News

கல்நேவ மக்களுக்கு கேட்போர் கூட கதவை திறக்க தகவல் சட்டம் உதவியது

By In

விளையாட்டு மற்றும் சுதந்திரமாக கருத்துக்களை வெளியிடுதல் ஆகிய மனித சுதந்திரங்கள் மானிட வாழ்வில் முக்கியமான அம்சங்களாக கருதப்படுகின்றன. பௌதீக மற்றும் உள ரீதியான ஆரோக்கியம் நாட்டிற்கு சாதகமாக தொழிலாளர் படையை உருவாக்க உதவியாக அமைகின்றது. ஒவ்வொரு பிரதேச செயலகமும் அதன் நிர்வாக எல்லைக்குள் வாழும் மக்களின் சுக வாழ்வுக்காக அவசியமான பௌதீக மற்றும் உள ரீதியான மேம்பாட்டு வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டியது கட்டாய தேவையாகும்.
வளமான வாழ்க்கைக்கு கலைத்துறையும் பிரதான பங்களிப்பை செய்து வருகின்றது. மேடை நாடகங்கள், இசை, நடனம் உட்பட ஏனைய கலை நிகழ்ச்சிகளும் இதில் முக்கியமான பங்கை செய்து வருகின்றன. இத்துறைகளில் திறமைகளை வெளிப்படுத்தி மகிழ்வதற்கு வசதிகள் காணப்பட வேண்டும்.
துரதிஷ்டவசமாக மகக்ளுக்கு போதுமான அளவில் இந்த வசதிகள் கிடைப்பதில்லை. கல்நேவ மக்களும் இதில் விதிவிலக்காக இருக்கவில்லை. அப்பிரதேச சபையின் நிதி ஒதுக்கீட்டில் கேட்போர் கூடம் ஒன்று நிர்மாணிக்கப்பட்டதாயினும் 02 வருடங்களுக்கு மேலாக அதனை மக்கள் பயன்பாட்டிற்கு வழங்க அப்பிரதேச சபை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இக்காலப் பகுதிக்குள் அந்த கட்டிடத்தை சூழ பற்றைக் காடுகள் வளர்ந்து கட்டிடம் கவனிப்பாரற்றதாக இருந்து வந்ததோடு அதுபற்றி பலமுறை அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வந்த போதும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.
தகவல் அறிவதற்கான சட்டம் பற்றிய கலந்துரையாடல் அப்பிரதேச மக்களுக்கு கை கொடுத்தது எனலாம். இலங்கை பத்திரிகை ஸ்தாபனம், அமெரிக்க உதவித்திட்டத்துடன் இணைந்து தகவல் மற்றும் தொடர்பாடல் தகவல் அறிவதற்கான சட்டம் பற்றி நடத்திய பயிற்சி செயலமர்வொன்று நடத்தப்பட்டது. இந்த செயலமர்வில் கல்நேவ பகுதி இளைஞர்களும் பங்குபற்றினர். அவர்கள் தகவல் அறிவதற்கான சட்டத்தின் முக்கியத்துவத்தை புரிந்துகொண்டனர்.
அதன்படி கிரமத்தை சேர்ந்த குழுவொன்று தகவல் அறிவதற்கான சட்டத்தின் அடிப்படையில் 2018 டிசம்பரில் இந்த கேட்போர் கூடம் பற்றிய தகவல்களை கோரி விண்ணப்ப படிவம் ஒன்றை கல்நேவ பிரதேச செயலகத்தில் சமர்ப்பித்தனர். எனினும் RTI சட்டத்தில் சொல்லப்பட்ட காலப்பகுதிக்குள் தகவல் கோரிய விண்ணப்பத்திற்கு பதில் வழங்கப்படவில்லை. ஆனாலும் கேட்போர் கூட கட்டிடத்தை சூழ உள்ள காடுகள் துப்புறவு செய்யப்பட்டு விரைவில் திறந்து வைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றது என்பதை மக்களால் புரிந்துகொள்ள முடிந்தது.
கேட்போர் கூ கதவை திறப்பதற்கு தகவல் சட்டம் உதவியதாக கிராம மக்கள் கருதுகின்றனர். அரச துறையிலான வீன் விரயத்தை தடுப்பதற்கும் ஆட்சித்துறையின் தின் விருத்திக்கும் தகவல் அறிவதற்கான உரிமைச்சட்டம் பயன்படுகின்றது என்பதை அவர்கள் நம்புகின்றனர்.
கிரம மக்கள் கேட்போர் கூடம் திறக்கப்படும் நாளை எதிர்பார்த்திருப்பதோடு அவர்களது குழந்தைகளின் கலைத்துறையிலான திறமைகளை வெளிப்படுத்த சந்தர்ப்பம் கிடைக்கும் என்றும் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.
தகவல் அறிவதற்கான சட்டம் அவர்களுக்கு நம்பிக்கை ஊட்டியதாக கருதுகின்றனர். தகவல் சட்டம் இல்லாதிருந்தால் அரச அதிகாரிகளை ஒருபோதும் கேள்வி எழுப்ப முடியாது. இந்த தகவல் நல்லாட்சி மற்றும் ஜனநாயகத்தை பலப்படுத்தும் வகையில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனம், அமெரிக்க உதவித் திட்டத்துடன் இணைந்து தகவல் அறிவதற்கான சட்டம் பற்றி நடத்திய பயிற்சி செயலமர்வில் பங்குபற்றிய இளைஞர்களால் சமாப்பிக்கப்பட்டதாகும்.

News

இளைஞர் பிரதிநிதிகளுக்கு வாய்ப்பளிக்காத துறைசார் மேற்பார்வைக்குழுக்கள்

க. பிரசன்னா பாராளுமன்ற தேர்தல் எதிர்வரும் நவம்பர் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், பாராளுமன்ற துறைசார் மேற்பார்வைக்குழுக்களுக்கு இளைஞர் பிரதிநிதிகளை அனுமதிக்கும் வகையில் உருவாக்கப்பட்ட திட்டம்…

By In
News

யாழ். வைத்தியசாலையின் கழிவகற்றலுக்கு 2023 இல் 7 கோடி ரூபா செலவு!

ந.லோகதயாளன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் கழிவகற்றல் செயல்பாட்டிற்கு கடந்த வருடம் 7 கோடி ரூபா நிதி செலவிடப்பட்டுள்ளமை தகவல் அறியும் சட்டத்தின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. நாட்டில் உள்ள…

By In
News

முன்னாள் ஜனாதிபதிகள் அனுபவிக்கும் சலுகைகள் என்ன?

க.பிரசன்னா முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்படும் சலுகைகள் தொடர்பில் சர்ச்சைகள் நீண்டு செல்லும் நிலையில் தொடர்ச்சியாக அவர்களுக்கான சலுகைகளுக்கு அதிக நிதியொதுக்கீடுகளை அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது. முன்னாள் ஜனாதிபதிகளுக்கான…

By In
News

அரச வைத்தியசாலையில் சேரிக்கப்படும் குருதி  தனியார் வைத்தியசாலைகளுக்கும் வழங்கப்படுகிறது

ந.லோகதயாளன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு தானமாக கிடைக்கும் குருதியில் ஒரு பகுதி தனியார் வைத்தியசாலைகளுக்கும் வழங்கப்படுவது தகவல் அறியும் சட்டத்தின் ஊடாக உறுதி செய்யப்பட்டுள்ளது.  யாழ். குடாநாட்டில்…

By In

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *