இணைந்த செயற்பாட்டு அணுகுமுறையை ஊக்குவிக்கும் வகையில், லங்காதீப பத்திரிகையின் பிரதம ஆசிரியர், உப ஆசிரியர் மற்றும் செய்திப்பிரிவு ஊடகவியலாளர்களை இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் (SLPI) RTI குழுவினர் சந்தித்திருந்தனர். இச் சந்திப்பு மார்ச் 22 ஆம் திகதி லங்காதீப பத்திரிகை அலுவலகத்தில் நடைபெற்றது. தகவல் அறியும் உரிமை உதவி மையத்தின் சிறப்பம்சங்களை விபரித்ததுடன், அச்சுத் துறையில் முன்னணி வகிக்கும் சிங்களப் பத்திரிகைகளில் ஒன்றான லங்காதீப பத்திரிகை ஊடகவியலாளர்களையும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தினை பயன்படுத்துமாறும் வலியுறுத்தினர்.
மேற்படி கலந்துரையாடலின் போது, ஊடகவியலாளர் ஒருவர் பொது அதிகாரசபைகளிடம் பல RTI கோரிக்கைகளை சமர்ப்பித்த பின்னர், அவரது தகவல் கோரிக்கைகளுக்கு பகுதியளவு தகவல்களை அல்லது கோரிக்கை நிராகரிக்கப்பு அறிவிப்புகளை மட்டுமே பெற்றதாகக் கூறினார். அவர் தனது நேரத்தை நிர்வகிப்பதில் சிக்கல் இருப்பதாகவும், எனவே இதுபோன்ற சந்தர்ப்பங்களில் குறித்தளிக்கப்பட்ட அலுவலகரிடம் மேன்முறையீடு செய்ய விரும்பவில்லை என்றும் அவர் கூறினார். மேலும், தகவல் அறியும் உரிமையைப் பயன்படுத்தும் ஊடகவியலாளர்களுக்கு உதவுவதற்காக SLPI வழங்கும் இச் சேவையைப் பற்றி அறிந்து கொள்வதில் அவர் மகிழ்ச்சியடைவதாகவும் தெரிவித்தார்.
இக் கலந்துரையாடலில் கலந்து கொண்ட பெரும்பாலான ஊடகவியலாளர்கள் RTI என்றால் என்ன என்பதை நன்கு அறிந்திருந்தனர், ஆனால் அவர்கள் மேன்முறையீட்டு நடைமுறை தொடர்பாக குறைவாகவே அறிந்திருந்தனர். லங்காதீப பத்திரிகையின் பிராந்திய ஊடகவியலாளர்களின் இணைப்பாளர் கூறுகையில், பெரும்பாலான பிராந்திய ஊடகவியலாளர்களுக்கு RTI மேன்முறையீட்டு நடைமுறை பற்றி மேலதிக தெளிவு வழங்கப்பட வேண்டும் எனவும் கூறினார்.
Recent Comments