தகவல் அறியும் உரிமைச் சட்டம் (RTI) பயிற்சி அமர்வு இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் (SLPI) RTI குழுவினரால் ஜூலை 5, 2024 அன்று இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தில் நடைபெற்றது. SLPI இன் திட்ட இணைப்பாளர் டினேஷிகா ஜயசேகர தலைமையில் இந்த அமர்வானது மௌபிம பத்திரிகையின் பயிற்சியாளர்களுக்காக நடைபெற்றது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் அறிமுகம் மற்றும் நடைமுறைகள் உள்ளிட்ட ஆழமான விளக்கங்கள் பயிற்சியாளர்களுக்கு வழங்கப்பட்டது.
பயிற்றுவிப்பாளர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் பல்வேறு அம்சங்களை அதாவது ‘தகவல் அறியும் உரிமை’ என்றால் என்ன, இலங்கை தகவல் உரிமைச் சட்டத்தின் முக்கியத்துவம், தகவல் அறியும் உரிமைக்கான ஆணைக்குழுவின் செயற்பாடுகள், தகவல் பொறிமுறையின் கட்டமைப்பு, தகவல் விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான நடைமுறை (RTI 01) மற்றும் மேன்முறையீட்டு செயன்முறை ஆகியவற்றை விளக்கினார். RTI கோரிக்கையை யார் முன்வைக்கலாம் மற்றும் சட்டத்தின் கீழ் கோரிக்கையை எவ்வாறு சமர்பிப்பது என்பது பற்றியும் கலந்துரையாடப்பட்டது.
தகவல்களை அணுகுவதற்கான அடிப்படை உரிமையை பிரஜைகளுக்கு வழங்குவதன் மூலம் அவர்களுக்கு அதிகாரம் அளிப்பதில் RTI சட்டத்தின் முக்கியத்துவத்தை இந்தப் பயிற்சி கோடிட்டுக் காட்டுகிறது. பொது அதிகாரசபைகளுக்குள் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வை மேம்படுத்துவதற்கு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை எவ்வாறு திறம்பட பயன்படுத்துவது என்பது குறித்து பங்கேற்பாளர்கள் வழிகாட்டப்பட்டனர்.
Recent Comments