Uncategorized

RTI இல் பகிரங்க அதிகாரசபை என்றால் என்ன? அவற்றின் கடமைகள் என்ன?

By In

தகவல் அறியும் உரிமை என்பது மனித உரிமைகளில் ஒன்றாக கருதப்படுகிறது. இலங்கையின் அரசியலமைப்பின் பிரிவு 14 (A) மக்களின் இந்த உரிமையையும் குறிக்கிறது. மேலும், 2016 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க தகவல் அறியும் உரிமைச் சட்டம், தகவல் அறிவதற்கான உரிமையை வலியுறுத்தி  அமுல்படுத்துவதற்காக இயற்றப்பட்டது. மக்கள் தங்கள் தகவல் அறியும் உரிமையைப் பயன்படுத்துவதற்கு இந்தச் சட்டம் மிகவும் பயனுள்ள வழியைக் காண்பித்துள்ளது என்பதை சுட்டிக்காட்டலாம். 

 

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் ‘வெளியீட்டின்’ முக்கிய நோக்கம், பகிரங்க அதிகாரசபைகளில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறல் கலாச்சாரத்தை கட்டமைத்து வளர்ப்பதன் மூலம் ஜனநாயகத்தை ஒரு அர்த்தமுள்ள முறையில் பயன்படுத்துவதாகும். 

 

“பகிரங்க அதிகாரசபை” என்றால் என்ன?

 

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் எண் 43 இன் கீழ் கொடுக்கப்பட்டுள்ள விளக்கத்தின்படி; 

  • அரசாங்கத்தின் ஒரு அமைச்சு 
  • பந்தி (உ) வில் குறித்துரைக்கப்பட்ட அந்தளவிற்கு தவிர 2007 ஆம் ஆண்டின் 7 ஆம் இலக்க, கம்பெனிகள் சட்டம் தவிர்ந்த அரசியலமைப்பினால் அல்லது அரசியலமைப்பின்கீழ், ஏதேனும் எழுத்திலான சட்டத்தினால் அல்லது சட்டத்தின்கீழ் அல்லது மாகாண சபையொன்றின் நியதிச்சட்டத்தினால் அல்லது அதன்கீழ் உருவாக்கப்பட்ட அல்லது தாபிக்கப்பட்ட ஏதேனும் குழு அல்லது பதவி;
  • ஓர் அரசாங்கத் திணைக்களம்; 
  • ஒரு பகிரங்கக் கூட்டுத்தாபனம்; 
  • எந்தக் கம்பெனியில், அரசு அல்லது ஒரு பகிரங்கக் கூட்டுத்தாபனம் அல்லது அரசும் பகிரங்கக் கூட்டுத்தாபனமும் பங்குகளின் இருபத்தைந்து சதவீதத்தை அல்லது அதற்கு மேற்பட்டவற்றை ஒன்றாக வைத்திருக்கின்றனவோ அல்லது வேறுவகையில் கட்டுப்படுத்துகின்ற அக்கறையைக் கொண்டுள்ளனவோ, 2007 ஆம் ஆண்டின் 7ஆம் இலக்க, கம்பெனிகள் சட்டத்தின்கீழ் கூட்டிணைக்கப்பட்ட அந்தக் கம்பெனியொன்று; 
  • ஓர் உள்ளூரதிகாரசபை; 
  • அரசாங்கத்திடமிருந்து அல்லது அதன் முகவராண்மையிடமிருந்து அல்லது உள்ளூர்சபையொன்றிடமிருந்து ஒப்பந்தம், பங்காண்மை உடன்படிக்கை அல்லது உரிமமொன்றின்கீழ் நியதிச்சட்ட அல்லது பகிரங்க பணி அல்லது ஒரு நியதிச்சட்ட அல்லது பகிரங்கச் சேவை நிறைவேற்றுகின்ற தனியாள் அமைப்பு அல்லது ஒழுங்கமைப்பொன்று, ஆனால் நியதிச்சட்ட அல்லது பகிரங்க பணி நியதிச்சட்ட அல்லது பகிரங்க சேவையினால் உள்ளீர்க்கப்படும் தொழிற்பாடுகளின் அந்தளவிற்கு மட்டும்; 
  • ஒரு மாகாணசபையால் தாபிக்கப்பட்ட அல்லது உருவாக்கப்பட்ட ஏதேனும் திணைக்களம் அல்லது வேறு அதிகாரசபை அல்லது நிறுவனம்; 
  • நாடப்படும் தகவல் பொதுமக்களுக்கு அளிக்கப்படும் சேவையுடன் தொடர்புறும் அந்தளவிற்கு பொதுமக்களுக்கு சேவையை வழங்குகின்ற அரசாங்கத்தினால் அல்லது ஏதேனும் திணைக்களத்தினால் பொருளவில் நிதியளிக்கப்படுகின்ற அரசசார்பற்ற ஒழுங்கமைப்புகள் அல்லது மாகாணசபையொன்றினால் அல்லது வெளிநாட்டு அரசாங்கம் ஒன்றினால் அல்லது சர்வதேச ஒழுங்கமைப்பினால் தாபிக்கப்பட்ட அல்லது உருவாக்கப்பட்ட வேறு அதிகாரசபை; 
  • ஏதேனும் எழுத்திலான சட்டத்தின்கீழ் தாபிக்கப்படுகின்ற, அங்கீகரிக்கப்படுகின்ற அல்லது உரிமமளிக்கப்படுகின்ற அல்லது அரசினால் அல்லது ஒரு பகிரங்கக் கூட்டுத்தாபனத்தினால் அல்லது ஒரு மாகாணசபையின் நியதிச்சட்டத்தினால் தாபிக்கப்பட்ட அல்லது உருவாக்கப்பட்ட ஏதேனும் நியதிச்சட்டமுறையான குழுவினால் முழுமையாக அல்லது பகுதியளவில் நிதியளிக்கப்பட்ட தனியார் பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்தொழில் நிறுவனங்கள் உள்ளடங்கலாக  உயர்கல்வி நிறுவனங்கள் ; 
  • ஏதேனும் எழுத்திலான சட்டத்தின்கீழ் தாபிக்கப்படுகின்ற, அல்லது உரிமமளிக்கப்படுகின்ற அல்லது அரசினால் அத்துடன் அல்லது ஒரு பகிரங்கக் கூட்டுத்தாபனத்தினால் அல்லது ஒரு மாகாணசபையின் நியதிச்சட்டத்தினால் தாபிக்கப்பட்ட அல்லது உருவாக்கப்பட்ட ஏதேனும் நியதிச்சட்டமுறையான குழுவினால் முழுமையாக அல்லது அல்லது பகுதியளவில் நிதியளிக்கப்பட்ட வாழ்க்கைத்தொழில் அல்லது தொழில்நுட்பக்கல்வியை வழங்குகின்ற நிறுவனங்கள் உள்ளடங்கலாக தனியார் கல்வி நிறுவனங்கள்; 
  • நீதி நிருவாகத்திற்கென உருவாக்கப்பட்ட அல்லது தாபிக்கப்பட்ட எல்லா நீதிமன்றங்கள், நியாயசபைகள் மற்றும் நிறுவனங்கள்.

 

அதன்படி, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் 5 வது பிரிவின் விதிகளின் படி, ஒவ்வொரு பிரஜையும் மேற்கூறிய பகிரங்க அதிகாரசபைகளின் வசமுள்ள, நம்பிக்கை அல்லது கட்டுப்பாட்டில் உள்ள தகவல்களை அணுக உரிமை உண்டு. 

 

இந்த பகிரங்க அதிகாரசபைகளின் கடமைகள் சட்டத்தின் 7 வது பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. பகிரங்க அதிகாரசபைகள் தங்கள் பதிவுகளை ஒழுங்குமுறையாக பராமரிக்க வேண்டும், குறிப்பாக பொதுமக்கள் கோரிய தகவல்களை வழங்க வேண்டிய ‘கடமை’ இருக்கின்றது என்று அது வலியுறுத்துகிறது. 

 

மேலதிகமாக, பகிரங்க அதிகாரசபைகளின் வெளிப்படைத்தன்மையின் சரியான செயல்பாட்டை மதிப்பிடுவதற்கு ஆண்டறிக்கையை தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழுவிற்கு சமர்ப்பிக்க வேண்டும். அதன்படி, கிடைக்கப்பெற்ற கோரிக்கைகளின் எண்ணிக்கை, குறிப்பிட்ட வருடத்தில் வசூலிக்கப்பட்ட கட்டணம் எவ்வளவு , கிடைக்கப்பெற்ற மேன்முறையீடுகள் எண்ணிக்கை, ஆணைக்குழுவின் உத்தரவின்படி எத்தனை முறை தகவல்கள் வழங்கப்பட்டுள்ளன மற்றும் ஏதேனும் ஆலோசனைகள் இருந்தால் தற்போதுள்ள தகவல் பெறும் முறையின் செயல்திறனை மேம்படுத்துதல்; அத்தகைய பரிந்துரைகள் அந்த அறிக்கையில் சேர்க்கப்பட வேண்டும். பகிரங்க  அதிகாரசபைகள் தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழுவின் வெளிப்படைத்தன்மைக்கு பொறுப்பாக வேண்டும்.

News, Uncategorized

இரத்தினபுரி மாவட்ட ஊடவியலாளர்களுக்கான தகவலறியும் உரிமைச் சட்டம் தொடர்பான பயிற்சிப்பட்டறை  

பொறுப்புக்கூறல் மற்றும் வெளிப்படைத்தன்மைக்கான தகவல் அறியும் உரிமைக் கட்டமைப்பை வலுப்படுத்துதல்: தகவல் அறியும் உரிமைச் சட்டம் (RTI) குறித்து ஊடகவியலாளர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துதல் எனும் தொனிப்பொருளில் RTI…

By In
Uncategorized

20 மில்லியன் மக்களுக்கு 40 மில்லியன் கையடக்கத் தொலைபேசி சாதனங்கள்!

ஜே.ஏ.ஜோர்ஜ் உலகில் தொலைத் தொடர்பு துறை நாளாந்தம் வளர்ச்சியடைந்து வரும் நிலையில்,  அதன் வேகத்திற்கேற்ப இணையம் மற்றும் கையடக்க தொலைபேசி பாவனை அதிகரித்து வருவதை அண்மைய தரவுகள்…

By In
News, Uncategorized

லங்காதீப செய்திப்பிரிவிற்கான இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் விஜயம்

இணைந்த செயற்பாட்டு அணுகுமுறையை ஊக்குவிக்கும் வகையில், லங்காதீப பத்திரிகையின் பிரதம ஆசிரியர், உப ஆசிரியர் மற்றும் செய்திப்பிரிவு ஊடகவியலாளர்களை இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் (SLPI) RTI குழுவினர்…

By In
News, Uncategorized

சமூக பங்கேற்பு நிருவாக கருத்தியலும் இலங்கையில் உள்ளூராட்சி நிறுவனங்களும்

– சாமர சம்பத் பாராளுமன்றம், மாகாண சபைகள், உள்ளூராட்சி அமைப்புகள் போன்ற தற்போதுள்ள நிர்வாகக் கட்டமைப்புகளில், மக்களுக்கு மிக நெருக்கமான நிர்வாகக் கட்டமைப்பு உள்ளூராட்சி நிறுவனங்களேயாகும். தற்போதைய…

By In

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *