News, Uncategorized

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மக்கள் பிரதிநிதிகளின் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான தகவல்களைக் கோர முடியுமா?

By In

தகவல் அறியும் உரிமைச் சட்டம், அதன் முக்கியத்துவம் மற்றும் RTI சட்டம் பற்றிய பொதுமக்களின் புரிதலை மேம்படுத்தும் நோக்கத்துடன், இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் சமூக ஊடக தளங்களில் மாதாந்த பொது வாக்கெடுப்புகளை நடாத்தி வருகின்றது. மக்கள் பிரதிநிதிகளின் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் பற்றிய தகவல்களை, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கோர முடியுமா என மக்களிடம் கருத்துக்கணிப்பொன்று மேற்கொள்ளப்பட்டது. சமூக ஊடக பயனர்களில் 91 சதவீதம் பேர் RTI சட்டத்தின் கீழ் தகவல்களைக் கோரலாம் என்றும், 9% பேர் கோர முடியாது என்றும் கூறியிருந்தனர்.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் ஊடாக அந்தத் தகவல்கள் உண்மையில் கிடைக்கப்பெறுமா?

1975 ஆம் ஆண்டின் முதலாம் இலக்க சொத்துகள் மற்றும் பொறுப்புகள் பிரகடனச் சட்டம் (1998 இல் திருத்தப்பட்டது) பொது அதிகாரிகள் மற்றும் பொதுப் பிரதிநிதிகளின் சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் பற்றிய பிரகடனத்தின் நிலைகளை வலியுறுத்துகிறது. அரச அதிகாரிகள் இலஞ்சம் மற்றும் ஊழலில் ஈடுபடுவதைத் தடுப்பதும், முறைகேடாகச் சம்பாதித்த சொத்துக்களையும், சொத்துக்களை குவிக்கும் சந்தர்ப்பங்களை தடுப்பதுமே இதன் முக்கிய நோக்கமாகும். 

சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் பற்றிய பிரகடனம் பின்வரும் முறையில் செய்யப்பட வேண்டும்: 

– பாராளுமன்ற உறுப்பினர்கள் சபாநாயகரிடம் 

– சபாநாயகர் ஜனாதிபதியிடம்.

-அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் ஜனாதிபதிக்கு.

– உள்ளூராட்சி மன்றங்களின் மேயர்கள் மற்றும் தலைவர்கள் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளரிடம்

– உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் உள்ளூராட்சி ஆணையாளரிற்கு

-தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தேர்தல் ஆணையாளரிற்கு.

இங்கு சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் / பொதுப் பிரதிநிதிகள், அவர்களின் துணைவியார் மற்றும் அவர்களைச் சார்ந்திருக்கும் குழந்தைகள் 

  • அவர் பணியமர்த்தப்பட்டிருந்தால் சம்பளம் மற்றும் மாதாந்த கொடுப்பனவு விவரங்கள் (மனைவி மட்டும்)
  • மேற்கூறிய நபர்களின் சார்பாக மற்றொரு நபர் வைத்திருக்கும் சொத்தின் விவரங்கள், அதன் அளவு மற்றும் இடம், அதை கையகப்படுத்திய திகதி மற்றும் செலவினம்
  • தபால் அலுவலக சேமிப்பு வங்கி மற்றும் தேசிய சேமிப்பு வங்கி உட்பட இலங்கை அல்லது வெளிநாட்டில் உள்ள எந்தவொரு வங்கி கணக்குகளின் (நடைமுறை கணக்குகள், சேமிப்புக் கணக்குகள், நிலையான வைப்புகள், முதலியன) விவரங்கள்
  • சேமிப்பு அல்லது வரி இருப்புச் சான்றிதழ்கள் அல்லது அரசுப் பத்திரங்களில் முதலீடு செய்யப்பட்ட பணத்தின் விவரங்கள்
  • கடன்கள் பற்றிய விவரங்கள்
  • வைத்திருக்கும் பங்குகள், அல்லது எதிர்மறைத் தாள்களின் (Negative sheet) விவரங்கள்
  • வியாபாரத்தில் முதலீடு செய்யப்பட்ட நிதி விவரங்கள்
  • வெளிநாட்டு சொத்துக்கள், சொத்துக்கள் அமைந்துள்ள நாட்டின் பெயர், சொத்துக்களின் தன்மை, அவற்றின் மதிப்பு மற்றும் முதலீடு செய்யப்பட்ட திகதி
  • வங்கி பெட்டகங்களின் விவரங்கள்
  • தங்கம் அல்லது வெள்ளி நகைகள் மற்றும் வெட்டப்பட்ட / வெட்டப்படாத இரத்தினக் கற்கள் பற்றிய விவரங்கள்
  • மேற்கண்ட நபர்களுக்கு சொந்தமான மோட்டார் வாகனங்களின் விவரங்கள்
  • மேற்கண்ட நபர்களுக்குச் சொந்தமான அனைத்து வகையான நிலையான சொத்து விபரங்கள்

சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் பிரகடனத்தில் குறிப்பிடப்பட வேண்டும். நியமிக்கப்பட்டு மூன்று மாத காலத்தினுள் சமர்ப்பிக்கப்பட வேண்டும் அதன் பின்னர்  சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு வருடாந்தம் சமர்ப்பிக்கப்பட வேண்டும். 

அத்தகைய சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களை வெளிப்படுத்துவதில் ஏதேனும் முரண்பாடு அல்லது சந்தேகம் இருந்தால், சட்டத்தின் கீழ் அத்தகைய விடயங்களை விசாரிக்கும் அதிகாரம் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவுக்கு (CIABOC) வழங்கப்பட்டுள்ளது. சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் பற்றிய பிரகடனத்தில் பிழை இருப்பதாகக் கூறி முறைப்பாடு அளிக்கப்படும் போது மட்டுமே அந்த சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்படும்.  

அவ்வாறு முறைப்பாடு செய்வதற்கு, அந்த சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் பகிரங்கப்படுத்தப்பட வேண்டும். அதன்பின், அரச அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் வைத்திருக்கும் சொத்துக்கள் குறித்து பொதுமக்களுக்கு தெரியப்படுத்தப்படும். அந்த சொத்து மற்றும் பொறுப்பு அறிக்கைகளை அணுக பொதுமக்களுக்கு இரண்டு சந்தர்ப்பங்கள் வழங்கப்பட்டுள்ளன. 

அவையாவன, 

  • 1975 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க சொத்துகள் மற்றும் பொறுப்புகள் சட்டம் மற்றும் 
  • 2016 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க தகவலறியும் உரிமைச் சட்டம் 

இவற்றில், சொத்துகள் மற்றும் பொறுப்புகள் சட்டம் சம்பந்தப்பட்ட நபருடன் தொடர்புடைய சொத்து மற்றும் பொறுப்பு பிரகடனங்களைப பயன்படுத்த அனுமதிக்கிறது, ஆனால் அவற்றைப் பகிரங்கப்படுத்த அதிகாரம் இல்லை. இருப்பினும், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைப் பயன்படுத்தி சொத்து மற்றும் பொறுப்பு அறிக்கைகள் ஆராயப்படும்போது அந்த எல்லைகள் இல்லை. எனவே, இன்று கிடைக்கும் சிறந்த மற்றும் பயனுள்ள கருவி RTI சட்டமாகும். 

News

20 அரச நிறுவனங்களின் மூலம் அரசாங்கத்துக்கு 85 ஆயிரம் கோடி ரூபா இழப்பு!

க.பிரசன்னா நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி நிலைமை காரணமாக இலங்கை தற்போது சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கடனை பெற்றுக்கொள்ளவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. மறுபுறம் அரசுக்கு அதிக செலவை…

By In
News

2025 மார்ச் முதல்முழுமையாக அமுலுக்கு வரும் தனிநபர் தரவு பாதுகாப்பு சட்டம்

ஜனக சுரங்க தனிப்பட்ட தரவின் செயலாக்கத்தை ஒழுங்குபடுத்துதல், தனிப்பட்ட தரவைப் பாதுகாத்தல், தரவு பங்களிப்பாளர்களின் உரிமைகளை அடையாளம் கண்டு வலுப்படுத்துதல் போன்றவற்றை நோக்கமாகக் கொண்டு, இலங்கை பிரஜைகளுக்கு…

By In
News

ஊடகவியலாளர்களுக்கு அச்சுறுத்தல் இருப்பதை உறுதிப்படுத்தும் பாராளுமன்ற தரவுகள்!

தனுஷ்கசில்வா ஊடகவியலாளர்களுக்கு எதிரான அச்சுறுத்தல்களின் ஒரு தசாப்தகால வரலாற்றை இலங்கை நாடாளுமன்றம் அம்பலப்படுத்தியுள்ளது. 2006 மற்றும் 2015ஆம் ஆண்டுகளுக்கு இடையில் ஊடகவியலாளர்கள் மற்றும் நிறுவனங்கள் எதிர்கொள்ளும் அபாயகரமான…

By In
News

எல்லைகள் வரையறுக்கப்படாது தனியார் பல்கலைக்கழகத்துக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ள கீரிமலை ஜனாதிபதி மாளிகை!

ந.லோகதயாளன் கீரிமலையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அமைத்த ஜனாதிபதி மாளிகையும் அதனைச் சூழவுள்ள பிரதேசமும் ஆண்டொன்றிற்கு 10 ஆயிரம் டொலர்களுக்கு தனியார் பல்கலைக் கழகத்திற்கு குத்தகைக்கு…

By In

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *