News

இலங்கையில் கொவிட் தொற்றும் நீர் முகாமைத்துவமும்

By In

நீரின்றி அமையாது உலகு என்பர்.  பூமியில் 79% நீரால் சூழ்ந்திருந்தால் கூட அதில் 97.5 சதவீதம் கடல் நீராகவே இருக்கிறது. தங்கத்தை விட தண்ணீரின் விலை அதிகரித்து விடக்கூடிய ஒரு துர்ப்பாக்கிய நிலையில் பெருகிவருகின்ற மக்கள் தொகையும், வளர்ந்துவரும் தொழில்துறை காரணமாகவும் நீர்ப்பாவனை அதிகரித்த வண்ணமேதான் இருக்கிறது. யதார்த்த நிலை இவ்வாறிருக்க கொவிட் பெருந்தொற்று சாமான்ய வாழ்க்கையை ஒருபுறம் புரட்டிப்போட்டது. முகக்கவசம் அணிவதும், தூய நீரில் கைகளை கழுவுவதும் கட்டாயமாக்கப்பட்டது. 

இலங்கையின் பிரதான இயற்கை வளமாக நீர் வளம் காணப்படுகிறது.  இலங்கை சுமார் 103 பிரதான நதிகளை கொண்டிருந்தாலும் அவற்றுள் 20 நதிகளே வருடம் முழுவதும் பாய்ந்தோடும் நதிகளாக காணப்படுகிறது. இவ்வாறானதொரு நிலையில் கொவிட் தொற்று காலத்தில் இலங்கையின் நீர்ப்பாவனை மற்றும் நீர் முகாமைத்துவம் என்பது சற்றே  ஒரு விடயமாக உருவெடுத்தது. 

இலங்கை தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபைக்கு தகவலறியும் சட்டத்தை பயன்படுத்தி நாம் அனுப்பிய வினாக்களுக்கான விடைகளைக் கொண்டு இதனை நாம் தெளிவு பெறலாம்.

2019ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது, 2020 ஆண்டுக்குரிய மொத்த நீர்ப்பாவனையானது அதிகரித்துள்ளது. 2019ஆம் ஆண்டுக்குரிய வீட்டு நீர்ப்பாவனை 419,108,884m3 ஆக இருக்கும் அதேவேளை வீடு அல்லாத நீர்ப்பாவனை 141,901,321m3 ஆக காணப்படுகிறது. 

2020ஆம் ஆண்டுக்குரிய  வீட்டு நீர்ப்பாவனை 460,795,035m3 ஆக இருக்கும் அதேவேளை வீடு அல்லாத நீர்ப்பாவனை 135,117,284m3 ஆக காணப்படுகிறது. குறிப்பாக 2020ஆம் ஆண்டில் வீட்டு நீர்ப்பாவனை மட்டம் அதிகரித்திருப்பதே 2019ஆம் ஆண்டை விட 2020இல் மொத்த நீர்ப்பாவனை அளவு அதிகரித்திருப்பதற்கான காரணமாகும். ஊரடங்கு நாட்களில்  வீடுகளிலேயே தங்கியிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டமை நீர்ப்பாவனை அதிகரிப்பிற்கு முக்கிய காரணமாக கொள்ளலாம். 

நீர்வழங்கல், நீர்ப்பாவனை என்பன ஒருபுறம் அதிகரித்திருக்கும் அதேவேளை அதற்கான கட்டணங்களை குறித்த சிந்தனையும் மக்கள் மனதில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியிருந்தன. எனவே கொவிட் 19 பரவல் காரணத்தினால் சபையினால் வழங்கப்பட்ட சலுகைகள் என நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்திருக்கும் சலுகைகள் பின்வருமாறு:- 

  • நாடளாவிய ரீதியில் ஊரடங்கு பிறப்பித்திருந்த 2020/05 ஆம் மாதத்திற்குரிய அனைத்து நீர்ப்பட்டியல்களுக்குமான தாமதக் கொடுப்பனவை அறவிடாமை. 
  • நீர்ப்பட்டியல் கட்டணத்தை செலுத்துவதற்காக சலுகை காலத்தினை வழங்குதல். 
  • 2020/03 ஆம் மாதம் முதல் தற்போது வரை நீர்ப்பட்டியலுக்குரிய நிலுவை தொகையை செலுத்தாதவர்களின் நீர் இணைப்பினை துண்டிக்காதிருப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளல். 
  • நிலுவைத் தொகையை ஒரே தடவையில் செலுத்துவதற்கு முடியாத பாவனையாளர்களுக்கு தவணை முறையில் கட்டணத்தை செலுத்துவதற்கான வசதிகளை வழங்குதல். 
  • அமைச்சரவையின் தீர்மானத்திற்கு அமைவாக சுற்றுலாக் கைத்தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு நீர்ப்பட்டியல் கட்டணத்தை செலுத்துவதற்காக சலுகைக் காலத்தை வழங்குதல்.

குறிப்பிட்ட கொவிட் காலப்பகுதியில் நீர்க்கட்டண அறவிடல் முறையில் அதாவது நீர்ப்பாவனை அலகுகளுக்குரிய(units) கட்டணமுறையில் எவ்வித மாற்றங்களும் ஏற்படவில்லை. அத்துடன் 2012 அக்டோபர் மாதம் முதலாம் திகதி திருத்தியமைக்கப்பட்ட நீர் கட்டண அறவிடல் முறையே தற்போது வரை நடைமுறையில் இருப்பதாகவும்,  2012.09.18 ஆம் திகதி பிரசுரிக்கப்பட்ட இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் வர்த்தமானிப் பத்திரிகையில் குறிப்பிலிட்டுள்ளவாறே நடைமுறைப்படுத்தப்படுவதாகவும்  இலங்கை நீர் வளங்கள் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. * 

நீர் வளத்தின் முக்கியத்துவமறிந்து பொறுப்புடன் பயன்படுத்துவதும் அதனை விநியோகிப்பதும் பாவனையாளர்களதும், வழங்குனர்களதும் தலையாய கடமையாகும்.  

*2012.09.18 ஆம் திகதி பிரசுரிக்கப்பட்ட இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் வர்த்தமானிப் பத்திரிகையை இங்கே பார்வையிடலாம். http://www.waterboard.lk/web/images/contents/consumer_help/water_tariff_e.pdf

News

ஜீவன சக்தி காப்புறுதி திட்டம் மூலம் ஏமாற்றப்பட்ட தோட்டத் தொழிலாளர்கள்

க. பிரசன்னா பெருந்தோட்டத் தொழிலாளர்களின் காணி உரிமை, தனி வீடு மற்றும் ஊதியம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் காலங்காலமாக அரசாங்கத்தால் வழங்கப்பட்ட உறுதிமொழிகள் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளமை…

By In
News

போலியான தகவல் வழங்கிய அஸ்வெசும பயனாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?

க.பிரசன்னா கடந்த காலங்களில் அஸ்வெசும கொடுப்பனவு வழங்கும் திட்டத்தில் பல்வேறு குறைபாடுகள் காணப்பட்டதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக போலியான தகவல்களை வழங்கி தகுதியற்ற நபர்களும் அஸ்வெசும கொடுப்பனவை…

By In
News

 ரணில் விக்ரமசிங்கவின் ஓய்வூதியம்

– ஜனக சுரங்க இலங்கையின் எட்டாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக பதவி வகித்த ரணில் விக்ரமசிங்க, கடந்த காலங்களில் பிரதமர், பாராளுமன்ற உறுப்பினர் என பல்வேறு…

By In
News

18 வருடங்களாக நிர்மாணிக்கப்படும் மெரைன் டிரைவ் வீதி

க. பிரசன்னா கொழும்பு – காலி பிரதான வீதியில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கான சிறந்த வழி என அடையாளம் காணப்பட்ட கரையோர வீதியின் (மெரைன் டிரைவ்) ஆறு…

By In

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *