News

பிப்ரவரி 16, 2023 அன்று நடைபெற்ற RTI ஊடகவியலாளர் மன்றத்தின் சிறப்பம்சங்கள்

By In

இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் மற்றும் அவுஸ்ரேலிய உயர்ஸ்தானிகராலயத்தின் நேரடி உதவித் திட்டத்தின் (DAP – Direct Aid Programme) அனுசரணையுடன் SLPI RTI ஊடகவியலாளர் மன்றத்தினை ஏற்பாடு செய்திருந்தது. இது பெப்ரவரி மாதம் 16 ஆம் திகதி மதியம் 1.30 முதல் மாலை 3.30 மணி வரை இலங்கை பத்திரிகை ஸ்தாபன கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இதில் இலங்கையின் பல பாகங்களிலும் தகவலறியும் உரிமைச் சட்டத்தினை வினைத்திறனுடன் பயன்படுத்தும் சிங்கள மற்றும் தமிழ் ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டிருந்தனர். 

இம் மன்றம் 2018 ஆம் ஆண்டு முதல் மாதாந்தம் நடைபெற்றது. இம் மன்றத்தில் தகவலறியும் உரிமைச் சட்டத்தின் தற்போதைய நிலவரம், சட்டத்தினை பயன்டுத்தும் போது எதிர்கொண்ட சவால்கள், கோரிக்கைகளுக்கு பொது அதிகாரசபைகள் வழங்கிய பதில்கள், பெறப்பட்ட தகவல்களை எவ்வாறு திறம்பட பயன்படுத்துதல், மக்களுக்கு RTI சட்டத்தினூடாக எவ்வாறு சேவை செய்ய முடியும் என பல தலைப்புக்களில் உரையாடுவர். தொடர்ச்சியாக நேரடியாக இடம்பெற்று வந்த இம் மன்றம் கொவிட் பெருந்தொற்றின் பின்னர் இணைவழியினூடாக நடைபெற்றது. தொற்று சற்றுத் தணிந்துள்ள இந் நாட்களில் மூன்று மாதங்களிற்கு ஒரு முறை கூடுவதற்கு திட்டமிட்டுள்ளது. 

அந்தவகையில் 2023 ஆம் ஆண்டிற்கான மன்றம் பெப்ரவரி மாதம் கூடியிருந்தது. வருகைதந்தோரின் அறிமுகத்தோடு ஆரம்பமாகி மன்றம் பற்றிய அறிமுகமும்  “Spotlight Journalist of the Forum” தெரிவும் இடம்பெற்றது. இந்த “Spotlight Journalist of the Forum” என்பது மன்றத்தின் உறுப்பினராகிய ஊடகவியலாளர் ஒருவர் தகவலறியும் உரிமைச் சட்டத்தினை பயன்படுத்தி பெறப்பட்ட தகவல், அந்தத் தகவலை பெறுவதற்கு அவர் எவ்வாறான முயற்சிகளை மேற்கொண்டார், எதிர்கொண்ட சவால்கள் என்ன போன்ற விடயங்களை பகிர வேண்டும். இவ்வாறு பகிரும் போது ஏனைய ஊடகவியலாளர்களுக்கும் அது ஒரு தூண்டுகோளாக அமைவதோடு குறித்த ஊடகவியலாளர் ஏனைய ஊடகவியலாளர்கள் மத்தியில் ஒரு எடுத்துக்காட்டாக திகழ்வார். 

இம் மாத “Spotlight Journalist” ஆக தமிழ்மிரர் பத்திரிகையின் ஊடகவியலாளர் நிரோஷ்குமார் இணைந்து கொண்டு தமது அளிக்கையினையும் வழங்கியிருந்தார். 

அதனைத் தொடர்ந்து இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் ஆலோசகர் அஷ்வினி நடேசன் அவர்கள் தகவலறியும் உரிமை மற்றும் “நிலையான அபிவிருத்தி இலக்குகள்” எனும் தலைப்பில் தனது அளிக்கையினை வழங்கியிருந்தார். கேள்வி பதில் பகுதியில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விகளுக்கு பதில்களையும் வழங்கியிருந்தார். 

பங்குபற்றியிருந்த பெரும்பாலான ஊடகவியலாளர்கள் கேள்விகளை எழுப்பியும் தமது கருத்துகளை வெளிப்படுத்தியும் மன்றத்தில் தமது பங்களிப்பினை வழங்கியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

News

வட மாகாண பாடசாலைகளில் அதிகரிக்கும் மாணவர் இடைவிலகல்கள்

க.பிரசன்னா கல்வி அமைச்சின் தகவல்களின் படி, 2022 ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சைக்கு வட மாகாணத்தில் தோற்றிய 17,627 மாணவர்களில் 2749 மாணவர்கள் வெட்டுப்புள்ளி மற்றும் அதற்கும்…

By In
News

மக்களின் பின்னூட்டல் மற்றும் பங்களிப்புகளற்ற உள்ளூராட்சி சபை வரவுசெலவு திட்டப் பிரேரணை

– சாமர சம்பத் ஆண்டு இறுதியில் அதாவது நவம்பர்-டிசம்பர் காலப்பகுதியில் பெரும்பாலான மக்கள் கவனம் செலுத்தும் முக்கிய விவகாரங்களில் வரவு செலவுத் திட்டமும்  ஒன்றாகும். தேசிய மட்டத்தில்,…

By In
News

கண்டி மாவட்டத்தில் தரிசு நிலமாக காணப்படும் 1813 ஏக்கர் வயல் காணிகள்

முகம்மது ஆசிக் இலங்கை  மன்னர் காலத்திலிருந்தே விவசாய நாடாகப் புகழ் பெறுவதற்கான  பிரதான காரணம் இந்நாட்டு மக்களின் பிரதான உணவு சோறு என்பதால் ஆகும். ஆகாயத்திலிருந்து விழும்…

By In
News

2016 – 2022 : வெளிநாடுகளில் 3742 இலங்கைத் தொழிலாளர்கள் மரணம்! 2602 பேரின் உடல்கள் நாட்டுக்கு வரவில்லை!

க.பிரசன்னா நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடிகளினால் ஏற்பட்டுள்ள வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, வேலைவாய்ப்பின்மை, வறுமை போன்ற பல்வேறு காரணங்களினால் சமீப காலங்களில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்றுச் செல்வோரின்…

By In

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *