News, Uncategorized

தகவல் அறிவதற்கான உரிமைச் சட்டத்தால் எடகல பாதை திருத்தப்பட்டது

By In

அனுராதபுர மாவட்டத்தில் பாலாதிகுளம எனும் இடத்தில் எடகல விகாரை பாதை நீண்டகாலமாக திருத்தப்படாதிருந்த பாதையாகும்.
இந்த பாதையால் பயணிக்கும் மக்கள் தொடர்ச்சியாக பல சிரமங்களை எதிர்நோக்கி வந்தனர். பாதையை புணரமைத்து தருமாறு பிரதேச சபைக்கு பலமுறை கடிதங்களை அனுப்பினர். குறித்த பாதை அப்பகுதி விகாரைக்கு செல்லும் பிரதான பாதையாக இருந்ததோடு மக்கள் அன்றாட போக்குவரத்து தேவைகளுக்காகவும் இந்த பாதையை பயன்படுத்தி வந்தனர். பாதையில் ஏற்பட்டிருந்த பெரிய குழிகள் காரணமாக மோட்டார் சைக்கிளில் கூட பயணம் செய்வது ஆபத்தானதாக இருந்தது. மழை காலங்களில் இந்த பாதையால் போக்குவரத்து செய்வதில் பிரதேச மக்கள் கடுமையான கஷ்டங்களை எதிர்நோக்கினர்.
நல்லாட்சி மற்றும் ஜனநாயகத்தை பலப்படுத்தும் வகையில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் அமெரிக்க உதவித்திட்டத்துடன் (USAID-SDGAP) இணைந்த தகவல் அறிவதற்கான சட்டம் பற்றிய பயிற்சி செயலமர்வில் பங்குபற்றிய இளைஞர் குழுவொன்று தகவல் அறிவதற்கான உரிமைச் சட்டத்தின் முக்கியத்துவம் பற்றி அறிந்துகொண்ட பின்னர் 2018 டிசம்பர் மாதம் இந்த பாதையின் உண்மை நிலை பற்றி அறிந்து கொள்வதற்காக அப்பகுதி பிரதேச சபைக்கு தகவல் அறிவதற்கான விண்ணப்பம் ஒன்றை சமர்ப்பித்து தகவல் கோரினர்.
அவர்களால் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பப் படிவத்தில் இந்த பாதையை புனரமைப்பு செய்வதற்கான நிதி ஒதுக்கீடு தொடர்பாக தகவல் கோரப்பட்டதாயினும் வழங்கப்பட்ட தகவல் அப்பகுதியில் உள்ள வேறொரு பாதை பற்றியதாகும்.
தகவல் அறிவதற்கான சட்டத்தின் அடிப்படையில் பாதை புணரமைப்பு பற்றிய தகவல் கேட்கப்பட்டதாயினும் அதற்கு தகவல் வழங்குவதற்கு பதிலாக பாதை புனரமைப்பு வேலைகள் துரிதமாக நடைபெற்றது. அதன்படி 120 மீட்டர் தூரத்திற்கு கற்கள் பதிக்கப்பட்டு அதற்காக செலவு செய்யப்பட்ட விபரங்களும் அறிவிக்கப்பட்டன.
தகவல் அறிவதற்கான சட்டத்தின் பலத்தால் இந்த வேலை நடந்ததாக இளைஞர்கள் கருதுகின்றனர். இந்த சட்டத்தின் அடிப்படையில் தகவல் கோரி விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டால் 14 நாட்களுக்குள் தகவல் வழங்க வேண்டும். அல்லது அது பற்றி அறிவிக்க வேண்டும். அதனால் தகவல் அறியும் சட்டம் மிகவும் பலம் வாய்ந்தது என்று அவர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த தகவலானது நல்லாட்சி மற்றும் ஜனநாயகத்தை பலப்படுத்தும் வகையில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனம், அமெரிக்க உதவித்திட்டத்துடன் (USAID) இணைந்து தகவல் அறிவதற்கான சட்டம் பற்றி நடத்திய பயிற்சி செயலமர்வில் பங்குபற்றியவர்களால் சமர்ப்பிக்கப்பட்டதாகும்.

“இந்த இடுகையின் உள்ளடக்கங்கள் SLPIஇன் முழுப் பொறுப்பாகும்இ மேலும் USAID அல்லது ஐக்கிய அமெரிக்க அரசாங்கத்தின் கருத்துக்களை அவசியமாக பிரதிபலிக்கவில்லை.”

News

பொருளாதார நெருக்கடியால் தொழில்தேடி வெளிநாடு செல்லும் இலங்கையர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

ந.லோகதயாளன் நாட்டில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட பின்னர் தொழில்வாய்ப்புக்காக வெளிநாடுகளுக்குச் செல்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்திருப்பதை தகவல் அறியும் சட்டத்தின் கீழ்  மாவட்டச் செயலகங்கள் மற்றும் வெளிநாட்டு…

By In
News

தொடரும் இலங்கை – இந்திய மீனவர் கைதுகள்!

க.பிரசன்னா இலங்கை – இந்திய மீனவர்களின் பிரச்சினை நீண்ட வரலாற்றைக் கொண்டது. கச்சத்தீவு இலங்கைக்கு வழங்கப்பட்ட பின்னர் ஆரம்பமான பிரச்சினை, இப்போது சட்டவிரோத மீன்பிடி முறையினால் வேறு…

By In
News

கொவிட் தடுப்பூசி இறக்குமதியில் அரசாங்கத்துக்கு 10 ஆயிரம் மில்லியன் ரூபா நட்டம்

க.பிரசன்னா உலகளவில் இன்னும் கொவிட் தொற்றின் அச்சம் முற்றாக நீங்கவில்லை. தற்போது பிரித்தானியாவில் கொவிட் தொற்றின் புதிய வகை அடையாளம் காணப்பட்டுள்ளது. 2019 ஆம் ஆண்டு இறுதியில்…

By In
News

இலங்கை சிறைச்சாலைகளில் பெண் கைதிகளின் நிலை

ப.பிறின்சியா டிக்சி ஆணுக்கு நிகர் பெண் என்று கூறினாலும், வாய்ப்புகள் கிடைக்கும் போது ஆண்களையும் மிஞ்சி பெண்கள் சாதித்துவிடுகின்றனர். இன்றைய கால கட்டத்தில் இலங்கையில் விமானத்துறை, கப்பல்துறை…

By In

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *