News

தொழிற்பயிற்சி மூலம் மேலும் வாய்ப்புகள்

By In

ஒவ்வொரு ஆண்டும் G.C.E. சாதாரண தர மற்றும் உயர் தர பரீட்சைகளை எழுதும் ஆயிரக்கணக்கான மாணவர்களில் அனைவருமே எதிர்பார்த்த அளவிற்கேற்ப சிறந்த புள்ளிகளைப் பெறுவதில்லை. மேலும் முக்கியமாக, அனைவரும் இப்பரீட்சைகளில் தேர்ச்சி பெறுவதுமில்லை. இவ்வாறானோருக்கு அடுத்த படியாக அமைவதென்ன? இச்சந்தர்பங்களில் இலங்கை தொழிற் பயிற்சி அதிகாரசபை மிகவும் முக்கியத்துவமானதொன்றாக விளங்குகின்றது. சாதாரண தரப் பரீட்சையிலேனும் சிற்பியடைந்த அல்லது பரீட்சைகுத் தோற்றுவித்த இளைஞர்களுக்கு இப்போது பலவிதமான தொழிற்பயிற்சி பாடநெறிகளைக் கற்கும் வாய்ப்பு எம் நாட்டில் உள்ளது. இலங்கை தொழிற் பயிற்சி அதிகாரசபையின் பாடநெறிகள் மற்றும் விதிமுறைகள் குறித்த சில முக்கிய தகவல்களைப் பெறுவதற்காக, தகவல் அறியும் உரிமை (RTI) விண்ணப்பம் ஒன்று சமர்ப்பிக்கப்பட்டது. தொழிற் பயிற்சி அதிகாரசபையின் படி, வெவ்வேறு பாடநெறிகளைக் கற்பதற்கு வெவ்வேறு தகுதிகள் தேவைப்படும். உதாரணமாக, ஒரு ஆட்டோமொபைல் மின்னியல் வல்லுநருக்கான (automobile electrician) தேசிய சான்றிதழ் பாடநெறியில் சேர விரும்பும் ஒரு நபர் குறைந்தது ஆறு சாதாரண தர பரீட்சை பாடங்களில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது தொடர்புடைய துறையில் NVQ தரம் 3 (NVQ Level 3) தகுதி பெற்றிருக்க வேண்டும். ஆனால் தாவர வளர்ப்பு மேம்பாட்டு உதவியாளருக்கான தேசிய சான்றிதழுக்காக படிப்பதற்கு, ஒருவர் குறைந்தபட்சம் G.C.E. சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றுவித்தவராகவே இருத்தல் வேண்டும். ‘National Diploma – Electronic Technology’ போன்ற சில பாடநெறிகள் படிப்பதற்கு, தொடர்புடைய NVQ தரம் 3 அல்லது 4 பாடநெறியை முடித்தவராக அல்லது G.C.E. உயர் தரத்தில் தொழில்நுட்ப துறையில் அல்லது பிற தொடர்புடைய துறையில் மூன்று பாடங்களில் சிற்பி பெற்றவராக இருக்க வேண்டும். வயது அடிப்படையிலும் சேர்க்கை வரையறைகள் உள்ளன. தொழிற் பயிற்சி அதிகாரசபையின் படி, இப்பாடநெறிகளை ஆரம்பிக்கக்கூடிய குறைந்தபட்ச வயது பதினாறு ஆகும். பாலின அடிப்படையில் நுழைவு கட்டுப்பாடுகள் இல்லை என்றும் தொழிற் பயிற்சி அதிகாரசபையால் தெரிவிக்கப்பட்டது. நாட்டின் இளைஞர்களின் எதிர்காலம் என்பது முக்கியமானதொரு விடயம்; எனவே, பல்கலைக்கழகங்களுக்கு செல்ல முடியாதவர்களுக்கு தொழில் பயிற்சி கிடைப்பதற்கான இவ்வகை வாய்ப்பு பலரது எதிர்காலங்களை மேம்படுத்தும் திறன் கொண்டது என்பதை பலரும் ஒப்புக்கொள்வார்கள்.

News

பொருளாதார நெருக்கடியால் தொழில்தேடி வெளிநாடு செல்லும் இலங்கையர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

ந.லோகதயாளன் நாட்டில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட பின்னர் தொழில்வாய்ப்புக்காக வெளிநாடுகளுக்குச் செல்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்திருப்பதை தகவல் அறியும் சட்டத்தின் கீழ்  மாவட்டச் செயலகங்கள் மற்றும் வெளிநாட்டு…

By In
News

நுவரெலியாவில் சட்டவிரோதமான கட்டுமானங்களின் பின்னணியில் அரசியல் அதிகாரமா?

ஆர்.எப்.எம் சுஹேல்- நுவரெலியா உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிட வேட்புமனுத் தாக்கல் செய்திருந்த வேட்பாளர்கள் உட்பட பலரது வீடுகள் உரிய விதிமுறைகளைப் பேணாது சட்டவிரோதமான முறையில் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக…

By In
News

தேசிய பாடசாலை தொடர்பான கட்டுக்கதையும் ஆசிரியர் வெற்றிடங்களும்

மகேந்திர ரந்தெனிய மூன்று வருடங்களாகக் கல்வி சீர்திருத்தக் குழுக்களுக்குப் பல கோடிக்கணக்கில் பணம் செலவழித்தும் எந்தப் பலனும் கிடைக்கப்பெறவில்லை என்பதை ஊடகங்கள் அவ்வப்போது வெளிப்படுத்திவருகின்றதை  காணக்கூடியதாக உள்ளது….

By In
News

தொடரும் இலங்கை – இந்திய மீனவர் கைதுகள்!

க.பிரசன்னா இலங்கை – இந்திய மீனவர்களின் பிரச்சினை நீண்ட வரலாற்றைக் கொண்டது. கச்சத்தீவு இலங்கைக்கு வழங்கப்பட்ட பின்னர் ஆரம்பமான பிரச்சினை, இப்போது சட்டவிரோத மீன்பிடி முறையினால் வேறு…

By In

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *