16 மாவட்டங்களில் 68525 ஏக்கர் நெல் வயல்கள் தரிசுநிலங்களாகின்றன
முகம்மது ஆஷிக்
இலங்கை உட்பட ஆசிய பிராந்தியத்தில் மூன்றில் இரண்டு பங்கு மக்களின் பிரதான உணவு அரிசியாகும். எனவே ஆசியா நெல் பயிர்செய்கைக்கு பிரபலமானதாகும். நெல் பயிர்செய்கையின் உற்பத்தி இலக்குகளை பூர்த்தி செய்வது மற்றைய நெல் பயிரிடும் நாடுகளிலும் இலங்கையிலும் முன்னுரிமையாகக் கருதப்படுவதுடன் இது அந்த நாடுகளில் உணவுப் பாதுகாப்பில் ஒரு முக்கிய காரணியாகும்.
கடந்த காலத்தில் எடுக்கப்பட்ட கடுமையான முடிவுகளினால் ஏற்பட்ட உர நெருக்கடி நெற்செய்கையில் பலத்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த நடைமுறைகள் பின்னர் மாற்றப்பட்டாலும், அதனால் ஏற்பட்ட சேதம் முற்றிலும் நீங்கிவிட்டது என்று சொல்ல முடியாது. நெல் பயிற்செய்கையில் இருந்து விவசாயிகள் ஒதுங்கிக் கொள்வது காலத்துக்குக் காலம் ஏற்பட்ட நெருக்கடிகளால் முதன்மையான பிரச்சினையாக இருந்தாலும், அதில் போதிய அவதானம் செலுத்தப்படவில்லை. இது 2016 ஆம் ஆண்டின் 12ம் இலக்க தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைப் பயன்படுத்தி இந்த விடயத்தில் உண்மைகளைக் கண்டறியும் முயற்சியாகும்.
தகவலுக்கான கோரிக்கைக்கு பதிலளிக்கும் வகையில் வழங்கப்பட்ட கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் தகவலின் பிரகாரம், 2023/24 ஆம் ஆண்டு பெரும் போகத்தில் 7,85,590.699 ஹெக்ரேயர் பரப்பளவில் நெல் பயிரிடப்பட்டது. 2024 சிறு போகத்தில் நெல் பயிரிடப்பட்ட நிலத்தின் அளவு 4,54,264.25 ஹெக்ரேயராகும். மேலும், நாட்டின் பதினாறு மாவட்டங்களில் 68,524.90 ஏக்கர் நிலப்பரப்பிலான நெல் வயல்கள் தரிசாக மாறியிருப்பதும் இதே தகவல் ஆதாரத்திலிருந்து தெரியவந்துள்ளது.
அந்தத் தகவலின்படி, மாவட்ட ரீதியாக தரிசாக மாறிய நெல் வயல், ஏக்கர்கள் பின்வருமாறு:

மொத்தமுள்ள 68,524.90 ஏக்கர் தரிசு நெல் வயல்களில் 45,965.53 ஏக்கரில் விவசாய பயிர்களை பயிரிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கமநல அபிவிருத்தி திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும், அவர்கள் 22,559.37 ஏக்கர் நிலத்தை எந்த விவசாய தேவைக்கும் பயன்படுத்த முடியாது என்று கூறுகின்றனர். இந்த தகவல்கள் சில நெல்வயல் நிலங்கள் நெடுங்காலமாக தரிசு நிலங்களாக இருப்பதாகவும், சில பருவத்திற்கு பருவம் தற்காலிகமாக பயிரிடப்பட்டதாகவும் குறிப்பிடுகின்றன. இவை அனைத்தும் அரிசியால் தன்னிறைவு அடையும் கனவுக்கு தடையாக உள்ளது.
கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் தகவல் அதிகாரி திரு.கே.ஏ.சமந்த சந்தன அவர்கள் வழங்கிய தகவலின்படி, 2023/24 பெரும் போகத்தில் இலங்கை முழுவதிலும் 7,85,590.699 ஹெக்ரேயர் நெல் பயிர் செய்யப்பட்டிருந்ததுடன், மாவட்ட வாரியாக பயிரிடப்பட்ட நிலங்களின் பரப்பளவு பின்வருமாறு.

கமநல அபிவிருத்தி திணைக்களத்தினால் வழங்கப்பட்ட தகவலின் பிரகாரம், 2023/24 பெரும் போகத்தில் 6,544.40 மெற்றிக் தொன் யூரியா பசளை மற்றும் 1,726.79 மெற்றிக் தொன் MOP பசளை சலுகை அடிப்படையில் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறு போகத்தில் 1,265.31 மெற்றிக் தொன் யூரியா பசளையும் 405.69 மெற்றிக் தொன் MOP பசளையும் வழங்கப்பட்டுள்ளன.
Recent Comments