Learn About - Sri Lanka Rights to Information Act

RTI: தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் எமது உரிமையைப் பாதுகாப்போம்! பயிற்சிப்பட்டறை – களுத்துறை

By In

இலங்கையில் தகவல் அறியும் உரிமை நடைமுறைப்படுத்தப்பட்டு ஆறு வருடங்கள் பூர்த்தியடைந்ததை முன்னிட்டு அவுஸ்ரேலிய உயர்ஸ்தானிகராலயத்தின் (Direct Aid Program – DAP) நேரடி உதவித் திட்டத்துடன் இணைந்து இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் (SLPI) “RTI: தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் எமது உரிமையைப் பாதுகாப்போம்” என்ற தொடர் பயிற்சியின் ஐந்தாவது பயிற்சி, பிப்ரவரி 3 ஆம் திகதி  களுத்துறை சர்வோதயாவில் நடைபெற்றது. இதில் தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழுவின் ஆணையாளர்களான சட்டத்தரணி கிஷாலி பின்டோ ஜயவர்தன, சட்டத்தரணி ஜகத் லியன ஆராச்சி மற்றும் முகமட் நஹியா ஆகியோர் கலந்துகொண்டனர். 

இப் பயிற்சி ஊடகவியலாளர்கள் மற்றும் சிவில் சமூக அமைப்பினருக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அடிப்படை உரிமைகளில் ஒன்றான தகவலறியும் உரிமையை பிரஜைகள் அனுபவிப்பதற்காக தகவலறியும் உரிமைச் சட்டத்தை வினைத்திறனுடன் எவ்வாறு பயன்படுத்தலாம் என்றும் கலந்துரையாடப்பட்டது. 

இப் பயிற்சியின் ஆரம்பத்தில் சட்டத்தரணி ஜகத் லியன ஆராச்சி அவர்கள் RTI தொடர்பான அடிப்படை விடயங்கள் தொடர்பில் தனது அளிக்கையை வழங்கியிருந்தார்.அதனைத் தொடர்ந்து SLPI இன் RTI ஊடகவியலாளர் மன்றத்தின் உறுப்பினர்களில் ஒருவரான கமணி ஹெட்டியாராச்சி அவர்கள்  களுத்துறை மாவட்ட ஊடகவியலாளர்கள் தகவலறியும் உரிமைச் சட்டத்தினை பயன்படுத்தும் போது எதிர்கொள்ளும் சவால்களை ஆணைக்குழுவினருக்கு தெளிவுபடுத்தியிருந்தார். கேள்வி பதில் பகுதியில் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் கலந்துகொண்டு பங்குபற்றுனர்களின் சந்தேகங்களுக்கு பதிலளித்திருந்தனர். அத்துடன் சட்டத்தினை பயன்படுத்தும் போது அவர்கள் எதிர்கொண்ட சவால்கள், அவற்றிற்கான தீர்வுகள் போன்றன ஆணைக்குழுவினரால் வழங்கப்பட்டன. மேலும் மேன்முறையீடுகளை சரியான காலத்தினுள் மேற்கொள்ளுமாறும் பொது அதிகாரசபைகள் சட்டத்தினால் பரிந்துரைக்கப்பட்ட காலவரையினுள் கோரிக்கைக்கு முறையான பதிலை வழங்காவிடின் தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழுவிற்கு மேன்முறையீட்டினை செய்யுமாறும் வழியுறுத்தியிருந்தனர்.  

Learn About - Sri Lanka Rights to Information Act

RTI: தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் எமது உரிமையைப் பாதுகாப்போம்! பயிற்சிப்பட்டறை – மட்டக்களப்பு

அவுஸ்ரேலிய உயர்ஸ்தானிகராலயத்தின் (Direct Aid Program – DAP) நேரடி உதவித் திட்டத்துடன் இணைந்து இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் (SLPI) “RTI: தகவல் அறியும் உரிமைச் சட்டம்…

By In
Learn About - Sri Lanka Rights to Information Act

RTI: தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் எமது உரிமையைப் பாதுகாப்போம்! பயிற்சிப்பட்டறை – புத்தளம்

அவுஸ்ரேலிய உயர்ஸ்தானிகராலயத்தின் (Direct Aid Program – DAP) நேரடி உதவித் திட்டத்துடன் இணைந்து இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் (SLPI) “RTI: தகவல் அறியும் உரிமைச் சட்டம்…

By In
Learn About - Sri Lanka Rights to Information Act

RTI: தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் எமது உரிமையைப் பாதுகாப்போம்! பயிற்சிப்பட்டறை – கண்டி

அவுஸ்ரேலிய உயர்ஸ்தானிகராலயத்தின் (Direct Aid Program – DAP) நேரடி உதவித் திட்டத்துடன் இணைந்து இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் (SLPI) “RTI: தகவல் அறியும் உரிமைச் சட்டம்…

By In
Learn About - Sri Lanka Rights to Information Act

RTI: தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் எமது உரிமையைப் பாதுகாப்போம்! பயிற்சிப்பட்டறை – காலி

இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் மற்றும் அவுஸ்ரேலிய உயர்ஸ்தானிகராலயத்தின் Direct Aid Programme (DAP) ஆகியன இணைந்து “தகவலறியும் உரிமைச் சட்டத்தினூடாக எமது உரிமைகளை பாதுகாப்போம்” எனும் தலைப்பிலான…

By In

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *