News

ஊடகவியலாளர்களுக்கு அச்சுறுத்தல் இருப்பதை உறுதிப்படுத்தும் பாராளுமன்ற தரவுகள்!

By In

தனுஷ்கசில்வா

ஊடகவியலாளர்களுக்கு எதிரான அச்சுறுத்தல்களின் ஒரு தசாப்தகால வரலாற்றை இலங்கை நாடாளுமன்றம் அம்பலப்படுத்தியுள்ளது. 2006 மற்றும் 2015ஆம் ஆண்டுகளுக்கு இடையில் ஊடகவியலாளர்கள் மற்றும் நிறுவனங்கள் எதிர்கொள்ளும் அபாயகரமான நிலைமைகளை இது வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. தகவல் அறியும் உரிமைக் கோரிக்கையின் மூலம், சபாநாயகர் அலுவலகம் ஒரு குழப்பமான யதார்த்தத்தை வெளிப்படுத்தியுள்ளது. அண்மைக்கால வரலாற்றில் அச்சுறுத்தலுக்கு உள்ளான ஊடகவியலாளர்களின் பெயர்கள் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படுவது இதுவே முதல் தடவையாகும்.

2016ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 19ஆம் திகதியிடப்பட்ட பாராளுமன்ற ஹன்சார்டில் இருந்து இவ்விடயங்கள் வெளியாகியுள்ளன. ஊடகவியல் தொழிலைத் தொடரும் போது அரசு மற்றும் அரசு சாரா தரப்பினரிடமிருந்து மிரட்டல்களை எதிர்கொண்ட ஊடகவியலாளர்களின் அவலநிலை குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது. அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு எதிராகப் பேசிய ஊடகவியலாளர்களின் கதி என்ன என்பது குறித்து வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலைத் தேடும் விசாரணைகள், நிலைமையின் தீவிரத்தை எடுத்துக்காட்டுகின்றன. 

தகவல் அறியும் விண்ணப்பம் ஊடாக பின்வரும் கேள்விகளுக்கான பதில்கள் கோரப்பட்டன.

  1. 2006 மற்றும் 2015ஆம் ஆண்டுகளுக்கு இடையில் இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களின் பெயர்களை குறிப்பிடுங்கள்.
  2. 2006 முதல் 2015ஆம் ஆண்டுவரை இலங்கையில் காணாமல் போன ஊடகவியலாளர்களின் பெயர்களை குறிப்பிடுங்கள்.
  3. 2006 மற்றும் 2015ஆம் ஆண்டுகளுக்கு இடையில் இலங்கையில் உடல் ரீதியான தாக்குதலுக்கு உள்ளான ஊடகவியலாளர்களின் பெயர்களை குறிப்பிடுங்கள்.
  4. 2006 மற்றும் 2015ஆம் ஆண்டுகளுக்கு இடையில் இலங்கையில் சட்ட அமுலாக்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட ஊடகவியலாளர்களின் பெயர்களைக் குறிப்பிடுங்கள்
  5. 2006 மற்றும் 2015ஆம் ஆண்டுகளுக்கு இடையில் இலங்கையில் எந்த ஊடக நிறுவனங்கள் தாக்கப்பட்டன, குற்றவாளிகளுக்கு எதிராக என்ன சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன?

தகவல் அறியும் உரிமை கோரிக்கையின் ஊடான வெளிப்படுத்தல்கள், ஒரு மோசமான நிலையை வெளிப்படுத்தியுள்ளது. அதாவது, குறிப்பிட்ட காலப்பகுதியில் 13 ஊடகவியலாளர்கள் குறிவைக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளனர். அனைத்து 13 வழக்குகளுக்கும் சட்ட நடவடிக்கைகள் இருந்தபோதிலும், தண்டனையிலிருந்து தப்பித்துக்கொள்வது ஒரு பிரச்சினையாகவே உள்ளது. இதில் மூன்று வழக்குகளில் குற்றவாளிகள் அடையாளம் காணப்படாததால் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கிடைக்கவில்லை.

இந்த அச்சுறுத்தல் தசாப்தத்தில் பாதிக்கப்பட்டவர்களில் பிரதீப் ரஞ்சன் பண்டார என்ற ஊடகவியலாளர் 2010 ஜனவரி 24ஆம் திகதி மர்மமான முறையில் காணாமல் போயுள்ளார். அவரது மறைவு பதில் தெரியாத கேள்விகளையும் தீர்க்கப்படாத குறைபாடுகளையும் விட்டுச்சென்றுள்ளது. அவரது மறைவு உண்மையைப் பின்தொடர்வதில் உள்ள அபாயங்களை அப்பட்டமாக நினைவூட்டுகிறது. ஊடகவியலாளர்கள் ஆபத்தான சூழ்நிலைகளில் செல்லும்போது அவர்களின் உயிருக்கும் சுதந்திரத்திற்கும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்கின்றனர்.

இந்த கொந்தளிப்பான காலகட்டத்தில் 87 ஊடகவியலாளர்கள் பல்வேறு வகையான வன்முறைகளை அனுபவித்துள்ளனர். உடல்ரீதியான தாக்குதல்களை ஊடகவியலாளர்கள் எதிர்கொண்டுள்ளமை மற்றொரு கடுமையான யதார்த்தமாகும். இந்தத் தாக்குதல்கள் உடல் ரீதியான பாதிப்பை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல், கருத்து வெளிப்படுத்தல்களை மௌனிக்கச் செய்வதும், சுதந்திரமான தகவல் பரப்புகையை தடுப்பதையும், ஜனநாயகத்தின் அடித்தளத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன. 

மேலும், லங்கா ஈ-நியூஸ், சிரச, டெய்லி மிரர் மற்றும் சியத்த ஆகிய நான்கு முக்கிய நிறுவனங்கள் உட்பட ஊடக நிறுவனங்கள் குறிவைக்கப்பட்டன என்றும் தகவல் அறியும் கோரிக்கை வெளிப்படுத்தியுள்ளது. இருப்பினும், குழப்பம் மற்றும் வன்முறைக்கு மத்தியில், நம்பிக்கையூட்டும் வகையில் ஒருசில விடயங்கள் இடம்பெற்றுள்ளன. அதாவது, இந்த தாக்குதல்களில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளமையானது, துன்பங்கள் இருந்தபோதிலும் ஓரளவு பொறுப்புணர்வைக் காட்டுகிறது. 

தகவல் அறியும் உரிமைக் கோரிக்கைக்கு கிடைத்த பதில்கள், இலங்கையில் உள்ள ஊடகவியலாளர்களின் உரிமைகள் மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்த விரிவான சீர்திருத்தங்களை அவசரமாக முன்னெடுக்கவேண்டும்  என்பதை எடுத்துக்காட்டுகின்றன. ஊடகவியலாளர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட குற்றங்களுக்கு பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தவும், தண்டனையிலிருந்து விடுபடாத கலாச்சாரத்தை நிவர்த்தி செய்யவும் அரசாங்கம் முன்னோடியான நடவடிக்கைகளை எடுப்பது அவசியமாகும். ஊடகவியலாளர்கள் தமது கடமைகளைச் செய்யும்போது, அச்சுறுத்தல்கள் மற்றும் துன்புறுத்தல்களை எதிர்கொள்ளும் போது அவர்களுக்குப் போதிய பாதுகாப்பையும் ஆதரவையும் வழங்குவதற்கான முயற்சிகளை தீவிரப்படுத்த வேண்டும். 

மேலும், ஊடக சுதந்திரத்தை நிலைநிறுத்துவதும், பழிவாங்கும் அல்லது தணிக்கைக்கு அஞ்சாமல் ஊடகங்கள் செயற்படுவதை உறுதி செய்வதும் அவசரமான தேவையாகும். ஊடகங்கள் மீதான தாக்குதல்கள் மூலம் ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து, ஊடகவியலாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்க வலுவான சட்டக் கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும். தகவல் அறியும் உரிமைக் கோரிக்கையின் வெளிப்பாடுகளை நாம் எதிர்கொள்ளும்போது, ​​உண்மையைப் பின்தொடர்வதில் ஊடகவியலாளர்கள் செய்த தியாகங்களை நினைவு கூர்வோம். ஜனநாயகக் கொள்கைகளை நிலைநிறுத்துவதற்கான அவர்களின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பானது, இருண்ட காலங்களில் நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாக செயற்படுவதோடு, ஊடக சுதந்திரம் மற்றும் தகவல் அறியும் உரிமையைப் பாதுகாக்க எம்மை ஊக்குவிக்கின்றது.

News

ஊழியர்களின் நலனுக்காக இடமாற்றப்படும் நோர்வூட் பிரதேச செயலகம்

க.பிரசன்னா நுவரெலியா மாவட்டத்தில் பிரதேச செயலகங்களின் எண்ணிக்கையை 12 ஆக அதிகரிக்க வேண்டுமென கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக 10 பிரதேச செயலகங்களை உருவாக்குவதற்கான…

By In
News

தேர்தல் சட்டத்தை மீறிய அரச அலுவலர்களுக்கு தண்டனையில்லையா?

ராகுல் சமந்த ஹெட்டியாராச்சி இலங்கை ஜனநாயக பாரம்பரியத்தின் நீண்டகால வரலாற்றை கொண்டுள்ள நாடாகும். சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்கள் ஜனநாயக ஆட்சி முறையின் அடித்தளமாகும். அதனைப் பாதுகாப்பதற்கும்,…

By In
News

இலங்கையில் பிறப்புகள் குறைவடைவதற்கும் இறப்புகள் அதிகரிப்பதற்கும் பின்னணியிலுள்ள இரகசியம் என்ன?

தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் வெளிக் கொணரப்பட்ட தரவுகள் முகமது ஆசிக் குடித்தொகை வளர்ச்சி பற்றிய தகவல் மற்றும் தரவுகளை குடித்தொகை மற்றும் வீட்டுவசதி கணக்கெடுப்பில்…

By In
News

அம்பலாந்தோட்டையில் மணல் கொள்ளைக்கு பின்னால் இருப்பது யார்?

ராகுல் சமந்த ஹெட்டியாராச்சி இன்று அதிகம் பேசப்படும் விடயம் இலஞ்சம், ஊழல், வீண்விரயம் இல்லாத நாட்டை உருவாக்குவது என்பதாகும். மக்களும் தற்போதைய அரசாங்கமும் அதற்கு இணங்கிச் சென்றுள்ளனர்….

By In

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *