மார்ச் மாதத்திற்கான RTI ஊடகவியலாளர் மன்றம் மார்ச் மாதம் 31 ஆம் திகதி இலங்கை பத்திரிகை ஸ்தாபன கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. 09 ஊடகவியலாளர்கள் இம் முறை நடைபெற்ற மன்றத்தில் பங்குபற்றியிருந்ததுடன், RTI பயிற்சிப்பட்டறைகள் நடாத்தப்பட்ட மாவட்டங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தியும் ஊடகவியலாளர்கள் கலந்துகொண்டிருந்தனர் .
இந்த மன்றத்தில் RTI ஊடகவியலாளர் மன்றத்தின் உறுப்பினர் திரு.பிரசன்னகுமார் அவர்கள் மார்ச் மாதத்தின் “Spotlight journalist” ஆக கலந்து கொண்டார். “RTI இனைப் பயன்படுத்தும் போது ஊடகவியலாளர்களின் பாதுகாப்பு” என்ற தலைப்பில் அவர் தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார். அவர் தனது அளிக்கையில் “இந்திய வீட்டுத் திட்டம் – அமைச்சரின் உணவும் ஒதுக்கப்பட்டுள்ளதா?” என்ற தலைப்பில் அவர் எழுதிய கட்டுரைகளில் ஒன்றை எடுத்துக்காட்டாக குறிப்பிட்டிருந்தார். இந்தக் கட்டுரையை வெளியிட்ட பின்னர் எவ்வாறான அச்சுறுத்தல்களையும் சவால்களையும் எதிர்கொண்டார் எனவும் அந்தத் தகவல்களைப் பெற்றுக்கொண்ட நடைமுறைகளையும் அவர் பகிர்ந்து கொண்டார்.
ஊடகவியலாளர் மன்றத்தில் பொதுவாக ஊடகவியலாளர்கள் நடைமுறை விடயங்களைப் பற்றி விவாதித்து பொது அதிகாரசபைகளிடம் RTI கோரிக்கைகளை கூட்டாக தாக்கல் செய்வது வழக்கம். அந்தவகையில், இன்றைய மன்றத்தில் பாடசாலைகளில் வசூலிக்கப்படும் நன்கொடைகள் தொடர்பாகவும் கொவிட் இற்கு பிந்தைய காலத்தில் சேவையில் இல்லாத பேருந்துகள் குறித்தும் கலந்துரையாடி கேள்விகளையும் தயார்ப்படுத்தினர்.
இறுதியில் அனைத்து RTI மன்ற ஊடகவியலாளர்களும் RTI கட்டுரைகளை எழுத ஊக்குவிக்கப்பட்டதோடு SLPI வழங்கும் சேவைகளைப் பற்றியும் பகிரப்பட்டது.
Recent Comments