News

தகவல் அறியும் சட்டம் இலங்கை மின்சார சபை ஊழியர்களை விழிப்படையச் செய்தது

By In

இலங்கை மின்சார சபையால் நாட்டில் பல இடங்களில் பாத ஓரங்களில் போட்டுள்ள மின் கம்பங்கள் பொறுத்தமான இடங்களில் இல்லாமலும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலும் உள்ளன. ஒரு சில இடங்களில் உள்ள மின் கம்பங்கள் ஆபத்தை ஏற்படுத்தக் கூடிய வகையிலும் இடையுறாகவும் உள்ளதை அவதானிக்க முடிகின்றது. கண்டி மாவட்டத்தில் கண்ணங்கர வீதியல் சீவலி கந்தை என்ற இடத்தில் பொறுத்தப்பட்டுள்ள மின்கம்பங்களும் இவ்வாறான ஆபத்தான நிலையை எதிர்நோக்கி இருப்பவையாகும். வாகனப் போக்குவரத்து மற்றும் பொதுமக்கள் போக்குவரத்திற்கு இடையூராக உள்ளன. இத்த விடயத்தால் பல வீதி விபத்துக்களும் இடம்பெற்றுள்ளன.
கிராமவாசிகள் இந்த மின் கம்பம்களை பாதையில் இருந்து அகற்றி பொருத்மான பாதுகாப்பான இடத்தில் பொறுத்துமாறு பலமுறை அதிகாரிகைள கேட்டும் அதிகாரிகள் அதனை பொருட்படுத்தாமல் செவிடன் காதில் ஊதிய சங்காக இருந்து வருகின்றன.
இப்பகுதி இளைஞர்கள் குழுவொன்று தகவல் அறிவதற்கான சட்டத்தின் முக்கியத்தவத்தை அறிந்து கொண்ட பின்னர் இலங்கை மின்சார சபையின் அலதெனிய அலுவலகத்தில் தகவல் அறிவதற்கான விண்ணப்பப் படிவம் ஒன்றை சமர்ப்பித்து இது தொடர்பாக தகவல் கோர திட்டமிட்டனர். அதன்படி 2018.11.04 ஆம் திகதி குறித் மின்சார சபை காரியாலயத்தில் விண்ணப்பத்தை சமர்ப்பித்து தகவல் கோரினர். ஆனாலும் அந்த விண்ணப்பத்திற்கு பதிலளிக்கப்படவில்லை
எவ்hறாயினும் ஒருநாள் சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் இருந்து அதிகாரி ஒருவர் விண்ணப்பதாரியை தொலைபேசியில் அழைத்து மேலும் சில தகவல்களை கோரியுள்ளார் ஆனாலும் தகவல் அறிவதற்கான சட்டத்தில் குறிபிடப்பட்டுள்ளபடி விண்ணப்பதாரியின் கோரிக்கைக்கு மின்சார சபை அலுவலகம் உரிய காலத்தில் முறையாக பதிலளிக்க தவறிவிட்டது. இதில் இருந்து இவ்வாறான அதிகாரிகளுக்கு தகவல் அறிவதற்கான சட்டம் தொடர்பாக போதுமான அறிவு இல்லாததால் இச்சட்டத்திற்கு மதிப்பளிக்க தெரியாது என்ற விடயம் புலனாகின்றது.
அதனால் தகவல் சட்டம் தொடர்பாக அறிவூட்டல்கள் செய்யவும் மக்களை அது தொடர்பாக விழிப்படையச் செய்யவும் வேண்டிய தேவை உணரபப்டுகின்றது. அதனால் தகவல் சட்டம் பற்றி அறிந்துள்ள இளைஞர்கள் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் நல்லாட்சி மற்றும் ஜனநாயகத்தை பலப்படுத்தும் வகையில் அமெரிக்க உதவித் திட்டத்துடன் இணைந்து தகவல் அறிவதற்கான சட்டம் பற்றி பயிற்சி செயலமர்வொன்றை நடத்தியது. அந்த செயலமர்வில் பங்குபற்றிய அப்பிரதேசத்தைச் சேர்ந்த குழுவொன்று தகவல் அறிவதற்கான உரிமை சட்டம் பற்றி அறிந்து கொண்டவுடன் அந்த சட்டத்தை பன்படுத்தி இலங்கை மின்சார சபை அலுவலகத்தில் சமர்ப்பித்த விண்ணப்பம் தொடர்பான இந்த தகவலை சமர்ப்பித்தனர்.

News

எல்லைகள் வரையறுக்கப்படாது தனியார் பல்கலைக்கழகத்துக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ள கீரிமலை ஜனாதிபதி மாளிகை!

ந.லோகதயாளன் கீரிமலையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அமைத்த ஜனாதிபதி மாளிகையும் அதனைச் சூழவுள்ள பிரதேசமும் ஆண்டொன்றிற்கு 10 ஆயிரம் டொலர்களுக்கு தனியார் பல்கலைக் கழகத்திற்கு குத்தகைக்கு…

By In
News

யானை – மனித முரண்பாடும் அதிகரிக்கும் உயிரிழப்புக்களும் !

வீ.பிரியதர்சன் உலகில் வனவிலங்குகளுக்கும் மனிதர்களுக்குமான முரண்பாடுகள் மனித நாகரிகம் தோன்றிய காலம் முதல் தொடர்கதையாகி வருகின்றன. இதில் முக்கியமாக யானை – மனித முரண்பாட்டைக் குறிப்பிடலாம். இலங்கையில்…

By In
News, Uncategorized

இரத்தினபுரி மாவட்ட ஊடவியலாளர்களுக்கான தகவலறியும் உரிமைச் சட்டம் தொடர்பான பயிற்சிப்பட்டறை  

பொறுப்புக்கூறல் மற்றும் வெளிப்படைத்தன்மைக்கான தகவல் அறியும் உரிமைக் கட்டமைப்பை வலுப்படுத்துதல்: தகவல் அறியும் உரிமைச் சட்டம் (RTI) குறித்து ஊடகவியலாளர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துதல் எனும் தொனிப்பொருளில் RTI…

By In
News

சிறுவர்களின் உரிமைகளை பாதுகாக்கும் பொறிமுறை வலுப் பெற வேண்டும்!

வீ.பிரியதர்சன் சிறுவர் பாதுகாப்பு என்பது ஒரு கூட்டுப்பொறுப்பு, பிரச்சினைகளுக்குரிய தீர்வைப் பெறவே அனைவரும் முயற்சிக்கின்றனர். ஆனால் பிரச்சினைகள் வரும் முன் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதில்லை. இதற்கு முக்கிய…

By In

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *