News

போக்குவரத்துத் திணைக்களம் தோற்றுவிக்கும் தகவல் கோரிக்கைகளின் புறக்கணிப்பு

By In

பொது அதிகாரிகளிடமிருந்து கேட்கும் கேள்விகளுக்கான பதில்களைப் பெற பொது மக்களுக்கு உதவும் வகையில் தகவல் உரிமைச் சட்டம் உள்ளது. இருப்பினும், அனைத்து பொது அதிகாரிகளும் தகவல்களுக்கான மக்களின் கோரிக்கைகளுக்கு பதிலளிக்க வேண்டிய அவசியத்தை உணர்கின்றார்களா?

இருபதுக்கும் மேற்பட்ட வெவ்வேறு அரச அதிகாரங்கள் தகவல் அறியும் விண்ணப்பங்களை அனுப்பிய ஒரு நபர், இந்த வெளியீடு எழுதும் நேரத்திலிருந்து  இரண்டு மாதங்களுக்கு முன்பு தங்களுக்கு அனுப்பப்பட்ட சில தகவல் கோரிக்கைகளுக்குமே, இந்த நிறுவனங்கள் சில பதிலளிக்கவில்லை என்பதைக் கண்டறிந்துள்ளது. தேவையான தகவல்களைக் கொண்ட ஒரு கடிதம் கிடைக்கவில்லை என்பது மட்டுமல்லாமல், ஒரு ‘முடிவு நிலுவையில்’ கடிதம் அல்லது எவ்வித ஒப்புகை கடிதமும் கூட இவ்விண்ணப்பதாரரால் பெறப்படவில்லை. நியமிக்கப்பட்ட அதிகாரிக்கு அனுப்பப்பட்ட முறையீடுகளுக்கும் இன்னும் பதிலளிக்காத திணைக்களங்கள் அல்லது அமைச்சகங்களும் இவையே ஆகும். அத்தகைய ஒரு உதாரணம், வாகன உமிழ்வு சோதனை (vehicle emission testing) தொடர்பான கேள்விகளுக்கு பதிலளிக்காத போக்குவரத்துத் திணைக்களம் ஆகும்.

ஒருவரின் வரிப் பணம் எவ்வாறு செலவிடப்படுகிறது மற்றும் ஒரு அரசாங்கக் காரியம் (government undertaking) பொதுமக்களுக்கு எவ்விதமான ஆபத்தையோ அல்லது சிரமத்தையோ ஏற்படுத்துகிறதா என்பது போன்ற விடயங்களை அறிய மக்களுக்கு உரிமை உண்டு. எனவே, தகவல் அறியும் உரிமையும் ஒரு மனித உரிமை என்பதை நாட்டின் பொது அதிகாரிகள் அங்கீகரிக்க வேண்டும்.

News

EPF நிதியம் 400 டிரில்லியனை அடைந்ததுடன், ETF நிதியம் 400 பில்லியனை எட்டியது: அவை உறுப்பினர்களுக்கு பயனளிக்காமல் விரிவுபடுத்தப்பட வேண்டுமா?

சமீபத்திய தேர்தல் பிரச்சாரங்களும் மே தின நிகழ்வுகளும் இலங்கையின் தொழிலாளர் படையை முறையாகப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஓர் நிலைத்தன்மையான  சமூகப் பாதுகாப்பு முறைமையின் அவசியத்தை எடுத்துக்காட்டுவதுடன் உறுதிப்படுத்துகின்றன. 1958…

By In
News

மாத்தறை பொது வைத்தியசாலையின் மருத்துவக் கழிவு விவகாரம்: விசாரணைக்கு அளிக்கப்பட்ட பதில்கள் பொய்யானவை!

ராகுல் சமந்த ஹெட்டியாராச்சி உலகெங்கிலும் மருத்துவக் கழிவுகளை அகற்றுவது மிகவும் அவதானமாக மேற்கொள்ளப்படும் ஒரு செயற்பாடாகும். 22 மில்லியன் குடிமக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக இலங்கையின் சுகாதார…

By In
News

அரச நிதி இப்படியும் வீணடிப்பு: 4 முன்னாள் ஜனாதிபதிகளுக்கு 397 தனிப்பட்ட பணியாளர்கள்!

க.பிரசன்னா முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகள் தொடர்பில் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டுவரும் கருத்துக்கள் அவர்களின் சிறப்புரிமைகளுக்கு அரச நிதி அதிகளவு விரயம் செய்யப்படுவதை வலியுறுத்தியுள்ளது. இந்நிலையில், முன்னாள் பிரதமர்கள் மற்றும்…

By In
News

ஜீவன சக்தி காப்புறுதி திட்டம் மூலம் ஏமாற்றப்பட்ட தோட்டத் தொழிலாளர்கள்

க. பிரசன்னா பெருந்தோட்டத் தொழிலாளர்களின் காணி உரிமை, தனி வீடு மற்றும் ஊதியம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் காலங்காலமாக அரசாங்கத்தால் வழங்கப்பட்ட உறுதிமொழிகள் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளமை…

By In

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *