News

RTI நடவடிக்கை: பாராளுமன்றத்தில் மக்கள் பிரதிநிதிகளால் ஏற்படுத்தப்பட்ட நட்டத்தை அறிய உதவிய தகவல் சட்டம்

By In

பாராளுமன்ற வரலாற்றில் மிக மோசமான செயற்பாட்டை வெளிப்படுத்திய ஒரு நாளாக 2018 ஒக்டோபர் மாதம் இடம்பெறுகின்றது. பாராளுமன்ற உறுப்பினர்கள் குறிப்பாக அமைச்சர்களே பாராளுமன்றத்திற்குள் மிக மோசமான வார்த்தைகளைப் பிரயோகித்து ஏசிப் பேசி மிகவும் கீழ்த்தரமான முறையில் ஒழுங்கீனமாக நடந்து கொண்ட நாள் அன்றைய நாளாகும். இவ்வாறான நடவடிக்கை பொதுமக்கள் சொத்தாக கருதப்படும் மக்கள் பிரதிநிதிகள் சபையாக பாராளுமன்றத்தின் சொத்துக்களுக்கு நட்டத்தையும் ஏற்படுத்தியது.
இதே பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட தகவல் அறிவதற்கான சட்டத்தை பயன்படுத்தி குறித்த மோதல் தொடர்பாக அறிந்து கொண்ட இளைஞர்கள் சிலர் அன்றைய தினம் பாராளுமன்றத்தில் ஏற்பட்ட ஒழுங்கீனமான நடத்தையின் போது பாராளுமன்ற சபைக்குள் உடமைகளுக்கு எற்பட்ட இழப்பு பற்றிய கணிப்பீட்டின் படி மொத்த பெருமதி எவ்வளவு என்பதை பற்றிய தகவல்களை கோரினர். 2019 ஜனவரி மாதம் தகவல் அறிவதற்கான விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டது.
தகவல் அறிவதற்கான விண்ணப்பத்திற்கு வழங்கப்பட்ட பதிலளிப்பின் ஊடாக பாராளுமன்ற சபையில் பொருத்தப்பட்டுள்ள ஒலிவாங்கி சேதப்படுத்தப்பட்டதால் அதற்கு இழப்பு ஏற்பட்டிருக்கின்றது என்று தகவல் தரப்பட்டது. சேதமாக்கப்பட்ட ஒலிவாங்கிக்கு பதிலாக புதிய ஒலிவாங்கியை ஹேலீஸ் நிறுவனத்தின் அவென்சுரா கம்பனி மூலம் தருவிக்கப்பட அனுமதி பிறப்பிக்கப்பட்டிருந்தது. அதற்கான செலவினம் ரூபா 344,958.18 ஆகும். கருவியை பொருத்த மேலும் ரூபா 29,670.00 செலவாகின்றது. மொத்தமாக ரூபா 374,628.18 ஆகும். அந்த சேதத்தை ஈடு செய்ய செலவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. தகவல் அறிவதற்கான சட்டத்தின் மூலம் பாராளுமன்ற உறுப்பினரால் பாராளுமன்ற சபைக்குள் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதால் பொதுமக்களுக்கான சொத்திற்கு ஏற்படுத்தப்பட்ட சேதம் பற்றிய தகவலை வெளிப்படுத்த முடிந்தது.
தகவல் அறிவதற்கான விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பித்து இந்த விடயம் தொடர்பாக கோரப்பட்ட தகவலை பாராளுமன்றத்தின் தகவல் அதிகாரி வழங்கிய தகவலால் மக்கள் பிரதிநிதிகளின் நடத்தை பற்றிய தகவலை வெளிப்படுத்த முடிந்ததையிட்டு இளைஞர்கள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர். அவ்வாறே தகவல் அறிவதற்கான சட்டம் அவர்களை மேலும் எதிர்காலத்திலும் இவ்வாறான விடயங்கள் தொடர்பாக கவனம் செலுத்தி கேள்வி எழுப்ப தூண்டுவதாக திருப்தி தெரிவிக்கின்றனர்.
இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் நல்லாட்சி மற்றும் ஜனநாயகத்தை பலப்படுத்தும் வகையில் அமெரிக்க உதவித் திட்டத்துடன் (USAID) இணைந்து தகவல் அறிவதற்கான சட்டம் பற்றி பயிற்சி செயலமர்வை நடத்தியது. இந்த செயலமர்வில் பங்குபற்றிய இளைஞர்களால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட தகவல் கோரல் பற்றிய விடயம் பற்றிய பதிவே இதுவாகும்.

“இந்த இடுகையின் உள்ளடக்கங்கள் SLPIஇன் முழுப் பொறுப்பாகும், மேலும் USAID அல்லது ஐக்கிய அமெரிக்க அரசாங்கத்தின் கருத்துக்களை அவசியமாக பிரதிபலிக்கவில்லை.”

News

10 வருடங்களில் பொலிஸ் சேவையில் இருந்து 2847 பேர் இடைநிறுத்தம்!

ந.லோகதயாளன் கடந்த 10 ஆண்டுகளில்  பொலிஸ் திணைக்களத்தில் இருந்து 2847 பேர் பணியிலிருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. பொலிஸ் திணைக்களத்தின் தலைமையகத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட தகவல்…

By In
News

போதையில் மூழ்கும் சமூகம்;  அதிர்ச்சி தரும் புள்ளிவிபரங்கள்

2023ஆம் ஆண்டு மாத்திரம் 162,088 பேர் கைது! மொஹமட் ஆஷிக் போதைப்பொருள் விவகாரம் இலங்கையில் மட்டுமன்றி அனைத்து நாடுகளிலும் பாரிய நெருக்கடியாக உள்ளது. எமது நாட்டில், அதை…

By In
News

பூமியை நான்கு தடவைகள் சுற்றிவரும் அளவிற்கு இலங்கையை வானில் சுற்றியுள்ள மஹிந்த ராஜபக்ஷ

ராகுல் சமந்த ஹெட்டியாராச்சி விமானப்படைத் தலைமையகத்திலிருந்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவல்களின்படி, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 2005ஆம் ஆண்டு முதல் 2015ஆம்…

By In
News

ஜனாதிபதி அலுவலகத்தின் சொகுசு வாகனங்கள் ஏலத்திற்கு முன்னர் பகிர்ந்தளிக்கப்பட்ட விதம்!

● கோட்டாபயவின் பிரத்தியேக பணியாளர்களுக்கு 11 வாகனங்கள் ● ரணிலின் பிரத்தியேக பணிக்குழாமிற்கு 68 வாகனங்கள் ஜனக சுரங்க வாகனங்களை பொதுவாக காட்சியறைகளில் வைத்தே பொதுமக்களுக்கு காட்சிப்படுத்துவர்….

By In

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *