News

தடை செய்யப்பட்ட உபரணங்களுக்கு கட்டப்பாடு விதித்தல் மங்களநாத் லியனாரச்சி – திருகோணமலை

By In

திருகோணமலை மாவட்டத்தில் 30,000 குடும்பங்கள் அளவில் தொழிலாக செய்து வருவது மீனவத் தொழிலையாகும். திருகோணமலையைச் சூழ உள்ள கடலில் குறிப்பிட்ட சிலர் தடைசெய்யப்பட்ட மீன்பிடி உபகரணங்களைக் கொண்டு செய்து வரும் மீன்பிடித் தொழிலால் அதிகமான மீனவர்களின் ஜீவனோபாய தொழில் பாதிகக்ப்பட்டு இருப்பதோடு மீன்பிடித் துறை அதிகாரிகளது நடவடிக்கையால் மீனவர்கள் மேலும் அதிருப்தியடைந்துள்ளனர். தடைசெய்யப்பட்ட உபகரணங்களுக்கு எதிராக மீன்பிடி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமை இவ்வாறான நிலைமைகளுக்கு காரணம் என்பது சிறிய அளவிலான மீனவத் தொழிலில் ஈடுபட்டுள்ள மீனவர்களது கருத்தாகும்.
பரவலாக திருகோணமலை மாவட்டத்தில் பயன்படுத்தப்பட்டு வருகின்ற தடை செய்யப்பட்ட உபரணங்களில் சிறிய கர வலை, தங்குஸ் வலை, இரவு நேர விளக்கு வலை என்றழைக்கப்படும் “லைட்கோஸ்ட்” டைனமைட் பயன்படுத்தல் ஆகிய முறைகள் பரவலாக பின்பற்றப்படுகின்ற மீன்பிடி முறைகளாகும். அதிலும் இலங்கை முழுவதற்கும் தடை செய்யப்பட்டுள்ள ஒரு முறையாக இருந்து வரும் லைட்கோஸ்ட் முறையானது திருகோணமலை மாவட்டத்திற்கு மாத்திரம் சில நிபந்தனைகளின் அடிப்படையில் அரசியல்வாதிகளின் தலையீட்டால் அனுமதிக்கப்பட்டிருக்கின்றது.
இந்த முறை காரணமாக ஒருசில மீனவர்களால் பரந்தளவிலான மீனவர்களது கடற்றொழிழுக்கு வயிற்றில் அடிக்கும் நிலை ஏற்பட்டிருக்கின்றது. நிபந்தனையுடன் அனுமதிக்கப்பட்டுள்ள கர வலை (ஹம்பிலி தெல்) முறையானது கடல் மைல் 7 இற்கு அப்பால் உள்ள கடலுக்கு அனுமதிக்கப்பட்டிருந்தாலும் கணிசமான மீனவர்கள் கரையை அண்மித்த கடற்பரப்பில் இந்த வலையை பயன்படுத்தி மீன்பிடித்து வந்தாலும் அதிகாரிகள் அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுப்பதில்லை என்பது ஏனைய மீனவர்களது கருத்தாகும்.
ஒருசில சந்தர்ப்பங்களில் ஏனைய மீனவர்களின் தகவலின் அடிப்படையில் இத்தகைய வலைமுறை மீனவர்களை கடற்படையினர் கைது செய்து மீன்பிடி அதிகாரிகளிடம் ஒப்படைத்தாலும் அவர்களை அனுமதிப்பத்திரம் இல்லை என்ற நிபந்தனையை மீறிய குற்றச்சாட்டின் அடிப்படையில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விடுவிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர் . ஆனாலும் ஏனைய பகுதிகளில் சட்டத்தின் அடிப்படையில் அத்தகைய வலைகளை கைப்பற்றி அரச உடைமையாக்கி அவற்றை அழித்துவிடுவதாக இந்த முறையை பயன்படுத்தாத ஏனைய மீனவர்கள் கருதுகின்றனர்.
தடை விதிக்கப்பட்ட மீன்பிடி உபகரணங்களைப் பயன்படுத்தி எத்தனை மீனவர்கள் அளவில் கைது செய்யப்பட்டுள்ளனர்? அவர்களுக்கும் அவர்களால் பயன்படுத்திய தடைசெய்யப்பட்ட கரவலை உட்பட உபகரணங்களுக்கு நடப்பதென்ன? என்ற விடயங்கள் மர்மமானதாகும். ஆனாலும் மீனவர்கள் இந்த செயற்பாடுகள் தொடர்பாக தகவல் அறியும் சட்டத்தின் ஊடாக தகவல்கள் கோரிமையால் மீனவ அதிகாரிகளது பலவிதமான முறைகேடுகள் பற்றிய தகவல்களை பெற்றுக்கொள்ள முடிந்திருக்கின்றது.
மீன்பிடித் திணைக்களத்தின் தகவலின் அடிப்படையில் 2018 ஜனவாரி முதல் செப்டம்பர் 30 ஆம் திகதி வரையில் சட்டவிரோதமான முறையை பயன்படுத்திய 436 மீனவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதோடு அவர்களில் மிகவும் குறைந்த எண்ணிக்கையானவர்களுக்கு எதிராக மாத்திரமே வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றது. அதுவும் அனுமதிப்பத்திரம் மீறல் என்ற சிறிய குற்றச்சாட்டுக்களின் அடிப்படையிலே வழக்குகளும் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை தெரிய வந்திருக்கின்றது.
சில சந்தர் ப்பங்களில் தடைசெய்யப்பட்ட மீன்பிடி உபகரணங்களைப் பயன்படுத்திய குற்றத்திற்காக கைதாகும் சில மீனவர்களை மீன்பிடி அதிகாரிகள் இலஞ்சம் பெற்றுக்கொண்டு விடுவித்து வருவதோடு, இவ்வாறு இலஞ்சம் பெற முற்பட்ட மீன்பிடித் திணைக்கள அதிகாரியொருவரை இலஞ்சம் மற்றும் மோசடிகள் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் அதிகாரிகள் இலஞ்சம் வாங்கும்போது அண்மையில் திருகோணமலையில் கைது செய்தமையும் குறிப்பிடத்தக்க நிகழ்வாகும்.
எவ்வாறாயினும் தவல் அறிவதற்கான சட்டத்தின் அடிப்படையில் மீனவர்கள் தடைசெய்யப்பட்ட உபகரணங்களை பயன்படுத்தி மீன் பிடிக்கும் தொழிலில் ஈடுபடுபவர்கள் தொடர்பாக தொடர்ச்சியாக தகவல்களை மீன்பிடி அதிகாரிகளிடம் கோரி வருவதால் மீன்பிடி திணைக்கள அதிகாரிகளுக்கு கடுமையான தலையிடி ஏற்பட்டிருக்கின்றது. அதன்படி கடந்த 06 மாத காலப்பகுதிக்குள் மாத்திரம் சட்டவிரோத மீன்பிடி உபகரணங்களை பயன்படுத்திய மீனவர்களை கைது செய்வதற்காக 111 சுற்றிவலைப்பு தேடுதல்களை அதிகாரிகள் மேற்கொண்டிருப்பதோடு தடை செய்யப்பட்டுள்ள மீன்பிடி உபகரணங்களை பயன்படுத்தும் மீனவர்களின் எண்ணிக்கை கணிசமான அளவில் குறைவடைந்திருப்பதாக திருகோணமலை மாவட்ட மீனவர்கள் கருதுகின்றனர்.
தடை செய்யப்பட்ட மீன்பிடி உபகரண பயன்பாடு திருகோணமலை மாவட்டத்தில் குறைவடைந்து வருவதால் ஏனைய மீனவர்களது மீன்பிடித் தொழிலில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டு வருவதோடு இந்த நிலைமைகள் மேலும் முன்னேற்றம் அடைய வேண்டும் என்பது திருகோணமலை மாவட்ட மீனவர்களது எதிர்பார்ப்பாகும்.

News

இளைஞர் பிரதிநிதிகளுக்கு வாய்ப்பளிக்காத துறைசார் மேற்பார்வைக்குழுக்கள்

க. பிரசன்னா பாராளுமன்ற தேர்தல் எதிர்வரும் நவம்பர் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், பாராளுமன்ற துறைசார் மேற்பார்வைக்குழுக்களுக்கு இளைஞர் பிரதிநிதிகளை அனுமதிக்கும் வகையில் உருவாக்கப்பட்ட திட்டம்…

By In
News

யாழ். வைத்தியசாலையின் கழிவகற்றலுக்கு 2023 இல் 7 கோடி ரூபா செலவு!

ந.லோகதயாளன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் கழிவகற்றல் செயல்பாட்டிற்கு கடந்த வருடம் 7 கோடி ரூபா நிதி செலவிடப்பட்டுள்ளமை தகவல் அறியும் சட்டத்தின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. நாட்டில் உள்ள…

By In
News

முன்னாள் ஜனாதிபதிகள் அனுபவிக்கும் சலுகைகள் என்ன?

க.பிரசன்னா முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்படும் சலுகைகள் தொடர்பில் சர்ச்சைகள் நீண்டு செல்லும் நிலையில் தொடர்ச்சியாக அவர்களுக்கான சலுகைகளுக்கு அதிக நிதியொதுக்கீடுகளை அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது. முன்னாள் ஜனாதிபதிகளுக்கான…

By In
News

அரச வைத்தியசாலையில் சேரிக்கப்படும் குருதி  தனியார் வைத்தியசாலைகளுக்கும் வழங்கப்படுகிறது

ந.லோகதயாளன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு தானமாக கிடைக்கும் குருதியில் ஒரு பகுதி தனியார் வைத்தியசாலைகளுக்கும் வழங்கப்படுவது தகவல் அறியும் சட்டத்தின் ஊடாக உறுதி செய்யப்பட்டுள்ளது.  யாழ். குடாநாட்டில்…

By In

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *