தகவல் அறியும் உரிமைச் சட்டம் பற்றி மத்திய மாகாண ஊடகவியலாளர்களுக்கான அறிவூட்டல் செய்யும் செயலமர்வு டிசம்பர் 22 ஆம் திகதி கண்டி டெவோன் ஹோட்டலில் நடைபெற்றது. இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் ஏற்பாடு செய்திருந்த இந்த பயிற்சி கருத்தரங்கில் கண்டி, நுவரெலியா மற்றும் மாத்தளை மாவட்டங்களைச் சேர்ந்த 122 ஊடகவியலாளர்கள் அளவில் கலந்துகொண்டனர்.
தமிழ் மற்றும் சிங்கள மொழி மூலம் வெவ்வேறாக நடத்தப்பட்ட இரண்டு செயலமர்வுகளில் சிங்கள மொழி மூலமான செயலமர்வை கமல் லியனாரச்சி, திருமதி ராதிகா குணரத்ன ஆகியோர் நடத்தினர். தமிழ் மொழி மூலமான செயலமர்வை சட்டத்தரணி ஐங்கரன் மற்றும் மாதுரி தமிழ்மான் ஆகியோர் நடத்தினர்.
தகவல் அறிவதற்கான உரிமைச் சட்டமானது ஜனநாயகத்தை மதிக்கும் மக்களது வெற்றியாகும். 1998 ஆம் ஆண்டின் கொழும்பு பிரகடனம், ஊடக சமூகத்தினதும் சட்டத்துறையினரதும் தொடர்ச்சியாக மேற்கொண்ட போராட்டத்தின் விளைவாக இச்சட்டம் 2017 பெப்ரவரியில் அமுலுக்கு வந்தது. இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் இந்த போராட்டத்தில் முக்கியமான பங்களிப்பை செய்திருக்கின்றது.
பிரசைகளுக்கு தகவல் அறிவதற்கு இருக்கின்ற வரலாற்று முக்கியத்தவத்தை உணரச் செய்யும் வகையில் நிறைவேற்றப்பட்டுள்ள இந்த தகவல் அறிவதற்கான சட்டம் உலகில் இச்சட்டம் நடைமுறையில் உள்ள 10 சிறந்த தகவல் சட்டத்தைக் கொண்டுள்ள நாடுகள் வரிசையில் ஒன்றாக இலங்கை இருக்கின்றது. இருந்தாலும் மக்கள் மத்தியில் பல தவறான அபிப்பிராயங்களும் பிழையான பிரச்சாரங்களும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதனால் பிரசைகளின் தகவல் அறிவதற்கான உரிமையை பாதுகாக்கும் வகையில் “சிற்நத சட்டமாக” அறிமுகப்படுத்தி மக்கள் இந்த சட்டத்தின் மூலம் அதிகபட்ச நன்மைகளை அடையும் வகையில் அதற்காக கூடுதலான அவதானத்தை செலுத்தி மக்களை விழிப்படையச் செய்யும் செயற்பாடுகளை இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் முன்னெடுத்து வருகின்றது.
தகவல் அறிவதற்கான சட்டத்தை மக்களிடம் கொண்டு போவதற்கு இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் முறையாக திட்டம் வகுத்து நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றது. இதன் மற்றுமோர் அங்கமாக மாவட்டங்கள் தேர்றும் ஊடகவியலாளர்களுக்கான செயலமர்வுகளை நடத்துவதும் நடைபெற்று வருகின்றது. காலி மற்றும் கம்பஹா மாவட்ட ஊடகவியலாளர்களுக்கான செயலமர்வு அண்மையில் நடைபெற்றது. அவ்வாறே கொழும்பை மைய்யப்படுத்திய ஊடகவியலாளர்களுக்காக வெவ்வெறான செயலமர்வுகளும் நடத்தப்பட்டு இச்சட்டம் பற்றிய விரிவான அறிவூட்டல்கள் செய்யப்பட்டு வருகின்றன. இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தால் அச்சிட்டு வெளியிடப்பட்டுள்ள மும் மொழிகளிலுமான வழிகாட்டல் கையேடும் இந்த செயலமர்வுகளில் ஊடகவியலாளர்களுக்கு விநியோகம் செய்யப்பட்டிருக்கின்றது. அதன் பிரதிகள் தகவல் ஆணைக்குழுவிடமும் கையளிக்கப்பட்டது. அவ்வாறே தகவல் அறிவதற்கான சட்டம் தொடர்பாக மேலும் அறிவூட்டல்களை செய்யும் வகையில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் மேலும் பல திட்டங்களை முன்னெடுக்க இருக்கின்றது.
Recent Comments