News

மோட்டார் சைக்கில் சொந்தக்காரர்களின் சங்கம் RMV பிரதாணிக்கு சவால்

By In

உதயந்த முணசிங்க – ஹொரண (மவ்பிம)

 

2016 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க தகவல் அறிவதற்கான சட்டத்தின் அடிப்படையில் 2014 ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டு வரையில் இலங்கையில் பதிவு செய்யப்பட்ட ஜப்பான் மோட்டார் சைக்கில்களின் எண்ணிக்கை எவ்வளவு என்பது தொடர்பான தகவல்களை வழங்குமாறு அகில இலங்கை மோட்டார் சைக்கில் சொந்தக்காரர்களின் சங்கம் மோட்டடர் வாகன திணைக்களத்தை கோரி இருக்கின்றது.

கடந்த வருடமும் இந்த வருடமும்; 13000 ஜப்பான் மோட்டார்  சைக்கில்கள் பதிவு செய்யப்பட்டிருப்பதாக தமது சங்கத்திற்கு தகவல்கள் கிடைத்துள்ளன. அது தொடர்டபாக வழக்கு தாக்கல் செய்திருப்பதாகவும் மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் ஆணையாளர் மற்றும் அதிகாரிகள் உரிய பதவிகளுக்கு பொருத்தமற்றவர்கள் என்றும் சங்கத்தின் தலைவர் சிரந்த அமரசிங்க கூறுகின்றார்.

அது பற்றி அவர் மேலும் தெரிவிக்கையில் மோட்டடர் வாகன திணைக்கள ஆணையாளர் மற்றும் உதவி ஆணையாளர்கள் அந்த பதவிகளை வகித்தாலும் மோட்டார் வாகனம் தொடர்பான அறிவு இல்லாதவர்களாவர் என்றும் கூறினார்.

அவர்களிடம் மோட்டார் வாகம் தொடர்பான தொழில் தகைமை மற்றும் கல்வி தகைமைகள் இருக்குமாயின் தகவல் அறிவதற்கான உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் அதன் பிரதிகளை தமக்கு வழங்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுக்கப் பட்டிருக்கின்றது. அத்துடன் இலங்கை முழுவதிலும் கடமையாற்றும் வாகன அடிச்சட்ட (செசி) இலக்கத்தை பரீட்சிக்கும் அதிகாரிகளது கண் பார்வை தொடர்பான மருத்துவ சான்றிதழ் மற்றும் மோட்டடர் வாகன திணைக்கள ஆணையாளர் மற்றும் உதவி ஆணையாளர்களை நியமனம் செய்ய சிபாரிசு செய்த அசியல்வாதரிகள் யார் என்ற விபரங்களையும் நியமனக் கடிதங்களின் பிரதிகளையும் சமர்ப்பிக்க வேண்டும் என்று கேட்டுள்ளார்.

மோட்டார் வாகன திணைக்களத்தின் சில உயர் அதிகாரிகளால் மேற் கொள்ளப்படுகின்ற ஊழல்கள் தொடர்பாக சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கோட்கப்பட்டுள்ளது.

“இலங்கையில் பதிவு செய்யப்பட்ட ஜனப்பான் நாட்டு மோட்டார் சைக்கில்களின் தொகை தெரியாது”

மோட்டார் வாகன திணைக்களம் அகில இலங்கை மோட்டடர் சைக்கில் உரிமையாளர்கள  சங்கத்திற்கு அறிவிப்பு (2018.01.19)

இலங்கையில் பதிவு செய்யப்பட்ட ஜனப்பான் நாட்டு மோட்டார் சைக்கில்களின் தொகை தெரியாது எத்தனை என்ற விபரங்கள் மோட்டார் வாகன திணைக்களத்திற்கு தெரியாது. அது தொடர்பாக அகில இலங்கை மோட்டார் சைக்கில் சொந்தக்காரர்களது சங்கத்திற்கு அறிவித்திருப்பதாக அதன் தலைவர் சிரந்த அமரசிங்க கூறினார்.

2004 ஆம் ஆண்டில் இருந்து 2017 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதிக்குள் பதிவு செய்யப்பட்டுள்ள ஜப்பான் மோட்டடர் சைக்கில்களின் தொகை எவ்வறவு என்ற விபரங்களை இந்த சங்கம் தகவல் அறிவதற்கான சட்டத்தின் கீழ் மோட்டார் வாகன திணைக்களத்திற்கு சமர்ப்பித்த விண்ணப்பத்திற்கே இந்த பதில் வழங்கப்பட்டுள்ளது.

பதிவு செய்யப்பட்டுள்ள ஜப்பான் மோட்டடர் சைக்கில்களின் தொகை எவ்வறவு என்ற விபரங்கள் தெரியாது என்று மோட்டார் வாகன திணைக்களம் கூறுவது ஆச்சரியமான விடயமாக இருப்பதோடு இவ்வாறு செய்வது இந்த திணைக்களத்திற்குள் நீண்ட காலமாக நடைபெற்று வருகின்ற இத்தகைய மோட்டார் சைக்கில் பதிவில் ஊழல் நிலவி வருவதை கண்டுபிடிக்க என்பதை அறிந்தே இவ்வாறு தகவல் மறைக்கப்படுகின்றது என்று அவர் தெரிவிக்கின்றார். இது தொடர்பாக ஊழல் மற்றும் மோசடிகள் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவுக்கு முறைப்பாடு செய்ய இருப்பதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் கூறிதாவது : – அடிச்சட்ட இலக்கத்தை (செசி இலக்கம்) பரீலனை செய்வதற்கு மோட்டடர் வாகன திணைக்களத்தில் கடமையாற்றுகின்ற அதிகாரிகளுக்கு போதுமான பயிற்சி இல்லை என்பதோடு அவர்களால் பரிசீலிக்கப்படுகின்ற அறிக்கையை நீதிமன்றம் எந்த அடிப்படையில் ஏற்றுக் கொள்கின்றது என்பதை உயர் நீதிமன்றத்திடம் கோர  மோட்டடர் சைக்கில் உரிமையாளர்களது சங்கம் திட்டமிட்டிருக்கின்றது.

இலங்கையில் சகல ஜப்பான மோட்டடர் சைக்கில்களதும் தகவல்களை மோட்டடர் வாகன திணைக்களம் இரகசியமாக பேணி வருகின்றது அல்லது மறைத்து வைத்திருக்கின்றது என்பதால் உரிய மோட்டடர் சைக்கில்களுக்கான முழுமையான பெருமதியை திணைக்களம் மோட்டடர் சைக்கில் உரிமையாளர்களுக்கு செலுத்த வேண்டிய நிலை ஏற்படும் என்றும் அவர் கூறினார்.

News

போலியான தகவல் வழங்கிய அஸ்வெசும பயனாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?

க.பிரசன்னா கடந்த காலங்களில் அஸ்வெசும கொடுப்பனவு வழங்கும் திட்டத்தில் பல்வேறு குறைபாடுகள் காணப்பட்டதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக போலியான தகவல்களை வழங்கி தகுதியற்ற நபர்களும் அஸ்வெசும கொடுப்பனவை…

By In
News

 ரணில் விக்ரமசிங்கவின் ஓய்வூதியம்

– ஜனக சுரங்க இலங்கையின் எட்டாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக பதவி வகித்த ரணில் விக்ரமசிங்க, கடந்த காலங்களில் பிரதமர், பாராளுமன்ற உறுப்பினர் என பல்வேறு…

By In
News

18 வருடங்களாக நிர்மாணிக்கப்படும் மெரைன் டிரைவ் வீதி

க. பிரசன்னா கொழும்பு – காலி பிரதான வீதியில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கான சிறந்த வழி என அடையாளம் காணப்பட்ட கரையோர வீதியின் (மெரைன் டிரைவ்) ஆறு…

By In
News

நாடு பால் உற்பத்தியில் தன்னிறைவு காண்பது எப்போது?

மொஹமட் ஆஷிக் – தேவையில் 30.86 சதவீதம் மட்டுமே உள்ளூர் உற்பத்தி – 43.34 சதவீதம் இறக்குமதி செய்யப்படுகிறது -2023 இல் பாலுற்பத்தி96 இலட்சம்லீற்றர் குறைவு ஐக்கிய…

By In

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *