ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையானது இலங்கையில் அதிக போட்டி நிறைந்த ஒரு பரீட்சையாவதோடு ஆரம்ப பாடசாலைகளில் (ஐந்தாம் வகுப்பு வரையான) இறுதி வருட வகுப்புமாகும். இப்பரீட்சை கல்வி அமைச்சின் கீழ் உள்ள இலங்கை பரீட்சை திணைக்களத்தால் நடத்தப்படுகின்றது. இந்த பரீட்சை முடிவுகளின் பின்னர் வெளயிடப்படுகின்ற வெட்டுப் புள்ளிகளை அடிப்படையாகக் கொண்டு பிரபல்யம் வாய்ந்த முன்னணிப் பாடசாலைகளுக்கான அனுமதி வழங்கப்படுகின்றது. அதன் காரணமாகவே ஐந்தாம் வகுப்பு புலமைப் பரிசில் பரீட்சை இந்தளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருப்படுகின்றது. இந்த இலட்சியத்தை அடிப்படையாக வைத்து பிரதான பாடசாலைகளுக்கு அனுமதி பெறும் நோக்கில் சில மாணவர்கள் திறமையாக படித்து அதிகபட்ச புள்ளிகளைப் பெறுகின்றனர்.
மிகவும் திறமையாக படித்து பரீட்சைக்கு தோற்றிய “smart kid” ஒரு மாணவரின் பெற்றார் தகவல் அறிவதற்கான விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பித்து பிள்ளையின் பரிட்சையில் பெற்றுக்கொண்ட புள்ளிகளைப் பார்ப்பதற்காக விடை எழுதப்பட்ட வினாப் பத்திரத்தினை அல்லது அதன் பிரதி ஒன்றை கோரி இருந்தார். ஏனெனில் பரீட்சை முடிவை விட அவரது மகள் திறமையான முறையில் பரீட்சையை எழுதி இருந்தார் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் இந்த கோரிக்கையை செய்திருந்தார்.
ஆனாலும் அத்தகைய தகவலை வழங்க இலங்கை பரீட்சை திணைக்களம் மறுத்த போது அவர் மீண்டும் தகவல் அறிவதற்கான விண்ணப்பம் மூலம் குழந்தை விண்ணப்பதாரியாக சிறுவர் உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் அதே கோரிக்கையை விடுத்தார்.
அவரின் வாதத்தின் படி குழந்தையின் பரீட்சை விடைத்தாள்கள் முறையே பகுதி ஒன்று மற்றும் பகுதி இரண்டு ஆகியன மாற்றி தவறான முறையில் இணைக் கப்பட்டதாகவும் அதனால் இரண்டு வினாப் பத்திரங்களையும் வெவ்வேறாக பார்வையிட்டு அவை இரண்டிலும் குழந்தையின் கையெழுத்து சரியாக இருக்கின்றதா என்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவரின் தகவல் கோரல் பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டது.
அதன்படி இலங்கை பரீட்சை திணைக்களம் பரீட்சாத்தியையும் அவரது பெற்றோரையும் அழைத்து விடை எழுதப்பட்ட பத்திரங்களை பார்வையிட்டு கையெழுத்தை உறுதிப்படுத்துவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. பெயர் குறிப்பிடப்பட்ட தகவல் அதிகாரியை சந்தித்து உரிய விடை எழுதப்பட்ட பத்திரத்தை பார்வையிட்டு மேலும் பல விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டது.
அதன்போது பிழையான முறையில் புள்ளிகள் இடப்பட்டிருந்தமை மற்றும் புள்ளிகளை கூட்டி மொத்த தொகை கணிப்பீடு என்பவற்றில் தவறுகள் நிகழ்ந்திருந்தமை கண்டுபிடிக்கப்பட்டு மேலதிக நடவடிக்கை எடுக்க சுட்டிக் காட்டப்பட்டது. ஆனாலும் அது தொடர்பாக இதுவரையில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
எவ்வாறாயினும் இந்த அடிப்படையில் தகவல் கோரியதால் அநீதி நடந்திருப்பது தெரியவந்திருப்பதோடு விசாரணை இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கின்றது. ஆனாலும் திருப்திகரமான பதில் வழங்கப்படவில்லை. இலங்கை பரீட்சை திணைக்களம் பாதிக்கப்பட்டுள்ள பிள்ளைக்கு நீதியை நிலைநாட்ட வேண்டிய பொறுப்பில் இருக்கின்றது.
இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் நல்லாட்சி மற்றும் ஜனநாயகத்தை பலப்படுத்தும் வகையில் அமெரிக்க உதவித் திட்டத்துடன் இணைந்து தகவல் அறிவதற்கான சட்டம் பற்றி பயிற்சி செயலமர்வொன்றை நடத்தியது. அந்த செயலமர்வில் பங்குபற்றிய ஒருவர் தகவல் அறிவதற்கான உரிமை சட்டம் பற்றி அறிந்து கொண்டவுடன் அந்த சட்டத்தை பன்படுத்தி இலங்கை பரீட்சை திணைகக்ளத்தில் தகவல் கேரியமை தொடர்பாக வழங்கிய விடயம் இதுவாகும்.
10 வருடங்களில் பொலிஸ் சேவையில் இருந்து 2847 பேர் இடைநிறுத்தம்!
ந.லோகதயாளன் கடந்த 10 ஆண்டுகளில் பொலிஸ் திணைக்களத்தில் இருந்து 2847 பேர் பணியிலிருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. பொலிஸ் திணைக்களத்தின் தலைமையகத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட தகவல்…
போதையில் மூழ்கும் சமூகம்; அதிர்ச்சி தரும் புள்ளிவிபரங்கள்
2023ஆம் ஆண்டு மாத்திரம் 162,088 பேர் கைது! மொஹமட் ஆஷிக் போதைப்பொருள் விவகாரம் இலங்கையில் மட்டுமன்றி அனைத்து நாடுகளிலும் பாரிய நெருக்கடியாக உள்ளது. எமது நாட்டில், அதை…
பூமியை நான்கு தடவைகள் சுற்றிவரும் அளவிற்கு இலங்கையை வானில் சுற்றியுள்ள மஹிந்த ராஜபக்ஷ
ராகுல் சமந்த ஹெட்டியாராச்சி விமானப்படைத் தலைமையகத்திலிருந்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவல்களின்படி, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 2005ஆம் ஆண்டு முதல் 2015ஆம்…
ஜனாதிபதி அலுவலகத்தின் சொகுசு வாகனங்கள் ஏலத்திற்கு முன்னர் பகிர்ந்தளிக்கப்பட்ட விதம்!
● கோட்டாபயவின் பிரத்தியேக பணியாளர்களுக்கு 11 வாகனங்கள் ● ரணிலின் பிரத்தியேக பணிக்குழாமிற்கு 68 வாகனங்கள் ஜனக சுரங்க வாகனங்களை பொதுவாக காட்சியறைகளில் வைத்தே பொதுமக்களுக்கு காட்சிப்படுத்துவர்….
Recent Comments