மட்டக்ளப்பு சந்தியில் வாவிக்கரை வீதி மற்றும் கல்லடி வீதியில் வசிக்கும் 50 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் ஒழுங்கான வடிகாலமைப்பு வசதி இல்லாததால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மோசமான வடிகான் திட்டம் காரணமாக மழை காலங்களில் கல்லடி குடியிருப்பு பகுதிக்குள் வெள்ள நீர் புகுவதால் கடுமையான பாதரிப்புக்களுக்கு முகம் கொடுக்க நேரிடுகின்றது. நீர் வடிந்து செல்லாமல் தேங்கி நிற்பதால் வெளிப்பகுதிகள் மட்டுமல்லாமல் வீடுகளுக்குள்ளும் வெள்ள நீர் புகுந்து பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றது. அதனால் பெரும் துன்பங்களை அனுபவிக்க நேரிடுகின்றது. அத்தகைய சந்தர்ப்பங்களில் அவர்களது அன்றாட வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்படுகின்றது.
பத்திரிகை ஸ்தாபனம், அமெரிக்க உதவித்திட்டம் (USAID) மற்றும் SDGAP இணைந்து தகவல் அறிவதற்கான சட்டம் பற்றி பயிற்சி செயலமர்வொன்றை நடத்தியது. இந்த செயலமர்வில் மட்டக்களப்பு பகுதி இளைஞர்களும் பங்குபற்றினர். அவர்கள் தகவல் அறிவதற்கான சட்டத்தின் முக்கியத்துவத்தை புரிந்துகொண்டனர்.
அதன் பிரதி பலனாக குறித்த மாநகர சபைக்கு தகவல் அறிவதற்கான விண்ணப்பம் ஒன்றை சமர்ப்பித்து மோசமான வடிகாண் பற்றியும் சரி செய்ய எடுக்கப்பட்டுள்ள திட்டங்கள் பற்றியும் தகவல் கோரினர்.
ஆனாலும் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பத்திற்கு உரியவர்களிடம் இருந்து குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் எந்தவிதமான பதிலும் கிடைக்கவில்லை. இந்த விடயம் தொடர்பான மேன்முறையீடு செய்ய அல்லது மீண்டும் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பித்து தகவல் கோருவதென்று தீர்மானித்தனர்.
அதிகாரிகள் இந்த விடயம் தொடர்பாக மௌனம் சாதித்தனராயினும் குறிப்பிட்ட குறைபாடு தொடர்பாக அதிகாரிகளை கேள்வி கேட்பதற்கு தகவல் சட்டம் உதவியாக இருப்பது குறித்து அப்பிரதேச மக்கள் நன்றி தெரிவிக்கின்றனர். எதிர்காலத்தில் தேவைப்படும் போது தகவல் அறிவதற்கான சட்டத்தை பயன்படுத்த அவர்கள் தீட்டமிட்டுள்ளனர்.
தகவல் அறிவதற்கான சட்டம் அவர்களுக்கு நம்பிக்கை ஊட்டியதாக கருதுகின்றனர். இந்த விடயம் நல்லாட்சி மற்றும் ஜனநாயகத்தை பலப்படுத்தும் வகையில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனம், அமெரிக்க உதவித்திட்டத்துடன் இணைந்து தகவல் அறிவதற்கான சட்டம் பற்றி நடத்திய பயிற்சி செயலமர்வில் பங்குபற்றிய இளைஞர்களால் சமாப்பிக்கப் பட்டதாகும்.
ஜீவன சக்தி காப்புறுதி திட்டம் மூலம் ஏமாற்றப்பட்ட தோட்டத் தொழிலாளர்கள்
க. பிரசன்னா பெருந்தோட்டத் தொழிலாளர்களின் காணி உரிமை, தனி வீடு மற்றும் ஊதியம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் காலங்காலமாக அரசாங்கத்தால் வழங்கப்பட்ட உறுதிமொழிகள் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளமை…
போலியான தகவல் வழங்கிய அஸ்வெசும பயனாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?
க.பிரசன்னா கடந்த காலங்களில் அஸ்வெசும கொடுப்பனவு வழங்கும் திட்டத்தில் பல்வேறு குறைபாடுகள் காணப்பட்டதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக போலியான தகவல்களை வழங்கி தகுதியற்ற நபர்களும் அஸ்வெசும கொடுப்பனவை…
ரணில் விக்ரமசிங்கவின் ஓய்வூதியம்
– ஜனக சுரங்க இலங்கையின் எட்டாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக பதவி வகித்த ரணில் விக்ரமசிங்க, கடந்த காலங்களில் பிரதமர், பாராளுமன்ற உறுப்பினர் என பல்வேறு…
18 வருடங்களாக நிர்மாணிக்கப்படும் மெரைன் டிரைவ் வீதி
க. பிரசன்னா கொழும்பு – காலி பிரதான வீதியில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கான சிறந்த வழி என அடையாளம் காணப்பட்ட கரையோர வீதியின் (மெரைன் டிரைவ்) ஆறு…
Recent Comments