News, Uncategorized

லங்காதீப செய்திப்பிரிவிற்கான இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் விஜயம்

By In

இணைந்த செயற்பாட்டு அணுகுமுறையை ஊக்குவிக்கும் வகையில், லங்காதீப பத்திரிகையின் பிரதம ஆசிரியர், உப ஆசிரியர் மற்றும் செய்திப்பிரிவு ஊடகவியலாளர்களை இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் (SLPI) RTI குழுவினர் சந்தித்திருந்தனர். இச் சந்திப்பு மார்ச் 22 ஆம் திகதி லங்காதீப பத்திரிகை அலுவலகத்தில் நடைபெற்றது. தகவல் அறியும் உரிமை உதவி மையத்தின் சிறப்பம்சங்களை விபரித்ததுடன், அச்சுத் துறையில் முன்னணி வகிக்கும் சிங்களப் பத்திரிகைகளில் ஒன்றான லங்காதீப பத்திரிகை ஊடகவியலாளர்களையும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தினை பயன்படுத்துமாறும் வலியுறுத்தினர்.  

மேற்படி கலந்துரையாடலின் போது, ஊடகவியலாளர் ஒருவர் பொது அதிகாரசபைகளிடம் பல RTI கோரிக்கைகளை சமர்ப்பித்த பின்னர், அவரது தகவல் கோரிக்கைகளுக்கு பகுதியளவு தகவல்களை அல்லது கோரிக்கை  நிராகரிக்கப்பு அறிவிப்புகளை மட்டுமே பெற்றதாகக் கூறினார். அவர் தனது நேரத்தை நிர்வகிப்பதில் சிக்கல் இருப்பதாகவும், எனவே இதுபோன்ற சந்தர்ப்பங்களில் குறித்தளிக்கப்பட்ட அலுவலகரிடம் மேன்முறையீடு செய்ய விரும்பவில்லை என்றும் அவர் கூறினார். மேலும், தகவல் அறியும் உரிமையைப் பயன்படுத்தும் ஊடகவியலாளர்களுக்கு உதவுவதற்காக SLPI வழங்கும் இச் சேவையைப் பற்றி அறிந்து கொள்வதில் அவர் மகிழ்ச்சியடைவதாகவும் தெரிவித்தார்.

இக் கலந்துரையாடலில் கலந்து கொண்ட பெரும்பாலான ஊடகவியலாளர்கள் RTI என்றால் என்ன என்பதை நன்கு அறிந்திருந்தனர், ஆனால் அவர்கள் மேன்முறையீட்டு நடைமுறை தொடர்பாக குறைவாகவே அறிந்திருந்தனர். லங்காதீப பத்திரிகையின் பிராந்திய ஊடகவியலாளர்களின் இணைப்பாளர் கூறுகையில், பெரும்பாலான பிராந்திய ஊடகவியலாளர்களுக்கு RTI மேன்முறையீட்டு நடைமுறை பற்றி மேலதிக தெளிவு வழங்கப்பட வேண்டும் எனவும் கூறினார்.

News

வட மாகாண பாடசாலைகளுக்கு மூடுவிழா?

ப.பிறின்சியா டிக்சி தனியொரு நபரின் ஆளுமையை வளர்த்தெடுத்து, அதன்மூலம் சமூக முன்னேற்றத்துக்கு வழிகாட்டும் கல்வியை பாடசாலைகள் வழங்குகின்றன. இதனால்தான் “ஆயிரம் கோயில்கள் கட்டுவதைவிட ஒரு பாடசாலை கட்டுவது…

By In
News

மத்தள சர்வதேச விமான நிலையத்தினால் 10 வருடங்களில் வருமானம் 63 கோடி : செலவு 5876 கோடி!

க.பிரசன்னா பாரிய முதலீட்டுடன் நிர்மாணிக்கப்பட்ட மத்தள சர்வதேச விமான நிலையம் மக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டு 10 வருடங்கள் கடந்துள்ள நிலையிலும் எதிர்பார்த்தளவு அதன்மூலம் நாட்டுக்கு வருமானத்தை ஈட்டிக்கொள்ள…

By In
News

இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவினால் 79 வழக்குகள் மீளப்பெறப்பட்டுள்ளன

க.பிரசன்னா இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவின் செயற்பாடுகள் தொடர்பில் பல்வேறு சர்ச்சையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன. குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய வழக்குகளை வாபஸ் பெறுதல்,…

By In
News

வாடகை கட்டிடங்களில் இயங்கும் பொலிஸ் நிலையங்கள்

N.M. நஸ்ரான் 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில், ஏழாவது நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சியைப் பொறுப்பேற்ற பின்னர், புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் ‘சுபீட்சத்தின்…

By In

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *