News

RTI நடவடிக்கை: அநுராதபுரம் வாராந்த சந்தை கட்டிட நிர்மாணம் மந்த கதியில்

By In

தகவல் அறிவதற்கான சட்டம் (RTI) மக்களை அவர்களது வாழ்க்கையில் புதிய உட்சாகத்துடன் செயற்பட தூண்டுகின்றது. அதிகாரிகள் அசமந்தப் போக்கில் செயற்படும் போது அது தொடர்பாக கேள்வி எழுப்புவதன் ஊடாக ஆட்சி நிர்வாகத்துறையில் செயல்திறனை ஏற்படுத்தவதற்கும் பணிகளை துரிதப்படுத்துவதற்கும் தகவல் சட்டம் பயன்படுகின்றது.
இலங்கை பத்திரிகை ஸ்தாபனம், அமெரிக்க உதவித்திட்டத்துடன் (USAID-SDGAP) இணைந்து தகவல் அறிவதற்கான சட்டம் பற்றி அநுராதபுரத்தில் பயிற்சி செயலமர்வொன்றை நடத்தியது. இந்த செயலமர்வில் அநுராதபுர பகுதி இளைஞர்களும் பங்குபற்றினர். இந்த செயலமர்வில் பங்குபற்றியவர்கள் தகவல் சட்டம் பற்றி அறிந்துகொண்டது மட்டுமல்லாமல் பிரதேச மக்களையும் அது தொடர்பாக அறிவூட்டல் செய்வதற்கும் முற்பட்டனர்.
குணவர்தன என்பவர் அநுராதபுர சந்தையில் மரக்கறி வியாபாரம் செய்யும் ஒரு பிரதேசவாசியாவார். அவர் சிப்பிக்குளம, ரன்பத்வில, கல்குளம மற்றும் மரதன்கடவலை ஆகிய பிரதேசங்களுக்கு சென்று விவசாயிகளிடம் இருந்து மரக்கறி வகைகளை கொள்வனவு செய்து அநுராதபுரம், ரம்பாவ, கெகிராவ மற்றும் மிஹிந்தலை போன்ற பகுதிகளில் விற்பனை செய்து வருகின்றார்.
தகவல் அறிவதற்கான சட்டம் பற்றி சில இளைஞர்கள் ஊடாக அவர் அறிந்துகொண்ட பின்னர்
அப்பிரதேசத்தில் மந்தகதியில் நிர்மாணிக்கப்பட்டுக் கொண்டிருந்த வாராந்த சந்தை கட்டிட நிர்மாணம் தொடர்பாக தகவல் அறிவதற்கான விண்ணப்பப் படிவம் ஒன்றை சமர்ப்பித்து அதிகாரிகளிடம் அதுபற்றி தகவல் கோரினார்.
குனவர்தனவின் தகவலுக்கமைய அப்பகுதி வாராந்த சந்தை வாரத்தில் இரண்டு தடவைகள் கூடுவதோடு வியாபாரிகளுக்கு அவர்களது மரக்கறி வகைகளை கொண்டு வந்து விற்பனை செய்ய சந்தர்ப்பம் வழங்கப்படுகின்றது. ஆனாலும் மிக மோசமான பராமரிப்பு காரணமாக சந்தையில் வியாபாரிகளும் பொதுமக்களும் அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வந்தனர். கட்டிடத்தின் கூரை உடைந்து விழும் நிலையில் இருந்ததால் மழை காலங்களில் பல சிரமங்கள் ஏற்பட்டதோடு ஒழுங்கான முறையில் கட்டிடம் பராமரிக்கப்படாததால் மழை நீர் தேங்கி வியாபாரிகளது பொருட்களை பரப்பி விற்பனை செய்ய முடியாத நிலை காணப்பட்டது.
இந்த அவல நிலை அநுராதபுர மாநாகர சபை அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதால் நவீனமயப்படுத்தப்பட்ட சந்தை கட்டிடத்தொகுதி ஒன்றை நிர்மாணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. சந்தை கட்டிட நிர்மாண வேலைகள் மற்றும் அதற்கான நிதி ஒதுக்கீடு என்பன மேல் மாகாண மெகாபொலீஸ் (நகர வடிவமைப்பு மற்றும் நிர்மாண) அமைச்சால் முன்னெடுக்கப்பட்டது. இந்த கட்டிட நிர்மாண வேலைகள் காரணமாக 800 வியாபாரிகள் அளவில் அவர்களது வியாபார நடவடிக்கைகளை முன்னெடுக்க வேறிடத்திற்கு மாற வேண்டி ஏற்பட்டது.
அதே நேரம் ஒதுக்கப்பட்ட இடத்தில் வியாபாராம் செய்வதற்காக ஒவ்வொரு வியாபாரியிடம் இருந்தும் ரூபா 700.00 கட்டணமாக அறவிடப்பட்டது. அதனால் வியாபாரிகள் நினைத்தனர் குறித்த இடத்தில் நல்ல இடவசதி இருக்கும் என்று.
அவ்வாறே அவசரமான நிர்மாண வேலைகள் காரணமாக கூரையின் ஒரு பகுதி உடைந்து விழும் நிலை ஏற்பட்டது. புனரமைப்பு வேலைகள் ரூபா 90,800,000.00 செலவில் 2017 ஜூலை மாதம் ஆரம்பிக்கப்பட்டதாயினும் உரிய காலப்பகுதியான 2018 ஜனவாரி மாதம் அளவில் நிறைவு செய்யப்படவில்லை.
இவ்விடயம் தொடர்பாக குணவர்தன தகவல் அறிவதற்கான விண்ணப்பம் ஒன்றின் மூலம் தகவல் கோரி இருந்தார். ஆனால் அவரது கேள்விக்கு உரிய காலத்தில் பதிலளிக்கப்படவில்லை. இந்த விண்ணப்பத்தை அவர் அநுராதபுர மாநகர சபை கட்டிட நிர்மாண பிரிவுக்கே கையளித்திருந்தார்.
எவ்வாறாயினும் சில வாரங்களின் பின்னர் நிர்மாண வேலையாட்கள் வாரந்த சந்தைக்கு சென்றதோடு ஒருபகுதி வேலைகளை பூர்த்தி செய்தனர். ஆனாலும் குணவர்தனவுக்கு அநுராதபுர மாநாகர சபையின் தலைவர் ஊடாக பதில் கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்தார். மாறாக புனரமைப்பு வேலைகள் நடைபெற்றன.
இவ்வாறான ஒரு சந்தர்ப்பத்தில் தகவல் அறிவதற்கான சட்டம் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை அப்பிரதேச இளைஞர்கள் கருதுகின்றனர். கடுமையாக உழைக்கக்கூடிய தொழிலாளியான குணவர்தன போன்றவர்களது வாழ்க்கையை வளப்படுத்த இந்த சட்டம் பெரிதும் பயன்படுகின்றது.
இலங்கை பத்திரிகை ஸ்தாபனம், அமெரிக்க உதவித்திட்டத்துடன் இணைந்து தகவல் அறிவதற்கான சட்டம் பற்றி நடத்திய பயிற்சி செயலமர்வில் கலந்துகொண்ட இளைஞர்கள் குழுவால் இந்த முன்னேற்ற அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதாகும்.

“இந்த இடுகையின் உள்ளடக்கங்கள் SLPIஇன் முழுப் பொறுப்பாகும், மேலும் USAID அல்லது ஐக்கிய அமெரிக்க அரசாங்கத்தின் கருத்துக்களை அவசியமாக பிரதிபலிக்கவில்லை.”

News

EPF நிதியம் 400 டிரில்லியனை அடைந்ததுடன், ETF நிதியம் 400 பில்லியனை எட்டியது: அவை உறுப்பினர்களுக்கு பயனளிக்காமல் விரிவுபடுத்தப்பட வேண்டுமா?

சமீபத்திய தேர்தல் பிரச்சாரங்களும் மே தின நிகழ்வுகளும் இலங்கையின் தொழிலாளர் படையை முறையாகப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஓர் நிலைத்தன்மையான  சமூகப் பாதுகாப்பு முறைமையின் அவசியத்தை எடுத்துக்காட்டுவதுடன் உறுதிப்படுத்துகின்றன. 1958…

By In
News

மாத்தறை பொது வைத்தியசாலையின் மருத்துவக் கழிவு விவகாரம்: விசாரணைக்கு அளிக்கப்பட்ட பதில்கள் பொய்யானவை!

ராகுல் சமந்த ஹெட்டியாராச்சி உலகெங்கிலும் மருத்துவக் கழிவுகளை அகற்றுவது மிகவும் அவதானமாக மேற்கொள்ளப்படும் ஒரு செயற்பாடாகும். 22 மில்லியன் குடிமக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக இலங்கையின் சுகாதார…

By In
News

அரச நிதி இப்படியும் வீணடிப்பு: 4 முன்னாள் ஜனாதிபதிகளுக்கு 397 தனிப்பட்ட பணியாளர்கள்!

க.பிரசன்னா முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகள் தொடர்பில் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டுவரும் கருத்துக்கள் அவர்களின் சிறப்புரிமைகளுக்கு அரச நிதி அதிகளவு விரயம் செய்யப்படுவதை வலியுறுத்தியுள்ளது. இந்நிலையில், முன்னாள் பிரதமர்கள் மற்றும்…

By In
News

ஜீவன சக்தி காப்புறுதி திட்டம் மூலம் ஏமாற்றப்பட்ட தோட்டத் தொழிலாளர்கள்

க. பிரசன்னா பெருந்தோட்டத் தொழிலாளர்களின் காணி உரிமை, தனி வீடு மற்றும் ஊதியம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் காலங்காலமாக அரசாங்கத்தால் வழங்கப்பட்ட உறுதிமொழிகள் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளமை…

By In

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *