News

தகவல் அறியும் உரிமைச் சட்டத்திற்கு 5 ஆண்டுகள்

By In

இலங்கையில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் (RTI) நடைமுறைப்படுத்தப்பட்டு பிப்ரவரி 3ஆம் திகதியுடன் 5 ஆண்டுகள் நிறைவடைகின்றது. 2016 ஆம் ஆண்டு பெப்ரவரி 03 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு பொது அதிகாரசபைகளால் தகவல் வழங்கப்படுவதைத் தொடர்ந்து 2016 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 04 ஆம் திகதி 2016 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கையெழுத்திட்டதன் மூலம் பிரஜைகளின் தகவல் அறியும் உரிமை நடைமுறைக்கு வந்தது.  

சிவில் மற்றும் அரசியல் உரிமையான தகவல் அறியும் உரிமை, இலங்கைப் பிரஜைகளாகிய எமக்குக் கிடைத்த மாபெரும் சாதனையாகும். கடந்த ஐந்தாண்டுகளில், இச்சட்டத்தின் பலனைப் பொது மக்கள் அனுபவித்த பல சம்பவங்கள் உள்ளன. 

இந்த நன்மைகள், கிராமங்களிற்கான வீதிகள் அமைப்பது, ஒரு கிராமத்திற்கு தண்ணீர் அல்லது மின்சார வசதி பெறுவது, அரசாங்கத்தின் அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதிகளை அறிவதற்கு, விண்ணப்பித்த வேலைக்கு ஆட்களை தேர்வு செய்வதற்கான அளவுகோல் பற்றிய தகவல்களைப் பெறுவது, பொது நிதி தொடர்பான முறைகேடுகள், அரசு அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளின் பொறுப்புக்கூறல்,  தொடர்பான ஆழமான விசாரணைகள் வரை. இருப்பினும், தொற்றுநோய் உள்ளிட்ட சமீபத்திய நிகழ்வுகள் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மீதான பொதுமக்களின் நம்பிக்கையையும் நம்பகத்தன்மையையும் குறைத்துள்ளன.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் ஐந்தாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, தகவல் அறியும் உரிமைச் சட்டம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் (SLPI) ஜனவரி 2022, 19 மற்றும் 20 ஆம் திகதிகளில் நாரஹேன்பிட்டி, கொழும்பு கோட்டை மற்றும் பொரளை ஆகிய பகுதிகளில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் தொடர்பான துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தனர். 

இந்தச் சட்டம் குறித்த விழிப்புணர்வைப் பற்றி பொதுமக்களிடம் தற்செயலாக கேள்வி எழுப்பியதில், பதிலளித்தவர்களில் 70%க்கும் அதிகமானோர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைப் பற்றி அறிந்திருக்கவில்லை என்பதை SLPI கண்டறிந்தது. சுமார் 15% பேர் அத்தகைய சட்டமூலத்தைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறார்கள், ஆனால் அதன் விதிகள் பற்றி தெளிவான விளக்கம் இல்லை. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல்களைப் பெறுவதற்கான செயல்முறையைப் பற்றிய தெளிவான அறிவு ஒரு சிலருக்கு மட்டுமே இருந்தது. பதிலளித்தவர்களில் 4% மட்டுமே இதற்கு முன்பு RTI ஐப் பயன்படுத்தியிருக்கின்றனர், மேலும் சிலர் RTI கோரிக்கைகளை தாக்கல் செய்திருந்தாலும், கோரப்பட்ட தகவலைப் பெற முடியவில்லை என்று கூறியிருந்தனர். 

நாரஹேன்பிட்டி, கொழும்பு கோட்டை மற்றும் பொரளை வீதிகளில் அனைத்துத் வயது தரப்பினரையும் சேர்ந்த ஆண்கள், பெண்கள், இளைஞர்கள் மற்றும் முதியவர்கள் என அனைவரையும் எமது எழுந்தமானமாக நாம் சந்தித்தோம்.  இருப்பினும், தகவல் அறியும் உரிமைச் சட்டம் அமுலுக்கு வந்து ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகும், பொது மக்களிடையே சட்டம் பற்றிய விழிப்புணர்வு மிகவும் குறைவாகவே உள்ளது. தகவல் அறியும் உரிமையின் மீது பொதுமக்களுக்கு நம்பிக்கையை வளர்ப்பதற்காக, சட்டம் குறித்த சிவில் சமூக விழிப்புணர்வை மேலும் அதிகரிக்க வேண்டியதன் அவசியத்தை இந்த அனுபவம் சான்றளித்தது. 

தகவல் அறியும் உரிமை பிரஜைகளின் உரிமையாக பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இலங்கையின் அரசியலமைப்பின் ஊடாக பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள இந்த உரிமையைப் பயன்படுத்துவதன் மூலம் நிர்வாகச் செயற்பாட்டில் பங்கேற்பது பிரஜையின் கடமையாகும். 

News, Uncategorized

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மக்கள் பிரதிநிதிகளின் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான தகவல்களைக் கோர முடியுமா?

தகவல் அறியும் உரிமைச் சட்டம், அதன் முக்கியத்துவம் மற்றும் RTI சட்டம் பற்றிய பொதுமக்களின் புரிதலை மேம்படுத்தும் நோக்கத்துடன், இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் சமூக ஊடக தளங்களில்…

By In
News

வவுனியா மாவட்டத்தில் பச்சிளம் குழந்தைகள் இறப்பது ஏன்?

கடந்த பெப்ரவரி மாதம் வவுனியா, பொது வைத்தியசாலையில் பிறப்பின் போது குழந்தைகள் அதிகளவில் இறப்பதாக செய்திகள் பிரதான ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் வெளியாகியிருந்தன. பாதிக்கப்பட்டவர்கள் தமது குழந்தை…

By In
News, Uncategorized

2021 இல் 4180 கப்பல்கள் இலங்கைக்கு வந்துள்ளன!

பட்டுப் பாதையில் இலங்கை மிகவும் சுறுசுறுப்பான மையமாக காணப்படுகின்றது. அதுமட்டுமின்றி, மாலுமிகள் மத்தியில் இலங்கை ஒரு பிரபலமான இடமாகும். இந்தக் காரணங்களால் இலங்கைத் துறைமுகங்களுக்கு ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான…

By In
News, Uncategorized

‘மௌபிம’ மற்றும் ‘சிலோன் டுடே’ ஆகிய பத்திரிகைகளில் பணிபுரியும் செய்திப்பிரிவு ஊடகவியாளர்களுக்கான தகவல் அறியும் உரிமைச் சட்டம் தொடர்பான பயிற்சிப்பட்டறை

இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் தகவல் அறியும் உரிமைப் பிரிவினால் 2022 ஆம் ஆண்டு மார்ச் 16 ஆம் திகதி ‘மௌபிம’ மற்றும் ‘சிலோன் டுடே’ ஆகிய பத்திரிகைகளில்…

By In

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *