பொறுப்புக்கூறல் மற்றும் வெளிப்படைத்தன்மைக்கான தகவல் அறியும் உரிமைக் கட்டமைப்பை வலுப்படுத்துதல்: தகவல் அறியும் உரிமைச் சட்டம் (RTI) குறித்து ஊடகவியலாளர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துதல் எனும் தொனிப்பொருளில் RTI குறித்த விழிப்புணர்வு பயிற்சி கடந்த மார்ச் மாதம் 26 ஆம் திகதி இரத்தினபுரியிலுள்ள கிராண்ட் சில்வர் ரே எனும் ஹோட்டலில் இப் பயிற்சி நடைபெற்றது.
இப் பயிற்சியில் இரத்தினபுரி மாவட்டத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் மற்றும் சிவில் சமூக அமைப்பினர் ஆகியோர் கலந்து கொண்டனர். இவர்களுக்கு தகவலறியும் உரிமைச் சட்டம் தொடர்பிலான அடிப்படை விடயங்கள், தகவல் கோரிக்கை நடைமுறைகள் போன்ற விடயங்கள் பயிற்றுவிக்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் தகவல் கோரிக்கையொன்றை எவ்வாறு சமர்ப்பித்தல் தகவல் கிடைக்காத சந்தர்ப்பங்களில் அல்லது கிடைத்த பதில்களில் திருப்தியடையாத சந்தர்ப்பங்களில் எவ்வாறு மேன்முறையீடு செய்தல் போன்றவையும் செயன்முறைகளாக அவர்களுக்கு பயிற்றுவிக்கப்பட்டது. இப் பயிற்சிகளில் பங்குபற்றுனர்கள் ஆர்வத்துடன் பங்குபற்றியிருந்தனர்.
அதனை தொடர்ந்து தகவல் கிடைக்கப்பெற்ற பின்னர் அதனை கொண்டு எவ்வாறு செய்திக் கட்டுரை ஒன்றை எழுதுவது குறித்தும் ஊடகவியலாளர்களுக்கு பயிற்றுவிக்கப்பட்டது.
இப் பயிற்சிப்பட்டறை இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தினால் ஒழுங்கமைக்கப்பட்டது.
Recent Comments