News

வன பாதுகாப்புத் திணைக்களத்தின் தகவல் தாமதங்கள்

By In

சரியான தகவலின் பண்புகள் என்ன? அது துல்லியமான, பொருத்தமான, முழுமையான, தெளிவான, நம்பகமான மற்றும் சரியான நேரத்தில் வழங்கப்படுவதாக இருக்க வேண்டும்.

கோரப்பட்ட தகவல் வழங்கப்படுமா இல்லையா என்பது குறித்த முடிவைப் பற்றி ஒரு தகவல் அதிகாரி தகவல் கோருபவருக்கு பதினான்கு வேலை நாட்களுக்குள் தெரியப்படுத்த வேண்டும் என்று தகவல் உரிமைச் சட்டம் கூறுகிறது. ஆகையால், ஒரு தகவல் அறியும் விண்ணப்பதாரர் குறிப்பிட்ட பொது அதிகாரத்திடமிருந்து ‘முடிவு நிலுவையில்’ கடிதத்தைப் பெற காத்திருக்க வேண்டிய அதிகபட்ச நேரம் இதுவாகும்.

ஆனால் இது எப்போதும் இவ்வாறு நடப்பதில்லை. தகவல் கோருபவர் ஒரு மாதத்திற்கும் மேலாக எந்த விதமான பதிலும் பெறாமல் காத்திருக்கும் சந்தர்ப்பங்களும் அதிகம். ஆயினும் ஒருவர் காலவரையின்றி தகவலுக்கு காத்திருக்க முடியாது; இதனால் மேன்முறையீடு செய்ய வேண்டிய அவசியமும் எழுகிறது. சிங்கராஜ மழைக்காடு தொடர்பான தகவல்களைக் கோரி இலங்கையின் வன பாதுகாப்புத் திணைக்களத்திற்கு தகவல் அறியும் விண்ணப்பங்கள் அனுப்பப்பட்ட சந்தர்ப்பத்திலும் நிகழ்ந்தது இதுவே.

தாமதமாக பதிலளிப்பதால் தகவல் காலாவதியாகிவிடக்கூடும் என்பதால், தேவையான தகவல்களை நேரத்துடன் பெறுவது கோரிக்கையாளருக்கு முக்கியமானதே. காலாவதியாகிய தகவல் கோரிக்கையாளருக்கு பயனளிக்காமல் போய்விடக்கூடும்.

சில அரசாங்க அதிகாரிகள் நாங்கள் தகவல்களைக் கேட்கும்போது அதற்கேற்றவாறு சிறப்பாக செயல்படுகின்றனர் என்பதும் உண்மைதான். என்றாலும், ஒவ்வொரு பொது அதிகாரமும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைப் புரிந்துகொள்வதற்கும் பின்பற்றுவதற்கும் முயற்சிப்பது முக்கியமாகும்.

News

பொருளாதார நெருக்கடியால் தொழில்தேடி வெளிநாடு செல்லும் இலங்கையர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

ந.லோகதயாளன் நாட்டில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட பின்னர் தொழில்வாய்ப்புக்காக வெளிநாடுகளுக்குச் செல்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்திருப்பதை தகவல் அறியும் சட்டத்தின் கீழ்  மாவட்டச் செயலகங்கள் மற்றும் வெளிநாட்டு…

By In
News

நுவரெலியாவில் சட்டவிரோதமான கட்டுமானங்களின் பின்னணியில் அரசியல் அதிகாரமா?

ஆர்.எப்.எம் சுஹேல்- நுவரெலியா உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிட வேட்புமனுத் தாக்கல் செய்திருந்த வேட்பாளர்கள் உட்பட பலரது வீடுகள் உரிய விதிமுறைகளைப் பேணாது சட்டவிரோதமான முறையில் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக…

By In
News

தேசிய பாடசாலை தொடர்பான கட்டுக்கதையும் ஆசிரியர் வெற்றிடங்களும்

மகேந்திர ரந்தெனிய மூன்று வருடங்களாகக் கல்வி சீர்திருத்தக் குழுக்களுக்குப் பல கோடிக்கணக்கில் பணம் செலவழித்தும் எந்தப் பலனும் கிடைக்கப்பெறவில்லை என்பதை ஊடகங்கள் அவ்வப்போது வெளிப்படுத்திவருகின்றதை  காணக்கூடியதாக உள்ளது….

By In
News

தொடரும் இலங்கை – இந்திய மீனவர் கைதுகள்!

க.பிரசன்னா இலங்கை – இந்திய மீனவர்களின் பிரச்சினை நீண்ட வரலாற்றைக் கொண்டது. கச்சத்தீவு இலங்கைக்கு வழங்கப்பட்ட பின்னர் ஆரம்பமான பிரச்சினை, இப்போது சட்டவிரோத மீன்பிடி முறையினால் வேறு…

By In

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *