோட்பாட்டிற்கு அமைய தகவலை பெறுவதற்காக பொதுமக்கள் கட்டணம் எதனையும் செலுத்தத் தேவையில்லை என்பதனை கூறுகின்றது. மேலும் வெளியிடுவதற்கான கடமையின் கோட்பாடானது பொது அதிகாரத்தளங்கள் தகவல்களுக்கான கோரிக்கைகளுக்கு வெறுமனே பதிலளிக்காது பொதுமக்களிற்கு தகவல்களை வழங்க முன்வர வேண்டும் என்கின்றது.   

சுகாதாரம், கல்வி, சூழல் போன்ற பொதுமக்களை நேரடியாகப் பாதிக்கும் விடயங்கள் தொடர்பாக நாம் கோரிக்கை விடுக்கலாம்.

முக்கியமாக நாம் எல்லா தகவல்களையும் பொது அதிகாரத்தளங்களிடமிருந்து பெற்றுக் கொள்ள முடியாது. அதற்கும் சில வரையறைகள் காணப்படுகின்றன. ஆனால் நாம் அவ்வாறான தகவல்களை கோரும் இடத்து அதற்கு பதிலளிக்க முடியாதாயின் தகவல் மறுக்கப்பட்டமைக்கான காரணத்தை நியாயப்படுத்தும் பொறுப்பு அரசாங்கத்திற்குரியது. உதாரணமாக நாட்டின் பாதுகாப்பு அல்லது பொருளாதாரம் தொடர்பாக தகவல் கோரிக்கையொன்றினை தாக்கல் செய்தால், அது நாட்டின் பாதுகாப்புக் கருதி சிலவேளைகளில் அக் கோரிக்கை மறுக்கப்படலாம். இந்தச் சட்டத்தின் கீழ் தகவல்கள் கிடைப்பதற்கான கதவைத் திறக்கக்கூடிய ஒரு சமூக நலக் காரணி (Public interest) உள்ளது என்பதனை கருத்தில் கொள்ள வேண்டும்

ஒரு நாட்டின் பிரஜையின் அடிப்படை உரிமையாகிய தகவலறிவதற்கான உரிமையினை அனுபவிக்க எமக்கு கடந்த அரசாங்கம் வழி ஏற்படுத்தித் தந்துள்ளது. அதனை முறையாக பயன்படுத்தி ஒரு தகவலறிந்த சமூகமாக நாமும் மாறுவோம்

 

தகவலறியும் உரிமை எங்கள் உரிமை 

 

மூலம்: www.slpi.lk

            தகவலறியும் உரிமைச் சட்டத்திற்கான பிரசைகள் கையேடு  

News, Uncategorized

இரத்தினபுரி மாவட்ட ஊடவியலாளர்களுக்கான தகவலறியும் உரிமைச் சட்டம் தொடர்பான பயிற்சிப்பட்டறை  

பொறுப்புக்கூறல் மற்றும் வெளிப்படைத்தன்மைக்கான தகவல் அறியும் உரிமைக் கட்டமைப்பை வலுப்படுத்துதல்: தகவல் அறியும் உரிமைச் சட்டம் (RTI) குறித்து ஊடகவியலாளர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துதல் எனும் தொனிப்பொருளில் RTI…

By In
Uncategorized

20 மில்லியன் மக்களுக்கு 40 மில்லியன் கையடக்கத் தொலைபேசி சாதனங்கள்!

ஜே.ஏ.ஜோர்ஜ் உலகில் தொலைத் தொடர்பு துறை நாளாந்தம் வளர்ச்சியடைந்து வரும் நிலையில்,  அதன் வேகத்திற்கேற்ப இணையம் மற்றும் கையடக்க தொலைபேசி பாவனை அதிகரித்து வருவதை அண்மைய தரவுகள்…

By In
News, Uncategorized

லங்காதீப செய்திப்பிரிவிற்கான இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் விஜயம்

இணைந்த செயற்பாட்டு அணுகுமுறையை ஊக்குவிக்கும் வகையில், லங்காதீப பத்திரிகையின் பிரதம ஆசிரியர், உப ஆசிரியர் மற்றும் செய்திப்பிரிவு ஊடகவியலாளர்களை இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் (SLPI) RTI குழுவினர்…

By In
News, Uncategorized

சமூக பங்கேற்பு நிருவாக கருத்தியலும் இலங்கையில் உள்ளூராட்சி நிறுவனங்களும்

– சாமர சம்பத் பாராளுமன்றம், மாகாண சபைகள், உள்ளூராட்சி அமைப்புகள் போன்ற தற்போதுள்ள நிர்வாகக் கட்டமைப்புகளில், மக்களுக்கு மிக நெருக்கமான நிர்வாகக் கட்டமைப்பு உள்ளூராட்சி நிறுவனங்களேயாகும். தற்போதைய…

By In

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *