News

அரச துறைகளிலான வேலைவாய்ப்பு முறையில் மாற்றத்திற்கு தகவல் சட்டம் வழிவகுத்தது

By In

அரச துறைகளிலான தொழில் வாய்ப்புக்களுக்கு ஆட்சேர்பபு செய்யும் போது தேவையான தகைமைகளுக்கு மேலதிகமாக ஆதிக்கம் செலுத்துவது அரசியல் செல்வாக்கு அல்லது வேறும் கையாடல்களாகும். அரசாங்க பாடசாலைகளுக்கு ஆசிரியர்களை நியமிக்கும் போது இவ்வாறான நடைமுறைகளும் பின்பற்றப்படுகின்றன.

2017 ஆம் ஆண்டு அரசாங்க வர்த்தமாணி அறிவித்தல் மூலம் அரசாங்க பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர்களை நியமிப்பதற்கான விண்ணப்பங்கள் கேரப்பட்டன. அதற்கான தகுதிகாண் பரிட்சையும் நடத்தப்பட்டது ஆனால் ஆங்கில மொழி மூலம் தோற்றியவர்களது பெறுபேறுகள் வெளியிடப் பட்டதாயினும் ஏனைய மொழி மூலம் எவரும் சித்தியடைந்ததாக அறிவிக்கப் படவில்லை. சிங்கள மொழி மூலம் தோற்றியவர்கள் அவர்களுக்கு சமமான வாய்ப்பு வழங்கப்படவில்லை என்று தெரிவித்தனர்.

இதனால் பாதிக்கப்பட்டவர்கள் குறிப்பிட்ட விடயம் தொடர்பாக அதிகாரிகளை கேள்வி எழுப்புவதற்காக 2016 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க தகவல் அறிவதற்கான சட்டத்தை பற்றி அறிந்து கொண்ட பின்னர் அதனை பயன்படுத்த உத்தேசித்தனர். இந்த பரீட்சை தொடர்டபாகவும் உரிய இடங்களுக்கான ஆட்சேர்ப்பு நடைமுறை மற்றும் நியமனம் தொடர்பாக தகவல் கோரி 2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தகவல் அறிவதற்கான விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பித்தனர்.

இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் நல்லாட்சி மற்றும் ஜனநாயகத்தை பலப்படுத்தும் வகையில் அமெரிக்க உதவித் திட்டத்துடன் இணைந்து தகவல் அறிவதற்கான சட்டம் பற்றி பயிற்சி செயலமர்வொன்றை நடத்தியது. அந்த செயலமர்வில் பங்குபற்றிய இவ்வாறாக பாதிக்கப்பட்டவர்கள் தகவல் அறிவதற்கான உரிமை சட்டம் பற்றி அறிந்து கொண்டவுடன் அந்த சட்டத்தை பன்படுத்தி இவ்வாறான ஏற்கனவே அவர்களால் அதிகாரிகளை நீதி கோரி கேள்வி எழுப்புவதற்கு அச்சப்பட்ட விடயங்கள் தொடார்பாக கேள்வி கேட்பதற்கு சிறந்த வழி என்பதை புரிந்துகொள்ள முடிந்தது.
அதனால் இந்த செயலமர்வில் பங்குபற்றிய இளைஞர்கள் மக்களை பாதித்துள்ள பல முக்கியமான விடயங்கள் தொடர்பாக தகவல் சட்டத்தை பயன்படுத்தி எவ்வாறு நிவாரணங்களை பெறுவது என்பது தொடர்பாக அறிவூட்டல் செய்வதாகவும் தெரிவித்தனர்.
இந்த விடயமானது இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் நல்லாட்சி மற்றும் ஜனநாயகத்தை பலப்படுத்தும் வகையில் அமெரிக்க உதவித் திட்டத்துடன் இணைந்து நடத்திய தகவல் அறிவதற்கான சட்டம் பற்றிய பயிற்சி செயலமர்வில் பங்குபற்றிய குழுவினரால் சமர்ப்பிக்கப்பட்டதாகும்.

News

எல்லைகள் வரையறுக்கப்படாது தனியார் பல்கலைக்கழகத்துக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ள கீரிமலை ஜனாதிபதி மாளிகை!

ந.லோகதயாளன் கீரிமலையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அமைத்த ஜனாதிபதி மாளிகையும் அதனைச் சூழவுள்ள பிரதேசமும் ஆண்டொன்றிற்கு 10 ஆயிரம் டொலர்களுக்கு தனியார் பல்கலைக் கழகத்திற்கு குத்தகைக்கு…

By In
News

யானை – மனித முரண்பாடும் அதிகரிக்கும் உயிரிழப்புக்களும் !

வீ.பிரியதர்சன் உலகில் வனவிலங்குகளுக்கும் மனிதர்களுக்குமான முரண்பாடுகள் மனித நாகரிகம் தோன்றிய காலம் முதல் தொடர்கதையாகி வருகின்றன. இதில் முக்கியமாக யானை – மனித முரண்பாட்டைக் குறிப்பிடலாம். இலங்கையில்…

By In
News, Uncategorized

இரத்தினபுரி மாவட்ட ஊடவியலாளர்களுக்கான தகவலறியும் உரிமைச் சட்டம் தொடர்பான பயிற்சிப்பட்டறை  

பொறுப்புக்கூறல் மற்றும் வெளிப்படைத்தன்மைக்கான தகவல் அறியும் உரிமைக் கட்டமைப்பை வலுப்படுத்துதல்: தகவல் அறியும் உரிமைச் சட்டம் (RTI) குறித்து ஊடகவியலாளர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துதல் எனும் தொனிப்பொருளில் RTI…

By In
News

சிறுவர்களின் உரிமைகளை பாதுகாக்கும் பொறிமுறை வலுப் பெற வேண்டும்!

வீ.பிரியதர்சன் சிறுவர் பாதுகாப்பு என்பது ஒரு கூட்டுப்பொறுப்பு, பிரச்சினைகளுக்குரிய தீர்வைப் பெறவே அனைவரும் முயற்சிக்கின்றனர். ஆனால் பிரச்சினைகள் வரும் முன் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதில்லை. இதற்கு முக்கிய…

By In

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *