News

கோவிட் -19 நிதியுதவிகளுக்கு நடந்தது என்ன?

By In

ராகுல் சமந்த ஹெட்டியராச்சி

கோவிட் -19 பெருந்தொற்றுநோயால் உலகின் பல நாடுகளின் பொருளாதாரங்கள் சரிந்து வருகின்றன. தொற்றுநோயை எதிர்கொள்வது இந்த சூழலில், குறிப்பாக அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளுக்கு மிகப்பெரிய சவாலாக மாறியுள்ளது. அதன் காரணத்தினால், அந்த நாடுகளுக்கு அவர்களின் குடிமக்களினதும் வெளிநாடுகளினதும் உதவி தேவைப்பட்டது.

இலங்கை பல நாடுகள் மற்றும் உலக அமைப்புகளின் உதவிகளையும் பெற்றுள்ளது. செப்டம்பர் இறுதிக்குள், கோவிட் -19 ஐ எதிர்த்துப் போராடுவதற்கு இலங்கை அரசாங்கம் 300 மில்லியன் டொலருக்கும் அதிகமான உதவிகளைப் பெற்றுள்ளது. இதற்கு மேலதிகமாக, 2020 ஜூலை 30 ஆம் திகதிக்குள் அரசாங்கம் 138 மில்லியன் டொலர்களை கடனாகப் பெற்றுள்ளது. தகவல் அறியும் சட்டத்தின் பிரகாரம் 2020 செப்டம்பர் 2 ஆம் திகதி சுகாதார அமைச்சு இதனை வெளிப்படுத்தியது.

2020 டிசம்பர் 1 ஆம் திகதி தாக்கல் செய்யப்பட்ட தகவல் அறியும் உரிமைக்கான விண்ணப்பத்திற்காக 2021 மார்ச் 15 ஆம் திகதி ‘இடுகம’ சமூக பாதுகாப்பு நிதி தொடர்பான தகவல்களை ஜனாதிபதி செயலகம் வெளியிட்டது. அதன்படி, மீதமாக 1.61 பில்லியன் ரூபாவுக்கும் அதிகமான நிதி இருப்பது தெரியவந்தது. எவ்வளவு நிதி பெறப்பட்டது என்று அவர்கள் கேட்டபோது ஜனாதிபதி செயலகம் பதிலளிக்கவில்லை, ஆனால் பற்றுச்சீட்டுக்கள் வகைப்படுத்தப்படவில்லை என்று அவர்கள் குறிப்பிட்டனர். இருப்பினும், இந்த நிதிக்காக வெளிநாட்டு கடன்கள் அல்லது நன்கொடைகள் எதுவும் கிடைக்கவில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர். எனவே ‘இடுகம’ சமூக பாதுகாப்பு நிதியத்தால் பெறப்பட்ட பணம் அனைத்தும் உள்ளூர் நன்கொடையாளர்களிடமிருந்து வந்ததாகத் தெரிகிறது.

தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்காக ‘இடுகம’ சமூக பாதுகாப்பு நிதியின் மூலம் திரட்டப்பட்ட 1.61 பில்லியனுடன் மேலதிகமாக இலங்கை அரசு மொத்தம் 58.7 பில்லியன் ரூபாவை வெளிநாட்டுக் கடன்கள் மற்றும் உதவிகளாகப் பெற்றுள்ளது. கோவிட் -19 தொற்றுநோயை எதிர்த்துப் போராட இலங்கை அரசாங்கம் 2020 டிசம்பருக்குள் 60 பில்லியனுக்கும் அதிகமான வெளிநாட்டு மற்றும் உள்ளூர் உதவிகள் மற்றும் கடன்களைக் கொண்டிருந்தமை தெரியவந்தது.

இலங்கை அரசாங்கம் உலக சுகாதார ஸ்தாபனத்திடமிருந்து (WHO)  1.9 மில்லியன் டொலர், ஐ.நா. சனத்தொகை நிதியத்திலிருந்து (UNFPA) 2இலட்சத்து 12ஆயிரத்து 260டொலர்,  (212,260) யுனிசெப்பிலிருந்து 1இலட்சத்து 25ஆயிரம் டொலர், (125,000) ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து (ADB) 300 மில்லியன் டொலர் மற்றும் உலகளாவிய நிதியிலிருந்து 11இலட்சத்து 94ஆயிரத்து 424 டொலர் (1,194,424) பணத்தை வெளிநாட்டு நன்கொடைகளாகப் பெற்றுள்ளது.  அரசாங்கம் ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து 10 மில்லியன் டொலரையும், உலக வங்கியிலிருந்து 128 மில்லியன் டொலர்களையும் கடனாகப் பெற்றுள்ளது. ஆகையால், இலங்கைக்கு 319 மில்லியன் டொலர்கள் கிடைத்திருப்பதாக சுகாதார அமைச்சின் தகவல் தெளிவுபடுத்துகிறது, இது சமீப காலங்களில் 58 பில்லியன் ரூபாகவுக்கும் அதிகமாகும்.

பி.சி.ஆர் பரிசோதனைகளுக்காக ரூ .15 பில்லியன்

இலங்கை அரசு 2021 ஜூலை 3 ஆம் திகதிக்குள் 41இலட்சதது 19ஆயிரத்து 912பி.சி.ஆர் (4,119,912) பரிசோதனைகளை நடத்தியது, 15 பில்லியன் ருபாவுக்கும் அதிகமான பணத்தை செலவிட்டுள்ளது. உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து பெறப்பட்ட கடனையும், அரசாங்கத்திடமிருந்த  பணத்தையும் பி.சி.ஆர் பரிசோதனைக்காக அரசாங்கம் பயன்படுத்தியுள்ளது.

மேலும், ‘இடுகம’ நிதியில் இருந்து 100 மில்லியன் ரூபாவை பி.சி.ஆர் பரிசோதனைக்காக சுகாதார அமைச்சிற்கு ஒதுக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. ஜனாதிபதி செயலகத்தின் பிரகாரம், 40 மில்லியன் ரூபா நிதியை ஏற்கனவே சுகாதார அமைச்சுக்கு உள்ளூர் நிறுவனமான SLINTEC வழங்கியுள்ளது.

மேலும், ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் பி.சி.ஆர் பரிசோதனை ஆய்வகத்தை மேம்படுத்த 3.41 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான தொகை வழங்கப்பட்டுள்ளதுடன் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் பி.சி.ஆர் பரிசோதனை ஆய்வகத்தை மேம்படுத்த 2.5 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான தொகை வழங்கப்பட்டுள்ளது.

பிப்ரவரி 10 ஆம் திகதி 2021 அன்று சுகாதார அமைச்சிலிருந்து பெறப்பட்ட தகவல்களின்படி, ‘இடுகம’ நிதியிலிருந்து 100 மில்லியன் ரூபா சுகாதார விழிப்புணர்வு திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளதுடன், அந்த தொகையில் 24.3 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான தொகை ஏற்கனவே செலவிடப்பட்டுள்ளது. அந்த பணம் TRIAD (PVT) Ltd என்ற நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது. இது தொடர்பாக கேள்வியெழுப்பிய போது, ​​சுகாதார அமைச்சின் செயலாளர் எஸ்.எச். முனசிங்க, ‘இடுகம’ நிதியிலிருந்து ஏற்கனவே 67.5 மில்லியன்  ரூபா இந்த நோக்கத்திற்காக எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

தனிமைப்படுத்தல் நோக்கங்களுக்காக 3.7 பில்லியன் ரூபா

தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து 2021 ஜூலை 3 ஆம் திகதி வரை இலங்கை 1இலட்சத்து 60ஆயிரத்திற்கு (160,000) மேற்பட்ட நபர்களை தனிமைப்படுத்தியுள்ளது. இந்த தனிமைப்படுத்தல் செயன்முறை இராணுவத்தால் வேறு சில நிறுவனங்களுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டது. தனிமைப்படுத்தல் மையங்களை நிர்மாணிப்பதற்கான கட்டுமான செலவுகள் மற்றும் தொழிலாளர்களுக்கான உணவு மற்றும் பிற வசதிகளுக்காக சுமார் 3.7 பில்லியன் ரூபாக்கள் ஏற்கனவே செலவிடப்பட்டதாக சுகாதார அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.

ஜனாதிபதியின் செயலாளர் அலுவலகத்திலிருந்து பெறப்பட்ட தகவல்களின்படி, ‘இடுகம’ நிதியிலிருந்து கூட சுமார் 38 மில்லியன் தனிமைப்படுத்தல் நோக்கங்களுக்காக செலவிடப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சிடமிருந்து பெறப்பட்ட தகவல்களிலிருந்து, கோவிட்-19 தொடர்பான ஆராய்ச்சிக்காக ‘இடுகம’ நிதியிலிருந்து சுமார் 3.5 மில்லியன் செலவிடப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. மேலதிகமாக, போக்குவரத்து மற்றும் எரிபொருள் செலவுகளுக்காக சுகாதார அமைச்சிற்கு 86.5 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளதுடன், அந்த தொகையில் 38 மில்லியனுக்கும் அதிகமான தொகை ஏற்கனவே பெறப்பட்டுள்ளது.

மேலும், தடுப்பூசி அட்டைகளை அச்சிடுவதற்காக ‘இடுகம’ நிதியிலிருந்து 41.5 மில்லியன் பெறப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கேள்வியெழுப்பிய போது, ​​செயலாளர் அரச அச்சகம் அட்டைகளை அச்சிட்டது என்றும் கூறினார்.

இருப்பினும், மேற்கண்ட தரவுகளை பகுப்பாய்வு செய்யும் போது, ​​கோவிட் -19 தடுப்பூசியை வெளிநாட்டு மற்றும் உள்ளூர் கடன்கள் மற்றும் ‘இடுகம’ நிதி உள்ளிட்ட நிதிகளிலிருந்து வாங்குவதைத் தவிர, அரசாங்கம் ஏற்கனவே இதர செலவுகளுக்காக 18 பில்லியனுக்கும் அதிகமாக செலவு செய்துள்ளதாகத் தெரிகிறது. இது நிதிகள் மற்றும் கடன்கள், ‘இடுகம’ நிதி உட்பட நாட்டின் மொத்த நிதியில் 24% ஆகும்.

இந்த செலவுகளைத் தவிர, கோவிட்-19 தடுப்புக்கான தடுப்பூசி செலவுகள் மற்றும் இதர செலவுகளின் தகவல் அறியும் கோரிக்கைகளுக்கு சுகாதார அமைச்சும் ஜனாதிபதி செயலகமும் இதுவரை பதிலளிக்கவில்லை.

News

பொருளாதார நெருக்கடியால் தொழில்தேடி வெளிநாடு செல்லும் இலங்கையர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

ந.லோகதயாளன் நாட்டில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட பின்னர் தொழில்வாய்ப்புக்காக வெளிநாடுகளுக்குச் செல்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்திருப்பதை தகவல் அறியும் சட்டத்தின் கீழ்  மாவட்டச் செயலகங்கள் மற்றும் வெளிநாட்டு…

By In
News

நுவரெலியாவில் சட்டவிரோதமான கட்டுமானங்களின் பின்னணியில் அரசியல் அதிகாரமா?

ஆர்.எப்.எம் சுஹேல்- நுவரெலியா உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிட வேட்புமனுத் தாக்கல் செய்திருந்த வேட்பாளர்கள் உட்பட பலரது வீடுகள் உரிய விதிமுறைகளைப் பேணாது சட்டவிரோதமான முறையில் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக…

By In
News

தேசிய பாடசாலை தொடர்பான கட்டுக்கதையும் ஆசிரியர் வெற்றிடங்களும்

மகேந்திர ரந்தெனிய மூன்று வருடங்களாகக் கல்வி சீர்திருத்தக் குழுக்களுக்குப் பல கோடிக்கணக்கில் பணம் செலவழித்தும் எந்தப் பலனும் கிடைக்கப்பெறவில்லை என்பதை ஊடகங்கள் அவ்வப்போது வெளிப்படுத்திவருகின்றதை  காணக்கூடியதாக உள்ளது….

By In
News

தொடரும் இலங்கை – இந்திய மீனவர் கைதுகள்!

க.பிரசன்னா இலங்கை – இந்திய மீனவர்களின் பிரச்சினை நீண்ட வரலாற்றைக் கொண்டது. கச்சத்தீவு இலங்கைக்கு வழங்கப்பட்ட பின்னர் ஆரம்பமான பிரச்சினை, இப்போது சட்டவிரோத மீன்பிடி முறையினால் வேறு…

By In

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *