நகரவாக்கம் காரணமாக நாட்டில் பின்தங்கிய பகுதிகளில் நடைமுறையில் இருந்து வரும் மரபு ரீதியான விவசாயம் மறைந்து வருகின்றது. இத்துறையை பாதுகாப்பதற்காக அரசாங்கத்தால் வழங்கப்படுகின்ற உதவிகளிலான குறைபாடு மற்றும் பாதுகாப்பதற்காக போதியளவு கவனம் செலுத்தப்படாமை போன்ற காரணிகளால் இந்நிலை ஏற்பட்டிருக்கின்றது.
ஒரு காலகட்டத்தில் இலங்கையின் தானியக் களஞ்சியம் என்றழைக்கப்பட்ட ஊவா மாகாணத்தில் இலட்சக் கணக்கிலான ஏக்கர்களில் விவசாய செய்கை பன்னப்பட்டு வந்ததால் விவசாயத்திற்கும் உணவு உற்பத்திக்கும் பேயர் போன பிரதேசமாக வெல்லஸ்ஸ என்று அழைக்கப்பட்டது. ஆனால் இன்றைய காலகட்டத்தில் நகரமயவாக்கம் வயல்களை ஆக்கிரமித்ததால் அங்கே வயல் வெளிகளை காண முடிவதில்லை.
வாழ்க்கை முறையில் நகர மயவாக்கம் மாற்றத்தை கொண்டு வந்தாலும் மரபு ரீதியான விவசாயிகள் தொடர்ந்தும் வயல் நிலங்களிலும் விவசாய நிலத்திலும் பயிர்ச் செய்கைகளில் ஈடபட்டு வருகின்றார்கள். அதன் மூலம் ஆறுவடை செய்து தங்களது தேவைகளை நிறைவு செய்து கொள்கின்றார்கள்.
முறையான நீர் வசதி இன்மை காரணமாக அவர்கள் இத்தகைய விவசாய நடவடிக்கைகளை கைவிட்டு விட்டு வேறு தொழில்களிலும் நாட்டம் காட்ட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இவ்வாறான நிலைக்குள்ளான 50 குடும்பங்கள் அளவில் வினிதகம பகுதியில் அமைந்துள்ள வியாதிகுண கிராமத்தில் வாழ்ந்து வருகின்றனர். வேபெத்த குளத்தில் இருந்து இந்த குடும்பங்களின் விவசாய நடவடிக்கைகளுக்கு போதுமான நீர் கிடைத்து வந்தாலும் இந்த குளம் கடந்த பல வருடங்களாக கைவிடப்பட்ட நிலையில் இருந்து வருவதால் கவனிப்பாரற்ற நிலைக்கு உள்ளாகி இருக்கின்றது. அதனால் விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை தடுப்பதற்காக குளம் உடனடியாக திருத்தம் செய்யப்பட வேண்டும்.
குளத்தை துப்புறவு செய்து புணரமைப்பு செய்யுமாறு அரசியல்வாதிகளுக்கு கிராமவாசிகள் பலமுறை வேண்டுகோள் விடுத்தாலும் அவை அனைத்தும் செவிடன் காதில் ஊதிய சங்காகவே இருந்து வருகின்றது. இந்த பிரச்சினை தொடர்பாக கவனம் செலுத்தும் வகையில் தகவல் அறிவதற்கான சட்டத்தை பயன்படுத்தி நிவாரணம் தேடுவதற்கு அவர்கள் திட்டமிட்டனர். அவர்களுக்கு அபிபரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் குழுவொன்று உதவி செய்ய முன்வந்தது. இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் நல்லாட்சி மற்றும் ஜனநாயகத்தை பலப்படுத்தும் வகையில் அமெரிக்க உதவித் திட்டத்துடன் இணைந்து தகவல் அறிவதற்கான சட்டம் பற்றி பயிற்சி செயலமர்வொன்றை நடத்தியது. அந்த செயலமர்வில் பங்குபற்றிய அப்பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர்களே இவ்வாறு உதவி செய்ய முன்வந்தவர்களாவர்.
அதன்படி அவர்கள் ஊவா மாகாண விவசாய திணைக்களத்திடம் தகவல் அறிவதற்கான விண்ணப்பப் படிவம் ஒன்றை சமர்ப்பித்து நீண்ட காலமாக குளம் புணரமைக்கப்படாமல் கைவிடப்பட்ட நிலையில் மோசமாக இருப்பதற்கான காரணம் என்ன என்பதை வினவினர். எவ்வாறாயினும் அவர்களால் எதிர்பார்த்த பதில் கிடைகக்வில்லை. தகவல் கோரப்பட்டதற்கிணங்க உரிய காலத்தில் அவர்களால் தகவல் வழங்க முடியவில்லை என்று விவசாய திணைக்களம் விண்ணப்பதாரிகளுக்கு அறிவித்தது.
அத்துடன் நீர்ப்பாசனத் திணைக்களத்தின் தகவல் அதிகாரிக்கும் அது தொடர்பாக தகவல் கோரும் விண்ணப்பம் ஒன்று சமர்ப்பிக்கப்பட்டது. அனாலும் இதுவரையில் விளக்கம் கொடுக்கப்படவில்லை. இருந்தாலும் விவசாயிகள் அவர்களது பிரச்சினைக்கு தகவல் அறியும் சட்டம் உதவியாக இருக்கும் என்று கருதுவதோடு உரிய இலக்காக்கள் பதிலளிக்கும் என்ற உறுதியான நம்பிக்கையுடன் இருந்து வருகின்றனர்.
எவ்வாறாயினும் இளைஞர்கள் அவர்களுக்கு தகவல் அறிவதற்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து வழிகாட்டி மேலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கின்றனர். அத்துடன் பிரதேசவாசிகள் அரச துறை அதிகாரிகளை கேள்வி எழுப்ப முடியாது என்று கருதி வந்த நிலையை மாற்றியமைத்து எந்த நேரத்திலும் மக்களின் பிரச்சினை தொடர்பாக அதிகாரிகளை தகவல் கோருவதன் மூலம் கேள்வி எழுப்ப முடியும் என்ற அடிப்படையில் ஊக்குவித்தி ருக்கின்றனர்.
இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் நல்லாட்சி மற்றும் ஜனநாயகத்தை பலப்படுத்தும் வகையில் அமெரிக்க உதவித் திட்டத்துடன் இணைந்து தகவல் அறிவதற்கான சட்டம் பற்றி பயிற்சி செயலமர்வொன்றை நடத்தியது. அந்த செயலமர்வில் பங்குபற்றிய அப்பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர்களால் இந்த தகவல் சமர்ப்பிக்கப்பட்டது.
EPF நிதியம் 400 டிரில்லியனை அடைந்ததுடன், ETF நிதியம் 400 பில்லியனை எட்டியது: அவை உறுப்பினர்களுக்கு பயனளிக்காமல் விரிவுபடுத்தப்பட வேண்டுமா?
சமீபத்திய தேர்தல் பிரச்சாரங்களும் மே தின நிகழ்வுகளும் இலங்கையின் தொழிலாளர் படையை முறையாகப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஓர் நிலைத்தன்மையான சமூகப் பாதுகாப்பு முறைமையின் அவசியத்தை எடுத்துக்காட்டுவதுடன் உறுதிப்படுத்துகின்றன. 1958…
மாத்தறை பொது வைத்தியசாலையின் மருத்துவக் கழிவு விவகாரம்: விசாரணைக்கு அளிக்கப்பட்ட பதில்கள் பொய்யானவை!
ராகுல் சமந்த ஹெட்டியாராச்சி உலகெங்கிலும் மருத்துவக் கழிவுகளை அகற்றுவது மிகவும் அவதானமாக மேற்கொள்ளப்படும் ஒரு செயற்பாடாகும். 22 மில்லியன் குடிமக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக இலங்கையின் சுகாதார…
அரச நிதி இப்படியும் வீணடிப்பு: 4 முன்னாள் ஜனாதிபதிகளுக்கு 397 தனிப்பட்ட பணியாளர்கள்!
க.பிரசன்னா முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகள் தொடர்பில் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டுவரும் கருத்துக்கள் அவர்களின் சிறப்புரிமைகளுக்கு அரச நிதி அதிகளவு விரயம் செய்யப்படுவதை வலியுறுத்தியுள்ளது. இந்நிலையில், முன்னாள் பிரதமர்கள் மற்றும்…
ஜீவன சக்தி காப்புறுதி திட்டம் மூலம் ஏமாற்றப்பட்ட தோட்டத் தொழிலாளர்கள்
க. பிரசன்னா பெருந்தோட்டத் தொழிலாளர்களின் காணி உரிமை, தனி வீடு மற்றும் ஊதியம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் காலங்காலமாக அரசாங்கத்தால் வழங்கப்பட்ட உறுதிமொழிகள் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளமை…
Recent Comments