இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் மற்றும் அவுஸ்ரேலிய உயர்ஸ்தானிகராலயத்தின் Direct Aid Programme (DAP) ஆகியன இணைந்து “தகவலறியும் உரிமைச் சட்டத்தினூடாக எமது உரிமைகளை பாதுகாப்போம்” எனும் தலைப்பிலான ஒரு நாள் பயிற்சியினை நடாத்த திட்டமிட்டுள்ளது. இப் பயிற்சிகள் மாவட்ட மட்டத்திலுள்ள ஊடகவியலாளர்கள் மற்றும் சிவில் சமூக அமைப்பினர்களிற்காக நடாத்தப்படுகின்றன. தகவலறியும் உரிமைச் சட்டத்தினை பயன்படுத்தி எவ்வாறு சமூக பிரச்சனைகளுக்கு தீர்வினை பெற்றுக் கொள்ளலாம்?, சட்டத்தினை எவ்வாறு வினைத்திறனாக பயன்டுத்தலாம் போன்ற பல விடயங்களை உள்ளடக்கி இப் பயிற்சி ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் அக்டோபர் 17 ஆம் திகதி, காலி மாவட்டம் மற்றும் அதனை அண்மித்த மாவட்டங்களைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் மற்றும் சிவில் சமூக அமைப்பினர் ஆகியோர் கலந்துகொண்டனர். இதில் 30 இற்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள் மற்றும் சிவில் சமூக உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் ஆய்வாளர் திரு. ஆனந்த ஜயசேகர RTI இற்கான அறிமுகம், சட்டத்தின் வரலாறு மற்றும் பின்னணி, RTI என்றால் என்ன எனும் தலைப்புக்களில் பயிற்சியினை நடாத்தியிருந்தார். கொழும்பு பல்கலைக்கழக சட்டத்துறை விரிவுரையாளரான திரு. துமிந்து மதுஷான் RTI சட்டம், ஏற்பாடுகள் மற்றும் நடைமுறைகள் எனும் தலைப்பிலும் அத்துடன் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் சட்ட ஆய்வாளர் ஷளணி பெர்னாண்டோ “தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழுவினால் வழங்கப்பட்ட ஆணைகள்” தொடர்பாகவும் கலந்துரையாடியிருந்தனர். தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழுவின் ஆணையாளர் கிஷாலி பின்டொ ஜயவர்த்தன அவர்கள் கேள்வி பதில் பகுதியில் சட்டம் பற்றிய மேலதிக தகவல்களையும் ஆணைக்குழுவின் செயற்பாடுகள் பற்றியும் கலந்துரையாடியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Recent Comments