– ஜனக சுரங்க
இலங்கையின் எட்டாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக பதவி வகித்த ரணில் விக்ரமசிங்க, கடந்த காலங்களில் பிரதமர், பாராளுமன்ற உறுப்பினர் என பல்வேறு பதவிகளை வகித்துள்ளார். அந்த ஒவ்வொரு காலகட்டத்திலும் அவர் அரச பணத்திலிருந்து பெற்றுக்கொண்ட சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளின் அளவு என்ன? இது ஒவ்வொரு பிரஜையும் அறிந்துகொள்ள விரும்பும் விடயம் என்பதில் சந்தேகமில்லை.
ஆனால் அத்தகைய தகவல்களை பெற்றுக்கொள்வதற்கான உரிமையும் திறனும் மக்களுக்கு உண்டா? ஆம். தகவல் அறியும் உரிமை சட்டபூர்வமாக்கப்பட்டுள்ள இலங்கையில், அதன் பிரஜைகளுக்கு அந்த உரிமை உண்டு. அதற்கிணங்க, பாராளுமன்ற செயலாளர் நாயகத்தின் அலுவலகம் மற்றும் பிரதமர் அலுவலகத்திற்கு தகவல் கோரிக்கைகளை அனுப்பி உரிய தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும்.
2020ஆம் ஆண்டு பாராளுமன்றம் கலைக்கப்பட்ட பின்னர், ஓய்வுபெற்ற இலங்கைப் பிரதமராக ஓய்வூதியம் மற்றும் அது தொடர்பான சலுகைகளைப் பெறும் ரணில் விக்ரமசிங்க, மார்ச் 2020 முதல் ஜூன் 17, 2021 வரை சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளைப் பெற்றுள்ளார். அவற்றின் விபரம் வருமாறு –
அதன் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் ஊடாக 18.06.2021 முதல் 11.05.2022 வரை பாராளுமன்ற உறுப்பினராக ரணில் விக்ரமசிங்க பதவி வகித்தார். இதன்போது, ஒரு பாராளுமன்ற உறுப்பினர் பெறும் கொடுப்பனவுகளுக்கு மட்டுமே அவர் தகுதியானவர். அதன்படி பெற்றுக்கொள்ளப்பட்ட சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் பின்வருமாறு.
நாட்டில் ஏற்பட்ட நெருக்கடி நிலைமை காரணமாக, மே 09, 2022இல் அப்போதைய பிரதமர் மகிந்த ராஜபக்ஷ பிரதமர் பதவியில் இருந்து இராஜினாமா செய்தார். அதன் பின்னர், ரணில் விக்ரமசிங்க மீண்டும் நாட்டின் பிரதமராக நியமிக்கப்பட்டார்.
12.05.2022 முதல் 14.07.2022 வரையான காலப்பகுதியில், பிரதமருக்கான சம்பளத்தை ரணில் பெற்றுக்கொள்ளவில்லை என பிரதமர் அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளதுடன், அக்காலப்பகுதியில் பாராளுமன்றத்தில் இருந்து பெறப்பட்ட கொடுப்பனவுகள் பின்வருமாறு.
2022 இல், பாராளுமன்ற வாக்கெடுப்பு மூலம் இலங்கையின் எட்டாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க தேர்ந்தெடுக்கப்பட்டார். பொதுமக்களின் எதிர்ப்பு காரணமாக பதவியில் இருந்து விலகிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பதவி விலகலைத் தொடர்ந்து இது இடம்பெற்றது. 21.07.2022 முதல், அவர் மீண்டும் ஒருமுறை பிரதமராகப் பெற்ற ஓய்வூதியம் மற்றும் கொடுப்பனவுகளுக்குத் தகுதி பெற்றார். நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியாக பணியாற்றியதற்காக பெறப்பட்ட சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் பற்றிய விவரங்கள் இந்த தகவல் கோரிக்கையில் சேர்க்கப்படவில்லை.
அதன்பிரகாரம், 2024 ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் வரை பெற்றுக்கொண்ட ஓய்வூதியம் மற்றும் கொடுப்பனவுகளின் விபரம் கீழே தரப்பட்டுள்ளது.
பாராளுமன்ற பொதுச் செயலாளரின் அலுவலகம் மற்றும் பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்ட தகவல் கோரிக்கைகள் மூலம் மேற்கண்ட தகவல்கள் பெறப்பட்டுள்ளன. தகவல் அறியும் உரிமை பொதுமக்களை எந்தளவிற்கு வலுப்படுத்துகின்றது என்பதற்கு இது ஒரு உதாரணமாகும்.
வாழ்க்கைச் செலவுகள், பொழுதுபோக்கு கொடுப்பனவுகள், எரிபொருள், தொலைபேசி, போக்குவரத்து மற்றும் கொடுப்பனவுகள் உட்பட பாதுகாப்பு மற்றும் வெளிநாட்டுப் பயணங்களுக்காக தமது பிரதிநிதிகள் மேற்கொள்ளும் அனைத்துச் செலவுகளையும் பொதுமக்களே செலுத்துகின்றனர். இந்தத் தகவல்கள் அனைத்தும் பொதுமக்களின் தகவல்களை அணுகும் உரிமையின் மூலம் வெளிப்படுத்தப்படுவது ஒரு சாதகமான முன்னேற்றமாகும்.
Recent Comments