News

தகவல் அறியும் உரிமை சட்டத்தால் பலப்படுத்தப்பட்ட யடிநுவர மற்றும் கடுகண்ணாவ பொது மக்களின் குரல்

By In

மகேந்திர ரந்தெனிய

இன்று தகவல் அறியும் சட்டம் மக்களுக்கு நெருக்கமான சட்டமாக மாறி வருகிறது. இந்தச் சட்டத்தின் மூலம், அரச மற்றும் பகுதியளவிலான அரச நிறுவனங்களிடமிருந்து பெற்றுக்கொள்ள முடியாத சில மறைக்கப்பட்ட தகவல்களை மக்கள் நேரடியாகப் பெற்றுக்கொள்ள முடியும். இது மோசடி, ஊழல் மற்றும் சமூக அநீதிக்கு எதிராக மக்கள் பெற்றுக்கொண்ட வெற்றியாகும். 

மக்களின் வரிப்பணத்தில் செயல்படுத்தப்படும் அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் பல்வேறு சேவைகளை மக்கள் நேரடியாகக் கேள்வி கேட்க முடியும் என்பதுடன் நிறுவனங்கள் அந்தத் தகவல்களைப் பெற்றுக்கொடுக்க கடமைப்பட்டுள்ளன. விண்ணப்பதாரர் தனக்குக் கிடைத்த தகவலில் திருப்தி அடையவில்லை என்றால், அவர் நியமிக்கப்பட்ட அதிகாரியிடமும் இறுதியாக தகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவிலும் மேல்முறையீட்டு நீதிமன்றத்திலும் புகார் செய்யலாம் மற்றும் சட்டத்தின் மூலம் தகவல்களைப் பெறுவதை தடுத்தவர்களையும் தண்டிக்கலாம்.    

இப் பின்னணியில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் யடிநுவர பொதுமக்களால் எவ்வாறு பயன்படுத்தப்பட்டது மற்றும் பகிரங்க அதிகார சபைகளில் அது எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பதை இந்தக் கட்டுரை ஆராய முயல்கிறது.

யடிநுவர தேர்தல் தொகுதியில் வாழும் மக்கள் 2016 ஆம் ஆண்டு 12 ஆம் இலக்க தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் பெறப்பட்டுள்ள தகவல் பெற்றுக்கொள்ளும் உரிமையை  (தகவல் அணுகல்) எவ்வாறு பயன்படுத்தியுள்ளார்கள் என்பது தொடர்பில் யட்டிநுவர பிரதேச செயலகம், யட்டிநுவர பிரதேச சபை மற்றும் கடுகண்ணாவ நகரசபை ஆகிய மூன்று பகிரங்க அதிகார சபைகளிடம் ஆய்வு செய்தபோது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி 182 பேர் இச் சட்டத்தைப் பயன்படுத்தி தகவல்களைப் பெற்றுள்ளனர் என்பது குறித்து பெற்றுக்கொண்ட தகவல்கள் பின்வருமாறு. 

யட்டிநுவர பிரதேச செயலகப் பிரிவு 

யட்டிநுவர தேர்தல் தொகுதியின் பிரதான அரச நிறுவனம் யட்டிநுவர பிரதேச செயலகமாகும். அவற்றில் 95  கிராமசேவகர் பிரிவில் வசிக்கும் 122,969 பேருக்கு குறித்த பிரதேச செயலகம் சேவை வழங்குகின்றது.

இந்நிறுவனம் பிரதேச செயலாளர், பிரதி பிரதேச செயலாளர் மற்றும் கணக்காளர், உதவி திட்டமிடல் பணிப்பாளர், மேலதிக பதிவாளர், நிருவாக உத்தியோகத்தர், நிருவாகக் கிராம உத்தியோகத்தர் மற்றும் 95 அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் 92 கிராம சேவை உத்தியோகத்தர்கள் உட்பட மொத்தம் 365 உத்தியோகத்தர்களை உள்ளடக்கிய பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள் பணியாற்றி வருகின்றனர். 

யட்டிநுவர பிரதேச செயலகத்தின் சேவைகளாகச் சிவில் பதிவு, அனுமதிப்பத்திரம் மற்றும் சான்றிதழ் வழங்கல், ஓய்வூதிய சேவைகள், சமூக நலன், சமுர்த்தி வேலைத்திட்டங்கள், கொள்வனவு மற்றும் அபிவிருத்தி திட்டங்களை நடைமுறைப்படுத்தல் என்பன மக்களுடன் நேரடியாகத் தொடர்புகொள்ளும் சேவைகளாகும். 

தகவல் அறியும் சட்டம் இதுவரை எவ்வாறு பயன்படுத்தப்பட்டது என்பது குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மேற்கொண்ட ஆய்வின்போது பின்வரும் தகவல்கள் பெற்றுக்கொள்ளப்பட்டன.

இதன்படி, 2016 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி, 08.02.2017 முதல் 14.11.2022 வரையிலான தகவல்களுக்கான கோரிக்கைகளின் எண்ணிக்கை 72 ஆகவும், தகவல் அறியும் உரிமை  சட்டத்தின் கீழ் தகவல் பெற்றுக்கொடுக்க முடியாத 11 தகவல் கோரிக்கை விண்ணப்பங்கள் பெறப்பட்டதாகவும் அந்தத் தகவல் கோரிக்கைகள் பகிரங்க அதிகார சபை நிறுவனம் தொடர்பானது அல்ல, சில தகவல் கோரிக்கைகள் தனிநபர் தொடர்பான தகவல்கள் என்ற காரணத்தால் குறித்த தகவல்களை வெளியிட முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டமை கவனிக்கத்தக்கது. 

பிரதேச செயலகத்திற்கு கிடைக்கப்பெற்ற பெரும்பாலான தகவல் கோரிக்கைகள் காணி உரிமையாளர்கள், காணிகளில் வசிப்பவர்கள், அரசாங்கத்தினால் வழங்கப்படும் கொடுப்பனவுகள் மற்றும் அதனைப் பெற்றுகொள்பவர்கள், ஓய்வூதிய தகவல்கள் எனப் பல்வேறு தகவல் கோரிக்கைகள் சமர்பிக்கப்பட்டிருந்ததுடன் கோரப்பட்ட தகவல்கள் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

நிராகரிக்கப்பட்ட தகவல் கோரிக்கைகளில், நிறுவனத்தின் முகாமைத்துவ சேவையில் பணிபுரிபவர்களின் சம்பள விபரங்கள், பிலிமத்தலாவ நகரில் பதிவு செய்யப்பட்ட வணிக வளாகங்கள், வாக்காளர் பட்டியல் பதிவு, இராணுவ சேவையை விட்டு விலகியதற்கான காரணம், தேயிலை தொழிற்சாலையின் நிலை சான்றிதழ் கோரல், தனியார் நிலத்தில் சாலை அமைத்தல் மற்றும் தனக்கு தொடர்பான தகவல் நேரடியாகக் கோராமல் இன்னொருவர் தொடர்பான தகவல்களைக் குறிப்பிட்டு தனக்கு ஏன் சமுர்த்தி வழங்கப்படவில்லை போன்றன உள்ளடங்குகின்றன.

அவைகள் எதுவும் மீண்டும் நியமிக்கப்பட்ட அதிகாரிக்குக் கிடைக்கப்பெறவில்லையெனக் குறிப்பிடப்பட்டுள்ளதுடன் பொதுவான தகவல் கோரிக்கை கடிதங்களுக்குப் பதிலாகக் கோரப்படும் தகவல்கள், தகவல் அறியும் உரிமை சட்டத்திற்கு அமைவாக விண்ணப்பிக்குமாறு மக்களை அறிவூட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

சில சந்தர்ப்பங்களில், சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்துபவர்கள் இருப்பது கண்டறியப்பட்டதுடன், குறிப்பிட்ட ஒருவர் அப்பகுதியில் நுண் கடன் பெற்றவர்களின் பதிவேட்டைக் கோரியதுடன் அது நிறுவனத்தில் இல்லாததால் நிராகரிக்கப்பட்டது. பின்னர் அந்தத் தொடர்பு எண்ணை அழைத்தபோது அந்த இலக்கம் பயன்பாட்டில் இல்லை என்பது கண்டறியப்பட்டது மேலும் குறித்த தகவல் கோரலானது வேறு ஏதாவது நோக்கத்திற்காக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுவதாக அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார். 

யட்டிநுவர பிரதேச சபை

மத்திய மாகாணத்தின் கண்டி மாவட்டத்தில் அமைந்துள்ள யட்டிநுவர பிரதேச சபையானது 26 வாக்காளர்கள் தொகுதியைக் கொண்டுள்ளதுடன் கங்கை பகுதி, மத்திய பகுதி, மலை பகுதியென மூன்று பிரதேசங்களை உள்ளடக்கியுள்ளதுடன் 152 கிராமங்கள் மற்றும் 34426 குடும்பங்களைக் கொண்டுள்ளது.  பிரதேச சபை எல்லைக்குள் மக்கள் தொகை சுமார் 110906 ஆகும். பிரதேச சபையின் அரசியல் கட்டமைப்பு இலங்கை பொதுஜன முன்னணி , ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, மக்கள் விடுதலை முன்னணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தேசிய மக்கள் கட்சி ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகளை கொண்ட  45 உறுப்பினர்களையும்  136 பணியாளர்களையும் கொண்டுள்ளது.

2017 முதல் 23.12.2022 வரை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கோரப்பட்ட தகவல்களின் எண்ணிக்கை 84, அதில் 72 பேருக்குத் தகவல் வழங்கப்பட்டுள்ளது. நிராகரிக்கப்பட்ட விண்ணப்பங்களின் எண்ணிக்கை 09 எனவும், நியமிக்கப்பட்ட அதிகாரியிடம் குறிப்பிடப்பட்ட எண்ணிக்கை 3 எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. நிராகரிக்கப்பட்ட தகவல் குறித்த ஆய்வில், குடிநீர் சுத்திகரிப்பு பணியாளர்கள் ஆட்சேர்ப்புக்கான நேர்காணல் குறித்து மூன்றாம் நபர்களினால் மேற்கொள்ளப்பட்ட கோரிக்கை மற்றும் இடம் குறிப்பிடாமல் சாலை அமைப்பது தொடர்பில் வினவிய தகவல் கோரல்கள் என்பவை நிராகரிப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

வேறொருவரின் கட்டுமானம் தொடர்பில் ஒப்புதல் பெறப்பட்டுள்ளதா? என்றும் அதன் நகலை தருமாறும் முன்வைக்கப்பட்ட கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டுள்ளது.  

கங்கை பிரதேச கூட்டுறவு சங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட திட்டத்தின் தகவல்களின் நகல் உரிமையாளரின் ஒப்புதலுக்கு எதிராக மூன்றாம் தரப்பினருக்கு வழங்க முடியாத காரணத்தால்  மறுக்கப்பட்ட தகவலில் சேர்க்கப்பட்டுள்ளது.

வழங்கப்பட்ட தகவல்களில், பொது பாதுகாக்கப்பட்ட நிலங்கள், யடிநுவர பாதசாரி சங்கிலி பாலம், அங்கீகரிக்கப்பட்ட வீட்டுத் திட்டங்களின் நகல்கள் , 2014 முதல் 2018 வரை வழங்கப்பட்ட ஒப்பந்தங்கள், பொதுக் கிணறுகள், கிரிமெடிய கழிவு முகாமைத்துவம் தொடர்பான தகவல்கள், 2020ல் 238 லட்சம் செலவழித்த ஒப்பந்தங்கள் மற்றும் அவற்றை மேற்பார்வையிட்ட பிரதேச சபை உறுப்பினர்கள் தொடர்பான தகவல்கள், நிலத்தைக் கையகப்படுத்தும்போது உரிமையாளருக்குத் தெரிவிக்கப்படாததற்கான காரணங்கள் (இப்படியொரு சம்பவம் இடம்பெறவில்லை), சபையின் சுயேச்சை உறுப்பினர்கள் தொடர்பில்,  வீதிகளைப் பெற்றுக்கொள்வதற்கான வர்த்தமானி அறிவித்தல், சாலை கோடுகள் மற்றும் ஒப்பந்தங்களின் நகல்கள் போன்ற 81 விண்ணப்பங்களுக்குத் தகவல் வழங்கப்பட்டுள்ளது. மூன்றாம் தரப்பினர் வினவியிருந்த தகவல்கள் தொடர்பில் குறித்த நபரின் அனுமதியுடன் பெற்றுத்தர முடியும் என மூன்றாம் நபருக்குத் தெரிவித்ததன் பின்னர் தகவல் அவசியம் இல்லையெனத் தெரிவிக்கப்பட்டதாக அதிகாரியொருவர் வாய்மொழியாகக் குறிப்பிட்டார்.  

கடுகண்ணாவ நகரசபை

நகர சபை தொடர்பான தகவல்கள் மின்னஞ்சல் செய்திமூலம் கோரப்பட்டதுடன்  அது தொடர்பான தகவல்கள் பதிவுத் தபாலில் கட்டுரையாளருக்கு வழங்கப்பட்டது.

இதன்படி பதினைந்து உறுப்பினர்களைக் கொண்ட கடுகண்ணாவ  நகரசபைக்கு இலங்கை பொதுஜன முன்னணியின் 08 உறுப்பினர்களும் ஐக்கிய தேசியக் கட்சியின் 06 உறுப்பினர்களும் மக்கள் விடுதலை முன்னணியின் 01 உறுப்பினரும் தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன் 80 பணியாளர்களையும் கொண்டுள்ளது.  கடுகண்ணாவ நகர சபை பதினைந்து கிராம சேவகர் பிரிவை உள்ளடக்கியுள்ளதுடன் பிரதேசத்தின் சனத்தொகை 14,717 ஆகும். தகவல் அறியும் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட விண்ணப்பங்களின் எண்ணிக்கை 24 ஆகும். தலைவரின் பதவிக்காலத்தில் தனிப்பட்ட வெளிநாட்டுப் பயணம் மற்றும் விடுப்புக்கான ஒப்புதல் தொடர்பான தகவல் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது மற்றும் ஒரு அதிகாரி ஓய்வு பெற்றுக்கொண்டமை தொடர்பான தகவல்கள் நியமிக்கப்பட்ட அதிகாரிக்கு அனுப்பப்பட்டன. 

கடவத்கம விஹாரவத்தை வீதி புனரமைப்பு தொடர்பான வழக்கு, படறேல்தெனிய பிளிமதலாவ  வீதியை இடையூறு விளைவிக்கும் விதமாக அமைக்கப்பட்ட சுவர் தொடர்பான வழக்கின் தகவல், விஹாரவத்தை கருகுத்தல வீதிக்குக் காணி சுவீகரிப்பு சட்டத்தின் கீழ் பெறப்பட்ட உத்தரவு மற்றும்  வர்த்தமானி வெளியிடப்பட்டிருந்தால் அதன் இலக்கம் மற்றும் தகவல்கள், பொது வீதியை மறித்துத் சுவர் அமைத்தல், மேலும்  2018/19 உள்ளாட்சி வரவு செலவுத்திட்ட ஆவணம், அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் அவற்றிற்கு செலவிடப்பட்ட பணம், 2019 இல் முடிக்கப்பட்ட திட்டங்களின் எண்ணிக்கை, கட்டிடத் திட்டத்தின் சான்றளிக்கப்பட்ட நகலைப் பெறுதல், ஒரு நெல் வயலை அகற்றி அங்கு ஹட் சிலவற்றை அமைத்துக் கராஜ் ஒன்றை நடாத்துதல் மற்றும் வயலை நிரப்புவதற்கு கமநல சேவை அனுமதிப்பத்திரம் பெறப்பட்டுள்ளதா என்ற தகவல்கள், காணி உரிமை கோரல் மற்றும் ஏனைய தகவல் விண்ணப்பங்கள் 11க்கும்  தகவல் பெற்றுக்கொடுத்தமை குறிப்பிடத்தக்கது. 

ஓய்வூதியம் தொடர்பான தகவல்கள், தனிப்பட்ட கோப்புகளின் 2 நகல், உள்ளுராட்சி மன்றத்தில் உள்ள அனைத்து வாகனங்களின் ஜூலை மற்றும் ஆகஸ்ட் ஓட்டுநர் பதிவுகள், வாடகை அடிப்படையில் பெறப்பட்ட வாகனங்களின் விவரங்கள், 2018/19 ஆண்டுகளுக்கான மாதாந்த எரிபொருள் செலவுகள், ஓட்டுநர்களின் மேலதிக நேர கொடுப்பனவுகள் போன்றவை தொடர்பில் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளதாகக்  குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. 

இதேவேளை தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்து அதிகாரிகள் போதிய அறிவு பெற்றிருந்த போதிலும், சாமானிய மக்களிடையே அவ்வளவாகப் புரிதல் இல்லாதது அவதானிக்கப்பட்டது.    

News

எல்லைகள் வரையறுக்கப்படாது தனியார் பல்கலைக்கழகத்துக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ள கீரிமலை ஜனாதிபதி மாளிகை!

ந.லோகதயாளன் கீரிமலையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அமைத்த ஜனாதிபதி மாளிகையும் அதனைச் சூழவுள்ள பிரதேசமும் ஆண்டொன்றிற்கு 10 ஆயிரம் டொலர்களுக்கு தனியார் பல்கலைக் கழகத்திற்கு குத்தகைக்கு…

By In
News

யானை – மனித முரண்பாடும் அதிகரிக்கும் உயிரிழப்புக்களும் !

வீ.பிரியதர்சன் உலகில் வனவிலங்குகளுக்கும் மனிதர்களுக்குமான முரண்பாடுகள் மனித நாகரிகம் தோன்றிய காலம் முதல் தொடர்கதையாகி வருகின்றன. இதில் முக்கியமாக யானை – மனித முரண்பாட்டைக் குறிப்பிடலாம். இலங்கையில்…

By In
News, Uncategorized

இரத்தினபுரி மாவட்ட ஊடவியலாளர்களுக்கான தகவலறியும் உரிமைச் சட்டம் தொடர்பான பயிற்சிப்பட்டறை  

பொறுப்புக்கூறல் மற்றும் வெளிப்படைத்தன்மைக்கான தகவல் அறியும் உரிமைக் கட்டமைப்பை வலுப்படுத்துதல்: தகவல் அறியும் உரிமைச் சட்டம் (RTI) குறித்து ஊடகவியலாளர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துதல் எனும் தொனிப்பொருளில் RTI…

By In
News

சிறுவர்களின் உரிமைகளை பாதுகாக்கும் பொறிமுறை வலுப் பெற வேண்டும்!

வீ.பிரியதர்சன் சிறுவர் பாதுகாப்பு என்பது ஒரு கூட்டுப்பொறுப்பு, பிரச்சினைகளுக்குரிய தீர்வைப் பெறவே அனைவரும் முயற்சிக்கின்றனர். ஆனால் பிரச்சினைகள் வரும் முன் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதில்லை. இதற்கு முக்கிய…

By In

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *