News

பெறுபேரு கிடைத்ததாயினும் சான்றிதழ் வழங்கப்படவில்லை. மாணவர்கள் தகவல் அறிவதற்கான சட்டத்தின்படி விண்ணப்பம் சமர்ப்பித்தனர்.

By In

இந்த தகவலானது நல்லாட்சி மற்றும் ஜனநாயகத்தை பலப்படுத்தும் வகையில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனம், அமெரிக்க உதவித்திட்டத்துடன் இணைந்து தகவல் தொடர்பாடல் மற்றும் தகவல் அறிவதற்கான சட்டம் பற்றி நடத்திய பயிற்சி செயலமர் நடத்தப்பட்டது. அந்த செயலமர்வில் பங்குபற்றிய ஒருவரால் சமர்ப்பிக்கப்பட்ட அனுபவத்தை பற்றியதாக இந்த கதை அமைகின்றது.
தனுஷ் என்ற மாணவர் பதுளை சரஸ்வதி கல்லூயில் தகவல் தொழில்நுட்ப பிரிவில் க.பொ.த. (உ.த) இல் கற்பதற்காக 2015 – 2016 ஆம் ஆண்டு இணை ந்து கொண்டார். அப்போது தனுசிற்கு தேசிய தொழிற் தகைமை சான்றிதழ் NVQ தரம் 4 வழங்கப்படும் என்று கூறப்பட்டது. தகவல் தொழில்நுட்ப பிரிவில் கற்கும் பாடங்கள் இந்த துறைக்கு சமமானதாக அமைவதால் NVQ தரம் 4 கற்பிக்கப்படுவதாக அறிவுரை வழங்கப்பட்டிருந்தது.
எவ்வாறாயினும் சரஸ்வதி கல்லூரி மாணவர்கள் தனுஷ் உள்ளடங்களாக க.பொ.த. (உ.தர) பரீட்சைக்கு தோற்றி சித்தியடைந்து அவர்களுக்கான பெறுபேற்றையும் பெற்றுக்கொண்டனர். ஆனாலும் அவர்களுக்கு ஏற்கனவே சொல்லப்பட்ட NVQ தரம் 4 தர சான்றிதழ் வழங்கப்படவில்லை.
இலங்கை பத்திரிகை ஸ்தாபனம், அமெரிக்க உதவித்திட்டத்துடன் இணைந்து தகவல் மற்றும் தொடர்பாடல் தகவல் அறிவதற்கான சட்டம் பற்றி நடத்திய பயிற்சி செயலமாவில் கலந்துகொண்ட தனுஷ், 2018 ஒக்டோபரில் இது தொடர்பாக தகவல் அறிவதற்கான விண்ணப்பப் படிவம் ஒன்றை பதுளை சரஸ்வதி தேசிய கல்லூரி பிரதி அதிபரிடம் சமர்ப்பித்தார்.
பாடசாலை முகாமைத்துவம் இந்த தொழில்நுட்ப பிரிவில் பயிலும் மாணவர்களுக்கு NVQ தரம் 4 தர சான்றிதழ் வழங்குவது தொடர்பாக கல்வி அமைச்சில் இருந்து எந்தவிதமான அறிவுறுத்தலையும் பெற்றுக்கொண்டதாக இல்லை என்ற தகவலை பிரதி அதிபர் அறிவித்தார்.
அதுபற்றிய தகவல் ஏதாவது கல்வி அமைச்சால் வழங்கப்பட்டால் அதற்கான நடவடிக்கைகளை எடுப்பதாகவும் பிரதி அதிபர் தகவல் அறிவதற்காக வழங்கப்பட்ட விண்ணப்பத்திற்கு தெரிவித்தார்.
அதற்கமையை தனுஷ் பிரதி அதிபரால் வழங்கப்பட்ட இந்த தகவலுக்கு நன்றி தெரிவித்தார். காரணம் இந்த தகவல் தனுசிற்கு அறிவிக்கப்படாவிட்டால் அவர் NVQ தரம் 4 தர சான்றிதழ் கிடைக்கும் வரையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும்.
இந்த தகவல் நல்லாட்சி மற்றும் ஜனநாயகத்தை பலப்படுத்தும் வகையில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனம், அமெரிக்க உதவித்திட்டத்துடன் இணைந்து தகவல் மற்றும் தொடர்பாடல் தகவல் அறிவதற்கான சட்டம் பற்றி நடத்திய பயிற்சி செயலமர்வில் பங்குபற்றிய ஒருவரால் சமர்ப்பிக்கபட்டதாகும்.

News

ஜீவன சக்தி காப்புறுதி திட்டம் மூலம் ஏமாற்றப்பட்ட தோட்டத் தொழிலாளர்கள்

க. பிரசன்னா பெருந்தோட்டத் தொழிலாளர்களின் காணி உரிமை, தனி வீடு மற்றும் ஊதியம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் காலங்காலமாக அரசாங்கத்தால் வழங்கப்பட்ட உறுதிமொழிகள் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளமை…

By In
News

போலியான தகவல் வழங்கிய அஸ்வெசும பயனாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?

க.பிரசன்னா கடந்த காலங்களில் அஸ்வெசும கொடுப்பனவு வழங்கும் திட்டத்தில் பல்வேறு குறைபாடுகள் காணப்பட்டதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக போலியான தகவல்களை வழங்கி தகுதியற்ற நபர்களும் அஸ்வெசும கொடுப்பனவை…

By In
News

 ரணில் விக்ரமசிங்கவின் ஓய்வூதியம்

– ஜனக சுரங்க இலங்கையின் எட்டாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக பதவி வகித்த ரணில் விக்ரமசிங்க, கடந்த காலங்களில் பிரதமர், பாராளுமன்ற உறுப்பினர் என பல்வேறு…

By In
News

18 வருடங்களாக நிர்மாணிக்கப்படும் மெரைன் டிரைவ் வீதி

க. பிரசன்னா கொழும்பு – காலி பிரதான வீதியில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கான சிறந்த வழி என அடையாளம் காணப்பட்ட கரையோர வீதியின் (மெரைன் டிரைவ்) ஆறு…

By In

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *