News

வாடகை கட்டிடங்களில் இயங்கும் பொலிஸ் நிலையங்கள்

By In

N.M. நஸ்ரான்

2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில், ஏழாவது நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சியைப் பொறுப்பேற்ற பின்னர், புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் ‘சுபீட்சத்தின் நோக்கினை’ சாத்தியமாக்குவதற்கான முயற்சியாக நாடளாவிய ரீதியில் 105 புதிய பொலிஸ் நிலையங்கள் நிறுவப்பட்டன. 

இந்த புதிய பொலிஸ்  நிலையங்கள் பிரமாண்டமான முறையில் அமைக்கப்பட்டாலும், கட்டிடங்களின் தற்போதைய நிலையும், அவை செயற்படும் விதமும் கவனத்திற்குரியதாக உள்ளது. 

நாடளாவிய ரீதியில் 23 வெவ்வேறு மாவட்டங்களில் நிறுவப்பட்டுள்ள 105 புதிய பொலிஸ் நிலையங்கள் கீழ்வருமாறு, களுத்துறை – 04, கம்பஹா – 05, கொழும்பு – 04, அனுராதபுரம் – 17, பொலன்னறுவை – 04, அம்பாறை – 06, மட்டக்களப்பு – 02, திருகோணமலை – 01, கிளிநொச்சி – 01, முல்லைத்தீவு – 03, வவுனியா – 02, மன்னார் – 01, இரத்தினபுரி – 06, கேகாலை – 04, புத்தளம் – 09, குருநாகல் – 12, பதுளை – 09, கண்டி – 04, நுவரெலியா – 01, மாத்தளை – 03, காலி. 02, அம்பாந்தோட்டை – 03 மற்றும் மாத்தறை – 02. இது பின்வரும் அட்டவணையில் மேலும் விளக்கப்பட்டுள்ளது.

இலபுதிய பொலிஸ் நிலையங்கள்மாவட்டம்
01.இட்டபான, பின்வத்த, ஹிரண, அலுபோமுல்லகளுத்துறை
02.பெமுல்ல, அத்தனகல்ல, தனோவிட்ட, திவுல்தெனிய (நல்லா), எடரமுல்லகம்பஹா
03.கடுவெல, மாலபே. கஸ்பாவ, மிஹிஜய செவனகொழும்பு
04.ஓயாமடுவ, கள்ளஞ்சிய, ஹுரிகஸ்வெவ, வஹல்கட D-4, அலையபத்துவ, கிரணேகம, திவுல்வெவ, பிஹிபியகொல்லாவ, கொக்காவெவ, கலதிவுல்வெவ, மரதன்கடவல, பிரியங்கரகம, சிவலகுளம, அடவீரகொல்லாவ, மடதுகம, கவரகொல்லவகம, கபுகொல்லாவ அனுராதபுரம்
05.தியபெதும, சிறிபுர, மனம்பிட்டிய, மீகஸ்வெவபொலன்னறுவை
06.பண்டாரதுவ, எரகம, சாய்ந்தமருது, கத்தரிவு, நிந்தவூர், நட்பிட்டிமுனை (பெரிய நீலாவணை)அம்பாறை
07.கொக்குவில், சந்திவெளி மட்டக்களப்பு
08.ஈச்சிலன்பற்றுதிருகோணமலை
09.மருதங்கேணிகிளிநொச்சி
10.அய்யன்குளம், கொக்கிளாய், நட்டாங்கண்டல்முல்லைத்தீவு
11.சிதம்பரபுரம், நெளுங்குளம்வவுனியா
12.உள்ளிக்குளம்மன்னார்
13.சமனல வெவ, அந்தன, அலபத, பொதுபிட்டிய, தெல்வல, சூரியகந்தஇரத்தினபுரி
14.இம்புல்கஸ்தெனிய, நூரியா, கலபிடமட, தெஹியோவிட்டகேகாலை  
15.மகும்புக்கடவல, மதுரங்குளிய, தொடுவாவ, உதசிரிகம, கிரிஉல்ல, மொரகொல்லாகம, நாகொல்லாகம, அஹதுவெவ, நன்னேரியா
புத்தளம்
16.கந்தனேகெதர, அரபொல, வெலிபன்னகஹமுல, போகமுவ, தலமல்கம, மல்சிறிபுர, மதுரகொட, தெல்விட்ட, வெலகெதர, இகுருவத்த, போயவலன, தொரட்டியாவ
குருநாகல்
17.திவுலுபலஸ்ஸ, ஹிகுருகடுவ, கஹடறுப்ப, அரவ, கலௌட, நமுனுகுல, லியங்கஹவெல, கப்பெட்டிபொல, பல்லகொட்டுவ
பதுளை
18.பொக்காவல, அலதெனிய, பொட்டபிட்டிய, பேரட்டசிகண்டி 
19.பொல்பிட்டியநுவரெலியா 
20.மகுலுகஸ்வெவ, கந்தேநுவர, ஹந்துங்கமுவமாத்தளை
21.கோனாபினுவல, ஓபாதகாலி
22.ஹம்பாந்தோட்டை துறைமுகம், மத்தள, ஒகேவெலஅம்பாந்தோட்டை
23.பங்கம, துகாரி (மிடிகம) மாத்தறை

இந்த 105 புதிய பொலிஸ்  நிலையங்களில் 43 பொலிஸ்  நிலையங்கள் அரசுக்கு சொந்தமான கட்டிடங்களில் நிறுவப்பட்டுள்ளன. மீதமுள்ள அனைத்து புதிய பொலிஸ்  நிலையங்களும் மாதாந்த வாடகை அடிப்படையில் பெறப்பட்ட தனியார் கட்டிடங்களில் அமைக்கப்பட்டுள்ளன. இந்த தனியார் கட்டிடங்களில் நிறுவப்பட்ட பொலிஸ்  நிலையங்களுக்கு மாதந்தோறும் ரூபா. 993,500.00 வாடகைக்காக செலவிடப்படுகிறது.

ஆனால் இந்த பொலிஸ் நிலையங்களை நிறுவுவதில் காண்பிக்கப்பட்ட அவசரம் அவை இயங்கும் கட்டிடங்களுக்கு வாடகை செலுத்துவதில் காண்பிக்கப்படவில்லை. இக்கட்டடங்களில் இந்த புதிய பொலிஸ்  நிலையங்கள் அமைக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் கடந்தும், இதுவரை வாடகை செலுத்தப்படவில்லை. இது தொடர்பில் பொலிஸ் சொத்து முகாமைத்துவப் பிரிவினரிடம் கேட்டபோது, அனைத்து நிலுவைகளையும் செலுத்துவதற்கு திறைசேரி செயலாளரின் விசேட அனுமதியைப் பெற்று, திணைக்களக் கொள்வனவுக் குழுவின் பரிந்துரையின் பேரில் அமைச்சின் செயலாளரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. இதனால் இந்தக் கட்டிடங்கள் எந்தவிதமான கொள்முதல் செயன்முறையோ அல்லது அமைச்சக செயலாளரின் முன் அனுமதியோ இன்றி கையகப்படுத்தப்பட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்த கட்டிடங்கள் இரண்டு வருட குத்தகை அடிப்படையில் கையகப்படுத்தப்பட்டுள்ளதுடன், இது கிட்டத்தட்ட முடியும் தறுவாயில் உள்ளது. மேலும் இந்த பொலிஸ்  நிலையங்கள் இரண்டு ஆண்டுகளாக இயங்கி வந்தாலும் இன்னமும் சில பொலிஸ்  நிலையங்களுக்கு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவில்லை. இது தொடர்பில் கேட்டபோது, அமைச்சின் செயலாளரின் அங்கீகாரம் பெற்ற புதிய பொலிஸ் நிலையங்களுக்கான உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டுள்ளதாகவும், அனுமதியின் பின்னர் ஏனைய பொலிஸ் நிலையங்களுக்கான உடன்படிக்கைகளில் கைச்சாத்திட நடவடிக்கை எடுப்பதாகவும் பொலிஸ் சொத்து முகாமைத்துவ பிரிவு தெரிவிக்கின்றது. இது அமைச்சின் செயலாளரின் முன் அனுமதியின்றி அவர்கள் புதிய பொலிஸ் நிலையங்களை நிறுவி நடாத்துவதையே காட்டுகிறது.

வாடகை அடிப்படையில் பெறப்பட்ட கட்டிடங்களுக்கான மொத்த நிலுவைத் தொகை ரூ.1,952,000.00 ஆகுமென்பதுடன், இது இன்னமும் செலுத்தப்படவில்லை. கடந்த சில ஆண்டுகளில், வரவு செலவுத் திட்டத்தில் அதிகளவில் பாதுகாப்புக்காக ஒதுக்கப்பட்டது. போர்க்காலத்தில் இது நியாயமானதாக இருந்தாலும், சமாதான காலத்தில் இவ்வளவு பணம் செலவு செய்வது சிந்திக்க வேண்டிய ஒன்றாகும். மேலும் புதிய பொலிஸ்  நிலையங்களுக்கு இவ்வளவு பெரிய தொகை ஒதுக்கப்பட்ட நேரத்தில் பொலிஸ்  துறை மாதாந்த வாடகையை செலுத்தாமல் இருப்பது ஏன்? இவற்றை வைத்து நோக்கும்போது, முறையான நடைமுறை, அனுமதி, கண்காணிப்பு இல்லாமல் இந்தப் புதிய பொலிஸ்  நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

News

இந்திய இழுவை மடி படகுகளால் பாதிக்கப்படும் இலங்கை மீனவர்களின் வாழ்வாதாரம்

க.பிரசன்னா பல தசாப்தங்கள் நீடிக்கும் இலங்கை – இந்திய மீனவர்களின் பிரச்சினையானது, இலங்கை – இந்திய இராஜதந்திர உறவுகளில் அவ்வப்போது நெருக்கடிகளைத் தோற்றுவித்து வருகின்றது. மீனவர்களின் பிரச்சினையை…

By In
News

2022 கலவரம்: பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான இழப்பீடுகளுக்கு 50 மில்லியன் ரூபா மேலதிக நிதி விடுவிப்பு?

க.பிரசன்னா உலகளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியதும் இலங்கையில் ஆட்சி மாற்றத்துக்கு வழி வகுத்ததுமான காலி முகத்திடல் (அரகலய) போராட்டம் இடம்பெற்று இரண்டு வருடங்கள் கடந்துள்ள போதும், அதனைச் சுற்றிய…

By In
News

10 வருடங்களில் பொலிஸ் சேவையில் இருந்து 2847 பேர் இடைநிறுத்தம்!

ந.லோகதயாளன் கடந்த 10 ஆண்டுகளில்  பொலிஸ் திணைக்களத்தில் இருந்து 2847 பேர் பணியிலிருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. பொலிஸ் திணைக்களத்தின் தலைமையகத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட தகவல்…

By In
News

போதையில் மூழ்கும் சமூகம்;  அதிர்ச்சி தரும் புள்ளிவிபரங்கள்

2023ஆம் ஆண்டு மாத்திரம் 162,088 பேர் கைது! மொஹமட் ஆஷிக் போதைப்பொருள் விவகாரம் இலங்கையில் மட்டுமன்றி அனைத்து நாடுகளிலும் பாரிய நெருக்கடியாக உள்ளது. எமது நாட்டில், அதை…

By In

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *