முன்னைய ஆட்சி காலத்தில் அதன் இறுதி கட்டத்தில் மிகவும் அவசரமாக திறந்து வைக்கப்பட்டதே யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் ஆகும். அத்துடன் யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தில் இருந்து விமான சேவைகளும் ஆரம்பிக்கப்பட்டன. யாழ்ப்பாண விமான நிலையம் ஒரு சர்வதேச விமான நிலையமாக அபிவிருத்தி செய்யப்பட்டது என்ற தகவல் ஊடகங்கள் வாயிலாக வெளிப்படுத்தப்படுவதும் அந்த விமான நிலையம் திறந்து வைக்கப்பட்ட பின்னராகும். எந்தவிதமான திட்டமாக இருந்தாலும் அவசரமாகவும் சரியான தராதரத்துடனும் நிறைவு செய்யப்படுவது வரவேற்கத் தக்க விடயமாக இருந்த போதும் இந்த திட்டம் தொடர்பாக மக்கள் மிகவும் குறைந்த அளவிலே தகவல்களை அறிந்து வைத்துள்ளனர். நாட்டின் மிகவும் முக்கியமான சர்வதேச விமான நிலையங்களில் யாழ்ப்பாண விமான நிலையமும் ஒன்றாக தனியான இடத்தை பிடிப்பதால் அதுபற்றி மக்களை அறிவூட்டுவது மிகவும் அத்தியாவசியமான தேவையாகும்.
இந்த விமான நிலைய நிர்மாணத்திற்காக அரசாங்கத்தால் பொறுப்பேற்றிருந்த செலவினம் மற்றும் நிர்மாணத்திற்கான கால எல்லை பற்றிய விபரங்களை தகவல் அறிவதற்கான சட்டத்தை பயன்படுத்தி தகவல்களை வழங்குமாறு சிவில் விமான சேவைகள் அதிகார சபையிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. அந்த தகவல் கோரிக்கைக்கு ஏற்ப இந்த விமான நிலைய நிர்மாணம் தொடர்பாக அரசாங்கம் இதுவரையில் மேற்கொண்டுள்ள செலவுகள் பற்றி வழங்கப்பட்ட தகவல்களுக்கு அமைய 1950 மில்லியன் ரூபாய்கள் செலவிட மதிப்பிடப் பட்டதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. MF/PE/CM/2019/84 மற்றும் 2019.04.01 என்ற திகதி இடப்பட்ட அமைச்சரவைப் பத்திரம் ஊடாக இந்த தொகையை செலவிட அமைச்சரவை அங்கீகாரம் வழங்கி இருக்கின்றது என்ற தகவல்கள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த விமான நிலைய நிர்மாணத்திற்கான காலம் எவ்வளவு என்று கேட்கப்பட்ட தகவல் கோரலுக்கமைய சிவில் விமான சேவைகள் அதிகார சபைக்கும் நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி அதிகார சபைக்கும் இடையில் செய்து கொள்ளப்பட்டுள்ள உடன்படிக்கைக்கு அமைய அதில் இடம்பெற்றுள்ள கால நிர்ணயம் பற்றிய தகவல்கள் வழங்கப் பட்டிருக்கின்றது. அந்த உடன்படிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவல்களின்படி விமாண நிலைய புணரமைப்பு மற்றும் சர்வதேச விமான நிலையமாக தரம் உயர்த்துவதற்கான நிர்மாணப் பணிகளுக்கான காலம் 03 மாதங்களாகும். அதன்படி 2019 ஜூலை மாதம் 05 ஆம் திகதியில் இருந்து 03 மாத காலப்பகுதிக்குள் திட்டம் பூர்த்தி செய்யப்பட வேண்டும் என்று தெரிவிக்கப் பட்டிருக்கின்றது.
இவ்வாறு பார்க்கும் போது சர்வதேச விமான நிலையமாக குறிப்பிடப்பட்டுள்ள யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் உண்மையாகவே சர்வதேச விமான நிலையங்கள் அமைய வேண்டிய தராதரத்திற்கு அமைவாக நிர்மாணிக்கப் பட்டிருக்கின்றதா என்பது தொடர்பாக கேள்வி எழுகின்றது. இந்த விமான நிலையம் திறந்து வைக்கப்படுவதற்கு முன்னர் அது ஒரு சர்வதேச விமான நிலையம் இருக்க வேண்டிய தராதரத்தில் இருந்ததா என்ற கேள்வியும் எழுகின்றதால் குறித்த விமான நிலையம் திறந்து வைப்பதற்கு முன்னர் அதன் சர்வதேச தராதரம் பற்றிய பரிசோதனை குறிப்பிட்ட பொறியியலாளர்களால் மேற்கொள்ளப் பட்டதா என்ற தகவல்களை பெற்றுக் கொள்வதற்காகவும் தகவல் அறிவதற்கான விண்ணப்பப் படிவம் சமர்ப்பிக்கப்பட்டது. அந்த கோரிக்கைக்கு வழங்கப்பட்டிருந்த பதிலில் சிவில் விமான போக்குவரத்து அதிகார சபை தெரிவித்திருந்த விளக்கமானது இந்த விமான நிலையம் விமான போக்குவரத்து அதிகார சபையால் சர்வதேச தராதரத்திற்கமைய இருக்கின்றது என்று வழங்கப்பட்டுள்ள சான்றிதழைத் தவிர வேறு எந்தவிதமான தரச் சான்றிதழ்களும் இல்லை என்று கூறியிருக்கின்றது.
அதன்படி யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் சர்வதேச விமான நிலையங்கள் இருக்க வேண்டிய சரியான தராதரத்திற்கு அமைவாக இருக்கின்றது என்ற சான்றிதழை சிவில் விமான சேவைகள் அதிகார சபை வழங்கி இருக்கின்றது என்பது உறுதியாகின்றது. ஆனாலும் அதுபற்றி மக்கள் மத்தியில் இருந்து வரும் சந்தேகங்களை போக்க வேண்டிய தேவை இருந்து வருகின்றது. இந்த தகவல்களை உத்தியோகபூர்வமாக பெற்றுக் கொள்வதற்கு தகவல் அறிவதற்கான சட்டம் கை கொடுத்தமையை பாராட்ட வேண்டும்.
10 வருடங்களில் பொலிஸ் சேவையில் இருந்து 2847 பேர் இடைநிறுத்தம்!
ந.லோகதயாளன் கடந்த 10 ஆண்டுகளில் பொலிஸ் திணைக்களத்தில் இருந்து 2847 பேர் பணியிலிருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. பொலிஸ் திணைக்களத்தின் தலைமையகத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட தகவல்…
போதையில் மூழ்கும் சமூகம்; அதிர்ச்சி தரும் புள்ளிவிபரங்கள்
2023ஆம் ஆண்டு மாத்திரம் 162,088 பேர் கைது! மொஹமட் ஆஷிக் போதைப்பொருள் விவகாரம் இலங்கையில் மட்டுமன்றி அனைத்து நாடுகளிலும் பாரிய நெருக்கடியாக உள்ளது. எமது நாட்டில், அதை…
பூமியை நான்கு தடவைகள் சுற்றிவரும் அளவிற்கு இலங்கையை வானில் சுற்றியுள்ள மஹிந்த ராஜபக்ஷ
ராகுல் சமந்த ஹெட்டியாராச்சி விமானப்படைத் தலைமையகத்திலிருந்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவல்களின்படி, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 2005ஆம் ஆண்டு முதல் 2015ஆம்…
ஜனாதிபதி அலுவலகத்தின் சொகுசு வாகனங்கள் ஏலத்திற்கு முன்னர் பகிர்ந்தளிக்கப்பட்ட விதம்!
● கோட்டாபயவின் பிரத்தியேக பணியாளர்களுக்கு 11 வாகனங்கள் ● ரணிலின் பிரத்தியேக பணிக்குழாமிற்கு 68 வாகனங்கள் ஜனக சுரங்க வாகனங்களை பொதுவாக காட்சியறைகளில் வைத்தே பொதுமக்களுக்கு காட்சிப்படுத்துவர்….
Recent Comments