News

ஸ்ரீ லங்கா கிரிகட் பற்றி தகவல் அறியும் சட்டத்தின் மூலம் வெளிப்படுத்தப்பட்ட தகவல்கள்

By In

இலங்கை கிரிகட் அணி கடந்த காலப்பகுதிக்குள் பல சர்வதேச போட்டிகளில் பங்குபற்றி தொடர் தோள்விகளைச் சந்தித்து வந்ததால் பரவலாக பேசப்படும் நிலைக்குள்ளாகி இருக்கின்றது. 2019 ஆம் ஆண்டின் ஆரம்பம் முதல் அணியின் வீரர்கள் திறமைகளை வெளிப்படுத்த தவறியதால் வெற்றிகளை தெடர்ச்சியாக இழந்தனர். இலங்கையில் மிகவும் பிரபல்யம் பெற்றதும் அதிகமான ரசிகர்களது ஆதரவைப் பெற்றதுமான விளையாட்டாக கிரிகட் விளையாட்டு இருந்து வருகின்றது. இலங்கை சர்வதேச அரங்கில் பெற்றுள்ள புகழ் காரணமாக இந்நாட்டு மக்களாலும் இந்த அணி தொடர்பாக விஷேடமான பிரியம் காட்டப்படுகின்றது. அதனால் மக்களிடையில் கிரிகட் மீதான ஆதரவு தொடராக இருந்து வருகின்றது. இத்தகைய ஆதரவும் அபிமானமும் காரணமாகவே தான் கடந்த காலப்பகுதியில் இலங்கை கிரிகட் தொடர்பாக பலரும் அவதானம் செலுத்தியதோடு பரவலாக பேசவும் ஆரம்பித்தனர். அதனால் இலங்கை கிரிகட் பற்றி கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. அவ்வாறே விளையாட்டு வீரர்களின் திறமை பற்றியும் நாம் அறிந்து வைத்திருப்பது முக்கியத்துவம் வாயந்ததாக கருதப்படுகின்றது.
விளையாட்டு அணியொன்று சர்வதேச போட்டிகளில் பங்குபற்றும் போது அந்த அணி இலங்கையின் பெயரை பிரதிநிதித்துவம் செய்வதாக அமைகின்றது. அதன் மூலம் அவர்கள் இலங்கை மக்களை பிரதிநிதித்துவம் செய்கின்றனர் என்றே கருத வேண்டும். அதனால் இலங்கைக்கு பல வழிகளிலும் பிரபல்யத்தை கொண்டு வருகின்ற கிரிகட்ட விளையாட்டை தரமான நிலையில் பேணிப் பாதுகாப்பது அவசியமாகின்றது. அதன் காரணமாகவே இலங்கை கிரிகட்டின் இன்றைய நிலை பற்றிய தகவல்கள் மக்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைகின்றன. இலங்கை கிரிகட் அணிக்கான செலவுகள் இலங்கை வாழ் மக்ளது பணத்தில் இருந்தே செய்யப்படுகின்றது. அதனால் இலங்கையின் கிரிகட்டிற்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை தொடர்பாக கவனம் செலுத்தி தகவல்களை அறிந்து கொள்வது மக்களின் கடமையாகின்றது.
இலங்கை அணி போட்டிகளில் தொடர்ச்சியாக தோள்விகளை சந்தித்ததால் விளையாட்டு வீரர்கள் திறமைகளை வெளிப்படுத்த தவறியுள்ளனர். அதில் செல்வாக்கு செலுத்தும் காரணிகள், போட்டிகளுக்கு விளையாட்டு வீரர்களை தெரிவு செய்யும் போது திறமை, போதுமான பயிற்சி உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக கவனம் செலுத்தப்படுகின்றன. போட்டிகளில் வெற்றிகளை ஈட்டுவதற்கு திறமை மிக்க வீரர்களை உள்வாங்குவது, பயிற்றுவிப்பாளர்கள் அர்ப்பணிப்புடன் பயிற்சி வழங்குவது போன் விடயங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. கடந்த காலப்பகுதியில் அணிக்குள் வீரர்களின் செயற்பாடு, பங்களிப்பு சரியான முறையில் இருந்துள்ளதா என்பது தொடர்பாக கேள்விகள் எழுகின்றன.
தகவல் அறிவதற்கான உரிமைச் சட்டத்தின் மூலம் தகவல்களை வழங்க வேண்டும் என்று வரையறுக்கப்பட்டுள்ள பொதுக் கூட்டுத்தாபனங்கள் மற்றும் திணைக்களங்கள் வரிசையில் இந்த கிரிகட் நிறுவனமும் ஒன்றாக அமைவதால் அந்த சட்டத்தை பயன்படுத்தி இலங்கை கிரிகட் அணி, பயிற்சி நடவடிக்கைகள், போட்டிகளுக்கு வீரர்களை தெரிவு செய்யும் நடைமுறை, அது தொடர்பாக கடைபிடிக்கப்படுகின்ற ஒழுங்கு விதிகள் உட்பட பல விடயங்கள் பற்றிய தகவல்கள் கோரப்பட்டன. அந்த தகவல் கோரிக்கைக்கு இணங்க தகவல்கள் தரப்பட்டுள்ளன.
இந்த தகவல்கள் ஊடாக இலங்கை தெசிய கிரிகட் அணிக்கு வீரர்களையும் பயிற்றுவிப்பாளர்களையும் தெரிவு செய்யும் முறை தொடர்பாக ஓரளவிற்கு மக்களால் தெளிவைப் பெற்றுக் கொள்ள முடிகின்றது. அதன் மூலம் தெரிவு மற்றும் பயிற்சி வழங்குபவர்கள் தொடர்பாக பின்பற்ற வேண்டிய ஒழுங்கு விதிகள் சரியான முறையில் பின்பற்றப்படாத சந்தர்ப்பங்கள் தொடர்பாக இலங்கை கிரிகட்டிடம் கேள்வி எழுப்பவும் முடிகின்றது.
அந்த தகவல்களின்படி இலங்கை தேசிய கிரிகட் அணிக்கு பயிற்சியாளர்கள் இணைத்துக் கொள்ளும் போது பின்வரும் நடைமுறைகள் தொடர்பாக கவனம் செலுத்தப்படுகின்றது.
• தற்போது தேசிய மட்ட பயிற்சி வழங்குதல் தரம் 03 ஆம் மட்டத்தில் இருக்க வேண்டும்.
• சர்வதேச மட்டத்தில் விளையாடிய மற்றும் பயிற்சி வழங்கிய அனுபவம், முகாமைத்துவம் தொடர்பான அனுபவமும் அவசியமாகின்றது.
• பிரதான ஸ்தானத்தில் உள்ள முன்னணி வீரர்களுடன் செயற்பட்ட அனுபவம் மற்றும் பயிற்சியுடன் சிறந்த தொழில்நுட்ப அடிப்படையிலான பயிற்றுவிப்பாளராகவும் இருக்க வேண்டும்.
• எந்த சந்தர்ப்பத்திலும் எந்த நேரத்திலும் எத்தகைய தரத்திலும் உள்ள வீரர்களுக்கு பயிற்சி வழங்கக்கூடிய தரத்தில் இருக்க வேண்டும்.
• திட்டமிடல்இ ஏற்பாடு செய்தல் இணைப்பை ஏற்படுத்துதல் ஆகிய விடயங்களில் ஆற்றல் வேண்டும்.
• ஒரு அணியாக சுயாதீனமாக செயற்படல்.
• உயர் தராதரத்திலான தனி நபர், எழுத்து, மற்றும் பேச்சு முறையிலான தொடர்பாடல் திறமை
• பொதுவான கணனி பற்றிய அறிவும் இந்த விடயங்களிலான உயர் மட்ட அறிவும் அவசியம்
• பொதுவாக இலங்கையின் அணிக்காக தெரி வு செய்யப்படுகின்ற பயிற்றுவிப்பாளர்கள் மேற் சொன்ன தகைமைகளை பெற்றிருக்க வேண்டும்.
இந்த அடிப்படையில் முறையாக பயிற்சியாளர்கள் தெரிவு செய்யப்பட்டால் அணிக்கு உயர்ந்த மட்டத்தில் சேவையாற்றக் கூடியவர்களை உள்வாங்க முடிகின்றது.
இலங்கை கிரிகட் அணிக்கு வீரர்களை தெரிவு செய்யும் போது கடைபிடிக்கப்படுகின்ற விதிமுறைகள், ஒழுங்குகள் பற்றிய பட்டியல் ஒன்றும் வழங்கப்பட்டிருக்கின்றது. அந்த தகவல்களின் அடிப்படையில் பார்க்கின்ற போது இலங்கை கிரிகட் நிறுவனம் வீரர்களை தெரிவு செய்யும் போது இரண்டு விதமான அணுகு முறைகளை கடைபிடிக்கின்றது.
• தேசிய தெரிவுக் குழு மூலம் ஒவ்வொரு வயதுக் குழுவுக்குமான தேசிய பயிலுனர் தெரிவுக்குழு மூலமான தெரிவு.
இந்த தெரிவுக் குழுவில் இடம் பெறுவதற்கான தகைமைகள் பற்றி வெவ்வேறாக தகவல்கள் வழங்கப்பட்டுள்ளன.
• அடுத்ததாக தேசிய அணியில் இடம்பெற அங்கீகரிக்கப்பட்ட கிரிகட் விளையாட்டில் 10 வருட அனுபவம், பயிற்சி குழுவில் 04 வருட அனுவம். அத்துடன் தேசிய தெரிவுக் குழுவில் இடம்பெற 19 வயதிற்கு கீழான அல்லது அதற்கு மேற்பட்ட பங்களிப்பு அவசியமாகின்றது.
• அத்துடன் அங்கீகரிக்கப்பட்ட ஒரு திறமை மிக்க விளையாட்டு வீரராக 05 வருட அனுபவத்தை பெற்றிருக்க வேண்டும்.
இலங்கை கிரிகட்ட நிறுவனம் பிரதம நிறைவேற்று அதிகாhpயின் நிர்வாகத்தின் கீழ் இயங்குகின்றது. அத்துடன் கிரிகட் நிறுவனம் விளையாட்டு அமைச்சின் கீழ் இருக்கின்றது. தெரிவுக் குழுவால் மேற் கொள்ளப்படுகின்ற தெரிவுகளை பிரதம நிறைவேற்று அதிகாரி விளையாட்டுத் துறை அமைச்சருக்கு சமர்ப்பித்து அவரது சிபாரிசை பெற்றுக்கொள்ள வேண்டும். தெரிவுக்குழு அங்கத்தவர்கள் ஒரு போதும் பயிற்சி நடவடிக்கைகளில் ஈடுபடுவதில்லை. தெரிவுக் குழு அங்கத்தவர்கள் கடைமை புரியும் காலப்பகுதியில் எந்தவொரு அச்சு, இலத்திரனியல் ஊடகங்களிலும் பதவிகளை வகிக்க முடியாது. தெரிவுக் குழுவின் அங்கத்தவர்கள் இரண்டு வருட காலத்திற்கு பதவியில் அமர்த்தப்படுகின்றனர். ஆனாலும் நியாயமான காரணங்களின் அடிப்படையில் எந்த நேரத்திலும் சேவையில் இருந்து நீக்கும் அதிகாரம் விளையாட்டுத் துறை அமைச்சருக்கு உண்டு.
வீரர்களை தெரிவு செய்வதில் நேர்மை, வெளிப்படைத் தன்மை தொடர்பாக கவனம் செலுத்துதல் விஷேடமாக கவனத்தில் எடுக்கப்படும். இலங்கையில் மூன்று துறைகளிலும் திறமை உள்ள தரமான வீரர்களை தெரிவு செய்தல் தெரிவு நடைமுறையின் பிரதான அம்சங்களாகும். தெரிவுக் குழ அங்கத்தவர்கள் பயிற்சிகளையும் கிரிகட் போட்டிகளையும் பார்வையிடுவது தொடர்பாக ஒரு நேர சூசிக்கமைவாக கடமையாற்ற வேண்டும்.
விளையாட்டு வீரர்களை தெரிவு செய்யூம் போது கடந்த 12 மாதங்களில் விளையாட்டு வீரர்கள் சர்வதேச, மாகாண மற்றும் முதல் தர போட்டிகளில் பங்குபற்றி வெளிப்படுத்தியுள்ள திறமைகள் கவனத்தில் எடுக்கப்படும். வீரர்களின் முக்கியத்துவத்தின் அடிப்படையில் வகைப்படுத்தப் படுவார்கள். தலைவர் உபதலைவர் ஆகிய பதவிகளுக்கு மிகவும் பொருத்தமானவர்களின் பெயார்ள் தேர்ந்தெடுக்கப்படுவதோடு அணியுடன் கூட்டாக செயற்படும் திறமை, மனோபக்குவம் போன்ற காரணிகளும் கவனத்தில் எடுக்கப்படும்.
டெஸ்ட், ஒருநாள் போட்டிகள் மற்றும் இருபதுக்கு இருபது போட்டிகள் என்ற அடிப்படையில் திறமையின் அடிப்படையில் ஒரு குழுவூக்கு 15 வீரர்களை உள்ளடக்கியதாக தெரிவு இடம்பெறும். அதிலும் வீரர்களின் உயர் தராதரத்தின் அடிப்படையில் அணி வகைப்படுத்தப்படும். தெரிவுக் குழுவே தலைவர் மற்றும் உபதலைவர் பதவிகளுக்கு பொருத்த மானவர்களின் பெயர்களை தெரிவு செய்யும். விளையாட்டு வீரர்களின் பெருமதியை அளவீடு செய்வது தொடர்பாக சர்வதேச கிரிகட் தெரிவுக்குழுவின் வழிகாட்டல்கள் பின்பற்றப்படும்.
ஏதாவதொரு விளையாட்டு வீரர் தெரிவு செய்யப்படுவது மற்றும் தெரிவில் இடம்பெறாமைக்கும் சில காரணிகள் செல்வாக்குச் செலுத்துவதாக அமைகின்றது. சட்ட ரீதியான காரணம் அல்லது அறிவித்தலின்றி இலங்கை கிரிகட்டின் முதல் தர போட்டிகளில் பங்கெடுக்காமல் விடுதல், சுகையீனம், அல்லது வேறு காயப்படுதல், ஒழுக்க மீறல்களில் ஈடுபடுதல் போன் காரணங்களால் தெரிவில் இடம்பெறாமல் போலாம்.
அணியின் தலைவர் தெரிவு க் குழுவுடன் தொடர்பை முன்னெடுப்பதோடு அணிக்கு வீரர்களின் முழுமையான பங்களிப்பை பெற்றுக்கொள்வது தொடர்பாகவும் கடமையாற்றுவார். தெரிவுக் குழு ஒவ்வொரு விளையாட்டு வீரரையும் ஒரு வருடத்தில் இரண்டு முறை சந்தித்து அவர்களது நடவடிக்கைகள் தொடர்பாக தகவல் தெரிவிக்க வேண்டும். இலங்கை கிரிகட் அணிக்கு விளையாட்டு வீரர்களை தெரிவு செய்யும் போது இவ்வாறான நீண்ட வழிகாட்டல்கள் நிபந்தனைகள் பின்பற்றப்படுகின்றன. இத்தகைய விடயங்கள் தொடர்பாக அறிவை பெற்றுக்கொள்ளுதல் தேசிய அணியில் இடம்பெறுவது வரையில் பின்பற்ற வேண்டிய விடயங்கள் உள்ளன. இவ்வாறான சட்டத்திட்டங்கள் இருந்தும் கூட வீரர்கள் சரியான திறமைகளை வெளிப்படுத்தாமை தொடர்பாக பலவிதமான சந்தேகங்களும் கேள்விகளம் எழுகின்றன.
வீரர்களை தெரிவு செய்யும் போது உரிய நிபந்தனைகள் சரியாக பின்பற்றப் படுவதாக இருந்தால் தொடர்ச்சியாக வீரர்கள் பின்னடைவை சந்திப்பதிலும் கேள்விகள் எழுகின்றன. கிரிகட் நிறுவனத்தில் உரிய நிபந்தனைகளின் பிரதான பண்பு திறமையான வீரர்களை அணியில் தொடர்ச்சியாக வைத்திருப்பதற்கு முயற்சி எடுப்பதாகும். அதனால் இவ்வாறான நிபந்தனைகளை சரியான முறையில் கடைபிடிப்பது அவசியமாகின்றது. இலங்கை தேசிய அணிக்கு பயிற்றுவிப்பாளர்களை தெரிவு செய்யும் போது கடைபிடிக்கப்படுகின்ற ஒழுங்கு விதிகள் பற்றிய அறிவை பெற்றுக் கொள்வதற்காக தகவல் அறிவதற்கான உரிமைச்ச ட்டம் உதவியாக அமைந்தது. குறிப்பாக கிரிகட்ட நிறுவனம் தொடர்பான பூரண அறிவை பெற்றவர்களாக விளையாட்டு ரசிகர்கள் இருக்க வேண்டும் என்பது இதன் பின்னணி நோக்கமாகும். அப்போதுதான் இத்தகைய ஒழுங்கு விதிகளுக்கு முரணான அடிப்படையில் இலங்கை கிhpகட்ட நிறுவனம் அல்லது தெரிவுக் குழு தீர்மானங்கள் எடுக்கப்படுகின்ற போது ரசிகர்ககளால் அதற்கு எதிராக குரல் எழுப்ப முடிகின்றது. இவ்வாறான செயற்பாடுகளுக்கு தகவல் அறிவதற்கான சட்டம் மிகவும் உதவியாக அமைகின்றது.

News

10 வருடங்களில் பொலிஸ் சேவையில் இருந்து 2847 பேர் இடைநிறுத்தம்!

ந.லோகதயாளன் கடந்த 10 ஆண்டுகளில்  பொலிஸ் திணைக்களத்தில் இருந்து 2847 பேர் பணியிலிருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. பொலிஸ் திணைக்களத்தின் தலைமையகத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட தகவல்…

By In
News

போதையில் மூழ்கும் சமூகம்;  அதிர்ச்சி தரும் புள்ளிவிபரங்கள்

2023ஆம் ஆண்டு மாத்திரம் 162,088 பேர் கைது! மொஹமட் ஆஷிக் போதைப்பொருள் விவகாரம் இலங்கையில் மட்டுமன்றி அனைத்து நாடுகளிலும் பாரிய நெருக்கடியாக உள்ளது. எமது நாட்டில், அதை…

By In
News

பூமியை நான்கு தடவைகள் சுற்றிவரும் அளவிற்கு இலங்கையை வானில் சுற்றியுள்ள மஹிந்த ராஜபக்ஷ

ராகுல் சமந்த ஹெட்டியாராச்சி விமானப்படைத் தலைமையகத்திலிருந்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவல்களின்படி, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 2005ஆம் ஆண்டு முதல் 2015ஆம்…

By In
News

ஜனாதிபதி அலுவலகத்தின் சொகுசு வாகனங்கள் ஏலத்திற்கு முன்னர் பகிர்ந்தளிக்கப்பட்ட விதம்!

● கோட்டாபயவின் பிரத்தியேக பணியாளர்களுக்கு 11 வாகனங்கள் ● ரணிலின் பிரத்தியேக பணிக்குழாமிற்கு 68 வாகனங்கள் ஜனக சுரங்க வாகனங்களை பொதுவாக காட்சியறைகளில் வைத்தே பொதுமக்களுக்கு காட்சிப்படுத்துவர்….

By In

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *