News

கண்டி மாவட்டத்தில் தரிசு நிலமாக காணப்படும் 1813 ஏக்கர் வயல் காணிகள்

By In

முகம்மது ஆசிக்

இலங்கை  மன்னர் காலத்திலிருந்தே விவசாய நாடாகப் புகழ் பெறுவதற்கான  பிரதான காரணம் இந்நாட்டு மக்களின் பிரதான உணவு சோறு என்பதால் ஆகும்.

ஆகாயத்திலிருந்து விழும் ஒரு துளி நீரைக் கூடக் கடலில் கலக்க விடாத மன்னர்கள் காணப்பட்ட வரலாற்றைக் கொண்ட இலங்கையில் தற்போது நெற்பயிர் செய்கைக்குத் தடைகள் ஏராளம் என்பதைச் சொல்லித்தான் தெரிய வேண்டிய அவசியமில்லை. இந்தக் கட்டுரையானது  பெருமைக்குரிய வரலாற்றைக் கொண்ட மலையகத்தின் தனித்துவமான பிரதேசமாகத் திகழும் கண்டி மாவட்டத்தில் காணப்படும் நெல் வயல்கள் தொடர்பிலான  தேடல் ஆகும்.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கமநல அபிவிருத்தித் திணைக்களத்திடமிருந்து பெறப்பட்ட தகவலின்படி, கண்டி மாவட்டத்தில் அமைந்துள்ள 45,457 ஏக்கர் 03 றூட்,08 பேர்ச்சஸ் வயல் காணிகளில்  2022 ஆம் ஆண்டில் 1813 ஏக்கர் 02 றூட்  மற்றும் 32 பேர்ச்சஸ் வயல் காணிகள் தரிசு நிலமாகக் காணப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

கண்டி மாவட்டம் 20 பிரதேச செயலகப் பிரிவுகளைக் கொண்டுள்ளதுடன் 2021 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி மாவட்டத்தின் மக்கள் தொகை 1,501,000 காணப்படுவதுடன் 1940 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது.

கண்டி மாவட்டத்தின் விவசாய நடவடிக்கைகளைப் பொறுத்தமட்டில் மாவட்டத்தில் நெற்செய்கைக்கும் தனி இடம் காணப்படுகின்றது. மினிபே மஹா வரி திட்டத்தின் கீழ், நாட்டில் பிரதான  விவசாய திட்டம் இயங்கி வருகிறது. மேலும், ஒவ்வொரு பிரதேச செயலக பிரிவுகளிலும் சிறிய அளவிலோ அல்லது பெரிய அளவிலோ நெல் செய்கை  மேற்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

எவ்வாறாயினும் கடந்த காலங்களில் மாவட்டத்தில் அதிகளவான நெற்செய்கை காணிகள் தரிசு நிலமாகக் காணப்பட்டதுடன், அந்தத் தரிசு வயல்களை பண்படுத்தும் (உழுவும்) போது அந்நிலங்கள்  பயனற்ற தன்மையில் காணப்பட்டது. கண்டி மாவட்டத்தில் தரிசு வயல்களை உழுவும்  அல்லது பண்படுத்தும் செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்ற போதிலும், தரிசு நிலங்கள் இன்னும் காணப்படுவதாக விவசாயிகள் தொடர்ந்து கூறி வருகின்றனர்.

அதன்படி, மாவட்டத்தில் நெல் சாகுபடி தொடர்பான உண்மையான தரவுகளை அறிய 2016 ஆம் ஆண்டு 12 ஆம் இலக்க தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் விதிகளின் கீழ் பெறப்பட்ட தகவல்களைப் பின்வருமாறு தொகுக்கலாம்.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட  கோரிக்கைக்கு, கண்டி கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர் திருமதி அனுஷா தேவப்பிரியவின் கையொப்பத்துடன் வழங்கப்பட்ட பதிலில் இந்த விவரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

கண்டி மாவட்டத்தில் 45,457 ஏக்கர் 03 றூட்   08 பேர்ச்சஸ் நெல்வயல்கள்  காணப்படுவதாகவும், அதில் 26,846 ஏக்கர் நிலப்பரப்பில் கடந்த சிறுபோக பயிர்ச் செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கமநல  அபிவிருத்தித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கமநல அபிவிருத்தித் திணைக்களம் வழங்கிய தகவலின் படி 2022 ஆம் ஆண்டில் 1813  ஏக்கர் 2 றூட்  32 பேர்ச்சஸ் நெற்செய்கை காணிகள் தரிசுநிலமாகக் காணப்படுகின்றது.

2022 ஆம் ஆண்டு மீள் பயிரிடப்படும் என எதிர்பார்க்கப்படும் தரிசு வயல் காணிகளின் அளவு 378 ஏக்கர், 2 றூட், 32 பேர்ச்சஸ் எனக் கமநல அபிவிருத்தி திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கு மேலதிகமாக மாவட்டத்தில் காணப்படும் தரிசு நிலங்களான 191 ஏக்கர், 02 றூட் வயல் காணிகளை இந்தப் பெரும் போகத்தில் மீண்டும் பண்படுத்துவதற்கு (உழுவதற்கு) எதிர்பார்ப்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

News

10 வருடங்களில் பொலிஸ் சேவையில் இருந்து 2847 பேர் இடைநிறுத்தம்!

ந.லோகதயாளன் கடந்த 10 ஆண்டுகளில்  பொலிஸ் திணைக்களத்தில் இருந்து 2847 பேர் பணியிலிருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. பொலிஸ் திணைக்களத்தின் தலைமையகத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட தகவல்…

By In
News

போதையில் மூழ்கும் சமூகம்;  அதிர்ச்சி தரும் புள்ளிவிபரங்கள்

2023ஆம் ஆண்டு மாத்திரம் 162,088 பேர் கைது! மொஹமட் ஆஷிக் போதைப்பொருள் விவகாரம் இலங்கையில் மட்டுமன்றி அனைத்து நாடுகளிலும் பாரிய நெருக்கடியாக உள்ளது. எமது நாட்டில், அதை…

By In
News

பூமியை நான்கு தடவைகள் சுற்றிவரும் அளவிற்கு இலங்கையை வானில் சுற்றியுள்ள மஹிந்த ராஜபக்ஷ

ராகுல் சமந்த ஹெட்டியாராச்சி விமானப்படைத் தலைமையகத்திலிருந்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவல்களின்படி, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 2005ஆம் ஆண்டு முதல் 2015ஆம்…

By In
News

ஜனாதிபதி அலுவலகத்தின் சொகுசு வாகனங்கள் ஏலத்திற்கு முன்னர் பகிர்ந்தளிக்கப்பட்ட விதம்!

● கோட்டாபயவின் பிரத்தியேக பணியாளர்களுக்கு 11 வாகனங்கள் ● ரணிலின் பிரத்தியேக பணிக்குழாமிற்கு 68 வாகனங்கள் ஜனக சுரங்க வாகனங்களை பொதுவாக காட்சியறைகளில் வைத்தே பொதுமக்களுக்கு காட்சிப்படுத்துவர்….

By In

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *