Uncategorized

அனுராதபுரத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் மூலோபாய நகர அபிவிருத்தி திட்டத்தின் முன்னேற்றம் குறித்து வட மத்திய மாகாண தலைமைச் செயலகம் திருப்தி அடையவில்லை.

By In

இலங்கையில் 30 ஆண்டுகால யுத்தம் முடிவடைந்ததிலிருந்து கடந்த 11 ஆண்டுகளில், நாட்டை விரைவாக அபிவிருத்தி செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. மூன்றாம் உலகில் வளர்ந்து வரும் நாடான எங்களைப் போன்ற நாடுகளுக்கு அத்தகைய ஒரு பிரம்மாண்டமான அபிவிருத்தி செயல்முறையை முன்னெடுக்கக்கூடிய பொருளாதார வலிமை இல்லை. அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக வல்லரசுகளிடமிருந்து மானியங்கள் மற்றும் கடன்களை பெறுவது பொதுவான நடைமுறையாகும். 

இது French  Agency for Development (AFD) கடன் உதவியின் கீழ் அனுராதபுரத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் மூலோபாய நகர அபிவிருத்தி திட்டம் இதற்கு ஒரு எடுத்துக்காட்டாகும்.  இது சிறந்த நகரங்களுக்கிடையிலான இணைப்பு, போட்டி மற்றும் சூழல் நட்பு நிலைமைகள் போன்றவற்றுடன்  நாட்டின் இரண்டாம் நிலை நகரங்களை நன்கு அபிவிருத்தியடைந்த நகரமாக மாற்றும் நோக்கத்துடன் நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் வீடமைப்பு அமைச்சின் கீழ் செயல்படுத்தப்பட்ட ஒரு திட்டமாகும். 

இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் ஜூலை 2020 இல் ஏற்பாடு செய்த RTI ஊடகவியலாளர்கள் மன்றத்தில் இந்த அபிவிருத்தி திட்டத்தின் தற்போதைய நிலைமை தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. அதன்படி, செப்டம்பர் 15, 2020 அன்று, வட மத்திய மாகாண தலைமைச் செயலகத்தில் அபிவிருத்தி குறித்த தகவல்களைக் கோரி தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவலறியும் விண்ணப்பமொன்று சமர்ப்பிக்கப்பட்டது. 

அதன்படி, இந்த அபிவிருத்தி திட்டத்தை செயல்படுத்துவதில் வட மத்திய மாகாண சபைக்கு ஒதுக்கப்பட்டுள்ள பொறுப்புகள் மற்றும் வகிபங்கு என்ன என்ற எங்கள் முதல் கேள்விக்கு அளிக்கப்பட்ட பதில் பின்வருமாறு, 

“வட மத்திய மாகாண சபையின் அதிகாரிகள் உட்பட திட்ட பிராந்திய அபிவிருத்தி குழு, திட்ட நடவடிக்கைகளுக்காக பிற நிறுவனங்களுக்கு தேவையான உதவிகளை ஒருங்கிணைக்கும் பணியை ஒப்படைத்துள்ளது, இதற்காக மாகாண சபை நிறுவனங்களுக்கு பின்வரும் பொறுப்புகள் காணப்படுகின்றன.

1. நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் வீடமைப்பு மற்றும் பொது வசதிகள் அமைச்சின் திட்ட நடவடிக்கைகளை ஒருங்கிணைத்தல்

2. அடையாளம் காணப்பட்ட திட்டங்களை செயல்படுத்த குழுவின் ஒப்புதலை வழங்குவதற்கு தேவையான வழிகாட்டுதல்களை வழங்குதல்

3. திட்டத்தின் முன்னேற்றத்தை அறிக்கையிடல்” 

அதன்படி,  பின்வரும் மாகாண சபைகள் இந்த நடவடிக்கைகளை வெற்றிகரமாக செயல்படுத்தியுள்ளன. 

1. தலைமைச் செயலகம், வட மத்திய மாகாணம்

2. அனுராதபுர மாநகர சபை

3. வீதிப்பயணிப் போக்குவரத்து அதிகாரசபை 

4. மாகாண வீதி அபிவிருத்தி அதிகாரசபை, வட மத்திய மாகாணம்

5. மாகாண நில ஆணையாளர் திணைக்களம், வட மத்திய மாகாணம்

6. மாகாண நீர்ப்பாசனத் திணைக்களம் 

இந்த நிறுவனங்களில்,  

1. தலைமை செயலாளர் / துணை தலைமை செயலாளர் (திட்டமிடல்) / துணை தலைமை செயலாளர் (பொறியியல்) வட மத்திய மாகாணம்

2. நகர சபை ஆணையாளர், மாநகரசபை அனுராதபுரம்

3. பொது முகாமையாளர், வீதிப்பயணிப் போக்குவரத்து அதிகாரசபை, வட மத்திய மாகாணம்

4. பொது முகாமையாளர், மாகாண வீதி அபிவிருத்தி அதிகாரசபை , வட மத்திய மாகாணம்

5. ஆணையாளர், மாகாண நில ஆணையாளர் திணைக்களம், வட மத்திய மாகாணம்

6. இயக்குநர், மாகாண நீர்ப்பாசனத் திணைக்களம் 

மேற்கண்ட நிறுவனங்களிலுள்ள அதிகாரிகள் கடமைகளுக்கு பொறுப்பானவர்கள். 

பூர்வாங்க ஒப்பந்தத்தின்படி, 2021 நவம்பர் 30 ஆம் தேதி நிறைவடைய திட்டமிடப்பட்டுள்ள இந்த திட்டத்தின் முன்னேற்றம் குறித்த எங்கள் விசாரணையை திருப்திப்படுத்த முடியவில்லை காரணம், வட மத்திய மாகாண தலைமைச் செயலாளர் அலுவலகம் இரண்டு சந்தர்ப்பங்களில் தகவல்களை வழங்கியுள்ளது . இது தொடர்பான இரண்டாம் பகுதியை முன்வைப்போம் என்று நாம் நம்புகிறோம்.

Uncategorized

மக்களின் வரிப்பணமும் நாடாளுமன்ற சாப்பாடும்

க.பிரசன்னா பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் தொடர்பில் தொடர்ந்தும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. உயர் சலுகைகளை அனுபவிக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களில் பலர் மக்களுடைய நலன்கள் தொடர்பில் அக்கறை கொள்வதில்லை…

By In
Uncategorized

ஒப்பந்தக்காரரின் அசமந்த செயற்பாட்டினால் ஆறு மாடி கட்டிடத்தினை இழந்தது அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை

றிப்தி அலி கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவிற்கான ஆறு மாடி கட்டிடத்தின் நிர்மாண பணிகள் உரிய காலத்தினுள் ஒப்பந்தக்காரரினால் போதுமானளவில்…

By In
Uncategorized

இலங்கையில் தகவலுரிமை நடப்பாட்சியின் நான்கு வருட நிறைவை முன்னிட்டு இலங்கை தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழுவினால் விடுக்கப்படுகின்ற அறிக்கை

பெப்ரவரி 19, 2021 2021 பெப்ரவரி 3 ஆம் திகதியுடன் இலங்கையின் தகவலுக்கான உரிமைச் சட்டம் செயற்பட ஆரம்பித்து நான்கு வருடங்கள் நிறைவடைவதை முன்னிட்டு, தகவலறியும் உரிமைக்கான…

By In
Uncategorized

சொத்துக்களைக் கோரிய எம்.பி.க்களின் பெயர்களை வெளியிடுமாறு தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழு நாடாளுமன்றத்திற்கு உத்தரவிட்டது.

சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் குறித்த அறிவிப்புகளை சமர்ப்பித்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர் பட்டியலை வெளியிடுமாறு இலங்கை நாடாளுமன்றத்திற்கு தகவல் அறியும் உரிமைக்கான ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளது.   தகவல் சுதந்திரச்…

By In

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *