இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் RTI அணியினர், ஊடகவியலாளர்கள், செய்திப்பிரிவுகள் மற்றும் ஊடக வல்லுநர்களுக்கு RTI சட்டத்தை திறம்பட பயன்படுத்துவது தொடர்பாக உதவி மையச் சேவையை வழங்கி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, தகவல் அறியும் உரிமை கோரிக்கையை தாக்கல் செய்தல், மேன்முறையீட்டினை மேற்கொள்ளல் மற்றும் சட்டம் பற்றிய அடிப்படை விடயங்கள் குறித்து ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்க செய்திப்பிரிவுகளுக்கு விஜயத்தினை மேற்கொள்ளும்.
அந்த வகையில் டிசம்பர் 11, 2024 அன்று, RTI அணியினர் டெய்லிமிரர் செய்திப் பிரிவிற்கு விஜயம் மேற்கொண்டிருந்தனர். இவ் அமர்வில் 24 ஊடகவியலாளர்கள் கலந்துகொண்டிருந்தனர். இவ் அமர்வை சட்டத்தரணி ஷளணி பெர்னாண்டோ அவர்கள் நடாத்தியிருந்தார். RTI இன் பயன்கள் பற்றிய நுணுக்கமான விடயங்களை பகிர்ந்து கொண்டார், மேலும் இவ்வமர்வு பங்கேற்பாளர்கள் தங்கள் பத்திரிகைப் பணிகளில் இச் சட்டத்தினை எவ்வாறு திறம்படப் பயன்படுத்துவது என்பது பற்றிய புரிதலையும் மேம்படுத்துவதாக அமைந்தது.





Recent Comments