இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் தகவல் அறியும் உரிமை உதவி மையம் 29 மார்ச் 2023 அன்று, லேக் ஹவுஸ் என்று அழைக்கப்படும் இலங்கை அசோசியேட்டட் நியூஸ்பேப்பர்ஸ் இற்கு (ANCL) தனது விஜயத்தினை மேற்கொண்டிருந்தது. இந்த விஜயத்தின் போது ஊடகவியலாளர்களுடன் தகவல் அறியும் உரிமைச் சட்ட உதவி மையத்தின் செயற்பாடுகள் குறித்து கலந்துரையாடப்பட்டது. சிலுமின, டெய்லி நியூஸ், தினமின, சண்டே ஒப்சர்வர் மற்றும் தினகரன் பத்திரிகைகளின் செய்தி ஆசிரியர்கள் ஆகியோரிற்கு தகவல் அறியும் உரிமையை திறம்பட பயன்படுத்துவது குறித்து விழிப்புணர்வு அளிக்கப்பட்டது. இதில் பத்திரிகை ஆசிரியர் குழுமத்தின் பணிப்பாளர் திரு. சிசிர பரணதந்திரி அவர்களும் கலந்து கொண்டிருந்தார்.
சட்ட ஆய்வாளரான ஷளணி பெர்னாண்டோ மற்றும் SLPI இன் ஆலோசகர் அஷ்வினி நடேசன் ஆகியோர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் நடைமுறைகள் மற்றும் சட்ட விளக்கங்கள் தொடர்பான மேலதிக விளக்கங்களை ஊடகவியலாளர்களுக்கு வழங்கினர். ANCL இன் பொது முகாமையாளர் திரு. சுமித் கொத்தலாவல உரையாற்றுகையில் SLPI இன் இம் முயற்சி மற்றும் இந்த அமர்வின் முக்கியத்துவத்தினையும் கலந்துகொண்டவர்களுக்கு தெரிவித்ததோடு இக் கலந்துரையாடலினை ஒழுங்கமைத்ததற்காக தனது நன்றியைத் தெரிவித்தார். இலங்கை பத்திரிக்கை ஸ்தாபனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி திரு. குமார் லோபேஸ் நிறைவுரைகளை வழங்கியதுடன் ஊடகவியலாளர்களை RTI ஐப் பயன்படுத்தவும் ஊக்குவித்தார்.
Recent Comments