News

இலங்கையில் பிறப்புகள் குறைவடைவதற்கும் இறப்புகள் அதிகரிப்பதற்கும் பின்னணியிலுள்ள இரகசியம் என்ன?

By In

தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் வெளிக் கொணரப்பட்ட தரவுகள்

முகமது ஆசிக்

குடித்தொகை வளர்ச்சி பற்றிய தகவல் மற்றும் தரவுகளை குடித்தொகை மற்றும் வீட்டுவசதி கணக்கெடுப்பில் இருந்து மட்டுமே பெற்றுக்கொள்ள முடியும். தற்போது கிடைக்கப்பெறும் தகவல்கள் 2012 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட சனத்தொகை கணக்கெடுப்புடன் தொடர்புடையதுடன் தரவுகளைப் புதுப்பிக்க வேண்டிய அவசியம் வலுவாக உணரப்படுகின்றது. துல்லியமான தரவு கிடைக்காமை பல துறைகளுடன் தொடர்புடைய போக்குகளை அறிவதற்கு ஒரு தடையாக உள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் இலங்கையின் பிறப்பு மற்றும் இறப்புகளில் பிரதிபலித்த விசேட அம்சங்கள் யாவை? இது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலமான இந்த அம்சம் குறித்த தேடலின் முடிவாகும். 

கடந்த ஐந்து வருடங்களில் இலங்கையில் பிறப்பு வீதம் பாரியளவில் குறைந்துள்ளதாக பதிவாளர் நாயகம் திணைக்களத்தின் தரவுகள் வெளிப்படுத்துகின்றன.

1871 முதல் 1963 வரையிலான காலகட்டத்தில் சனத்தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தால் மேற்கொள்ளப்பட்ட வருடாந்த சனத்தொகை கணக்கெடுப்பில், சனத்தொகை வளர்ச்சி விகிதம் படிப்படியாகக் குறைவடைந்து, 1963க்குப் பிறகு 1.2 ஆகக் குறைவடைந்தது. மேலும் தற்போதுள்ள எண்ணிக்கை அதனிலும் பார்க்க சிறியளவில் அதிகமாக/குறைவாக உள்ளது.

2019 முதல் 2023 வரையிலான இலங்கையின் பிறப்பு மற்றும் இறப்புகள் குறித்து விசாரிப்பதற்காக 2016 இன் 12ம் இலக்க தகவல் அறியும் உரிமைச் சட்டமூலத்தின் கீழ் பதிவாளர் நாயக திணைக்களத்திலிருந்து பெறப்பட்ட தகவல்கள், 2019 முதல் 2023 வரையிலான ஐந்தாண்டு காலப்பகுதியில் இலங்கையில் பிறப்புகளின் எண்ணிக்கை 14,30,785 ஆக காணப்பட்டமையை வெளிப்படுத்துகிறது. அதே காலகட்டத்தில் 6,26,9090 இறப்புகள் பதிவாகியுள்ளன. எவ்வாறாயினும், 2019 உடன் ஒப்பிடும்போது 2023 இல் பிறப்புகளின் எண்ணிக்கை கணிசமாக அதாவது 71,110 ஆல் குறைந்துள்ளதுடன் அதே காலகட்டத்தில் இறப்பு எண்ணிக்கை 34,842 ஆல் அதிகரித்துள்ளது.

பதிவாளர் நாயக திணைக்களத்தின் தகவல் அதிகாரியான திரு.ஏ.எம்.ஆர்.எஸ்.பி.அமரகோன் வழங்கிய தகவலின் பிரகாரம், 2019 இல் 3,19,010 பிறப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், 2020 இல் பதிவு செய்யப்பட்ட பிறப்புகளின் எண்ணிக்கை 3,01,706 ஆகும். எனவே அந்த ஆண்டில் பிறப்புகளில் 17,304 ஆல் குறைவடைந்துள்ளது. 2021 இல் பிறப்புகளின் எண்ணிக்கை 2,84,848 ஆக இருந்ததுடன், இது முந்தைய ஆண்டை விட 16,858 ஆல் குறைவடைந்துள்ளது. 2022 ஆம் ஆண்டில் இலங்கையில் பிறந்தவர்களின் எண்ணிக்கை 2,75,321 ஆக இருந்ததுடன், அந்த ஆண்டில் பிறப்புகளின் எண்ணிக்கை 9,527 ஆல் குறைவடைந்துள்ளது. 2023 இல் இலங்கையில் பிறந்தவர்களின் எண்ணிக்கை 2,48,900 ஆக இருந்தது. முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 27,421 பிறப்புகளால் குறைவடைந்துள்ளது.

2019 ஆம் ஆண்டை விட 2023 ஆம் ஆண்டு பிறப்புகள் 71,110 ஆல் குறைவடைந்துள்ளதாக பதிவாளர் நாயகம் திணைக்களம் வழங்கிய தரவுகள் தெரிவிக்கின்றன.

அந்த ஐந்தாண்டுகளில் இறந்தவர்களின் எண்ணிக்கை மற்றும் முந்தைய ஆண்டை ஒப்பிடும்போது அதிகரிப்பு/குறைவு பற்றிய தரவு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஆண்டு இறப்புகளின் எண்ணிக்கை முன்னைய ஆண்டுடன் ஒப்பிடும் போதான அதிகரிப்பு/குறைவு
20191,46,397
20201,32,43113,966 அதிகரிப்பு
20211,63,93631,305 அதிகரிப்பு
20221,79,79215,856 அதிகரிப்பு
20231,81,2391,447 அதிகரிப்பு

எவ்வாறாயினும், 2022 ஆம் ஆண்டிற்குப் பிறகு இலங்கையில் இறப்பு விகிதம் குறைவடைந்து வருவதை இந்தத் தரவுகளிலிருந்து அவதானிக்கலாம். 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் இறப்பு விகிதத்தில் ஏற்பட்ட அசாதாரண வளர்ச்சியானது கொவிட் பெருந்தொற்றின் நேரடி தாக்கமாக கருதப்படலாம்.

இலங்கையில் பிறப்பு மற்றும் இறப்புகளை பகுப்பாய்வு செய்யும் போது, ​​மாவட்ட ரீதியாக ஏற்றத் தாழ்வு வேறுபாடுகள் தெளிவாகக் காணப்படுகின்றன. 

மாவட்டம்பிறப்புகள்/இறப்புகள்20192023வேறுபாடு 
கொழும்புபிறப்புகள்48,90139,6349,262
இறப்புகள்24,32126,4512,441
கம்பஹாபிறப்புகள்21,58517,5014,084
இறப்புகள்14,76518,4923,727
களுத்துறைபிறப்புகள்12,5038,9043,599
இறப்புகள்8,44310,9412,498
கண்டிபிறப்புகள்25,85718,3287,529
இறப்புகள்11,57614,1112,535
மாத்தளைபிறப்புகள்7,8555,6732,182
இறப்புகள்3,4334,6041,171
நுவரெலியாபிறப்புகள்7,5407,258282
இறப்புகள்4,2585,7051,447
காலிபிறப்புகள்18,54814,4041,667
இறப்புகள்9,33611,0331,667
மாத்தறைபிறப்புகள்1,0618,0622,579
இறப்புகள்5,6337,7231,901
ஹம்பாந்தோட்டைபிறப்புகள்9,6247,7231,901
இறப்புகள்3,3624,6111,249
யாழ்பிறப்புகள்9,3328,2501,082
இறப்புகள்4,9195,824905
கிளிநொச்சிபிறப்புகள்2,9533,204253
இறப்புகள்590804214
மன்னார்பிறப்புகள்18111,88877
இறப்புகள்528662134
வவுனியாபிறப்புகள்3,3633,750390
இறப்புகள்9681,244276
முல்லைத்தீவுபிறப்புகள்619924305
இறப்புகள்46356683
மட்டக்களப்புபிறப்புகள்10,1589,0441,114
இறப்புகள்2,8,114753,644769
அம்பாறைபிறப்புகள்14,76911,2923,477
இறப்புகள்3,6664,5231,157
திருகோணமலைபிறப்புகள்8,7797,1921,587
இறப்புகள்1,9372,428491
குருநாகல்பிறப்புகள்22,75416,9985,756
இறப்புகள்1,20115,0903,079
புத்தளம்பிறப்புகள்13,03310,9212,112
இறப்புகள்4,5785,9641,386
அனுராதபுரம்பிறப்புகள்14,8469,1785,668
இறப்புகள்5,6616,9251,261
பொலன்னறுவைபிறப்புகள்7,0195,0361,983
இறப்புகள்2,6553,391736
பதுளைபிறப்புகள்14,24411,4602,784
இறப்புகள்5,6567,4301,772
கேகாலைபிறப்புகள்8,8737,3771,496
இறப்புகள்5,6087,5151,907
இரத்தினபுரிபிறப்புகள்17,42410,9486,476
இறப்புகள்7,2619,7292,468

மேற்குறிப்பிட்ட அட்டவணையை ஆராயும் போது, ​​பிறப்புகளின் எண்ணிக்கை ஒட்டுமொத்தமாக குறைவடைந்துள்ள போதிலும் கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு, மன்னார் போன்ற சில மாவட்டங்களில் பிறப்புகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதை அவதானிக்க முடிகின்றது. மற்ற அனைத்து மாவட்டங்களிலும் குறைந்துள்ளது. இருப்பினும், அனைத்து மாவட்டங்களிலும் இறப்பு எண்ணிக்கை அதிகரிப்பை பிரதிபலிக்கின்றது. 

ஆண்டுதோறும் பிறப்பு குறைவடைவதற்கும் இறப்பு அதிகரிப்பதற்கும் தனியான ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும்.

News

ஊழியர்களின் நலனுக்காக இடமாற்றப்படும் நோர்வூட் பிரதேச செயலகம்

க.பிரசன்னா நுவரெலியா மாவட்டத்தில் பிரதேச செயலகங்களின் எண்ணிக்கையை 12 ஆக அதிகரிக்க வேண்டுமென கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக 10 பிரதேச செயலகங்களை உருவாக்குவதற்கான…

By In
News

தேர்தல் சட்டத்தை மீறிய அரச அலுவலர்களுக்கு தண்டனையில்லையா?

ராகுல் சமந்த ஹெட்டியாராச்சி இலங்கை ஜனநாயக பாரம்பரியத்தின் நீண்டகால வரலாற்றை கொண்டுள்ள நாடாகும். சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்கள் ஜனநாயக ஆட்சி முறையின் அடித்தளமாகும். அதனைப் பாதுகாப்பதற்கும்,…

By In
News

அம்பலாந்தோட்டையில் மணல் கொள்ளைக்கு பின்னால் இருப்பது யார்?

ராகுல் சமந்த ஹெட்டியாராச்சி இன்று அதிகம் பேசப்படும் விடயம் இலஞ்சம், ஊழல், வீண்விரயம் இல்லாத நாட்டை உருவாக்குவது என்பதாகும். மக்களும் தற்போதைய அரசாங்கமும் அதற்கு இணங்கிச் சென்றுள்ளனர்….

By In
News

நாட்டில் ஊழல் மற்றும் மோசடி நீங்கிவிட்டதா?

இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தாக்கல் செய்த 52 வழக்குகள் ‘திரும்பப் பெறப்பட்டன’! -ஜனக போகும்புர ஒரு நாடு நிலையான வளர்ச்சியை நோக்கி நகர்வதற்கு, ஊழல் மற்றும் மோசடி…

By In

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *