ஒவ்வொரு ஆண்டும் G.C.E. சாதாரண தர மற்றும் உயர் தர பரீட்சைகளை எழுதும் ஆயிரக்கணக்கான மாணவர்களில் அனைவருமே எதிர்பார்த்த அளவிற்கேற்ப சிறந்த புள்ளிகளைப் பெறுவதில்லை. மேலும் முக்கியமாக, அனைவரும் இப்பரீட்சைகளில் தேர்ச்சி பெறுவதுமில்லை. இவ்வாறானோருக்கு அடுத்த படியாக அமைவதென்ன? இச்சந்தர்பங்களில் இலங்கை தொழிற் பயிற்சி அதிகாரசபை மிகவும் முக்கியத்துவமானதொன்றாக விளங்குகின்றது. சாதாரண தரப் பரீட்சையிலேனும் சிற்பியடைந்த அல்லது பரீட்சைகுத் தோற்றுவித்த இளைஞர்களுக்கு இப்போது பலவிதமான தொழிற்பயிற்சி பாடநெறிகளைக் கற்கும் வாய்ப்பு எம் நாட்டில் உள்ளது. இலங்கை தொழிற் பயிற்சி அதிகாரசபையின் பாடநெறிகள் மற்றும் விதிமுறைகள் குறித்த சில முக்கிய தகவல்களைப் பெறுவதற்காக, தகவல் அறியும் உரிமை (RTI) விண்ணப்பம் ஒன்று சமர்ப்பிக்கப்பட்டது. தொழிற் பயிற்சி அதிகாரசபையின் படி, வெவ்வேறு பாடநெறிகளைக் கற்பதற்கு வெவ்வேறு தகுதிகள் தேவைப்படும். உதாரணமாக, ஒரு ஆட்டோமொபைல் மின்னியல் வல்லுநருக்கான (automobile electrician) தேசிய சான்றிதழ் பாடநெறியில் சேர விரும்பும் ஒரு நபர் குறைந்தது ஆறு சாதாரண தர பரீட்சை பாடங்களில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது தொடர்புடைய துறையில் NVQ தரம் 3 (NVQ Level 3) தகுதி பெற்றிருக்க வேண்டும். ஆனால் தாவர வளர்ப்பு மேம்பாட்டு உதவியாளருக்கான தேசிய சான்றிதழுக்காக படிப்பதற்கு, ஒருவர் குறைந்தபட்சம் G.C.E. சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றுவித்தவராகவே இருத்தல் வேண்டும். ‘National Diploma – Electronic Technology’ போன்ற சில பாடநெறிகள் படிப்பதற்கு, தொடர்புடைய NVQ தரம் 3 அல்லது 4 பாடநெறியை முடித்தவராக அல்லது G.C.E. உயர் தரத்தில் தொழில்நுட்ப துறையில் அல்லது பிற தொடர்புடைய துறையில் மூன்று பாடங்களில் சிற்பி பெற்றவராக இருக்க வேண்டும். வயது அடிப்படையிலும் சேர்க்கை வரையறைகள் உள்ளன. தொழிற் பயிற்சி அதிகாரசபையின் படி, இப்பாடநெறிகளை ஆரம்பிக்கக்கூடிய குறைந்தபட்ச வயது பதினாறு ஆகும். பாலின அடிப்படையில் நுழைவு கட்டுப்பாடுகள் இல்லை என்றும் தொழிற் பயிற்சி அதிகாரசபையால் தெரிவிக்கப்பட்டது. நாட்டின் இளைஞர்களின் எதிர்காலம் என்பது முக்கியமானதொரு விடயம்; எனவே, பல்கலைக்கழகங்களுக்கு செல்ல முடியாதவர்களுக்கு தொழில் பயிற்சி கிடைப்பதற்கான இவ்வகை வாய்ப்பு பலரது எதிர்காலங்களை மேம்படுத்தும் திறன் கொண்டது என்பதை பலரும் ஒப்புக்கொள்வார்கள்.
10 வருடங்களில் பொலிஸ் சேவையில் இருந்து 2847 பேர் இடைநிறுத்தம்!
ந.லோகதயாளன் கடந்த 10 ஆண்டுகளில் பொலிஸ் திணைக்களத்தில் இருந்து 2847 பேர் பணியிலிருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. பொலிஸ் திணைக்களத்தின் தலைமையகத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட தகவல்…
போதையில் மூழ்கும் சமூகம்; அதிர்ச்சி தரும் புள்ளிவிபரங்கள்
2023ஆம் ஆண்டு மாத்திரம் 162,088 பேர் கைது! மொஹமட் ஆஷிக் போதைப்பொருள் விவகாரம் இலங்கையில் மட்டுமன்றி அனைத்து நாடுகளிலும் பாரிய நெருக்கடியாக உள்ளது. எமது நாட்டில், அதை…
பூமியை நான்கு தடவைகள் சுற்றிவரும் அளவிற்கு இலங்கையை வானில் சுற்றியுள்ள மஹிந்த ராஜபக்ஷ
ராகுல் சமந்த ஹெட்டியாராச்சி விமானப்படைத் தலைமையகத்திலிருந்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவல்களின்படி, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 2005ஆம் ஆண்டு முதல் 2015ஆம்…
ஜனாதிபதி அலுவலகத்தின் சொகுசு வாகனங்கள் ஏலத்திற்கு முன்னர் பகிர்ந்தளிக்கப்பட்ட விதம்!
● கோட்டாபயவின் பிரத்தியேக பணியாளர்களுக்கு 11 வாகனங்கள் ● ரணிலின் பிரத்தியேக பணிக்குழாமிற்கு 68 வாகனங்கள் ஜனக சுரங்க வாகனங்களை பொதுவாக காட்சியறைகளில் வைத்தே பொதுமக்களுக்கு காட்சிப்படுத்துவர்….
Recent Comments