(இரோஷா வேலு)
ஒரு சமூகத்தின் வளர்ச்சி அச்சமூகத்தினர் பெற்றுக்கொள்ளும் கல்வியின் அடைவு மட்டத்திலேயே தங்கியுள்ளது. அந்தவகையில் 200 வருடங்களுக்குமதிகமான வரலாற்றை கொண்டுள்ள மலையக சமூகத்தின் வளர்ச்சியில் ஏற்பட்டுள்ள தடுமாற்றங்கள் அச்சமூகம் கல்வியில் பின்தங்கி நிற்பதை சுட்டிகாட்டுகின்றது. மலையக இளைஞர் முச்சக்கர வண்டி கலாச்சாரம், போதைப்பொருள் கலாச்சாரம் மற்றும் கொழும்பின் மீதுள்ள மோகம் போன்ற பல காரணங்களினால் சீரழிக்கப்பட்டு வருகிறார்fs;. குறிப்பாக மலைய தமிழ் சமூகம் தமது சமூக எழுச்சிக்காக சிந்திக்காது செயற்பட்டு வருகின்றமை மிகவும் வேதனையளிக்கின்றது. பாரிய போருக்கு முகங்கொடுத்திருக்கும் வடக்கு,கிழக்குடன் ஒப்பிடுகையிலும் கூட மலையகத்தின் கல்வி அடைவு மட்டம் பின் தங்கியே காணப்படுகின்றது.
இந்த பின்னடைவுக்கான காரணங்களில் ஒன்றாக மலையகத்தின் பாடசாலைகளில் காணப்படும் ஆசிரியர் பற்றாக்குறையும் சுட்டிக்காட்டப்படவேண்டியnjhன்று. அதிலும் குறிப்பாக மலையக தமிழ் பாடசாலைகளில் கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம் ஆகிய மூன்று பாடங்களுக்கான அடைவு மட்டம் மிகவும் குறைவாக காணப்படுவதாக தகவலறியும் சட்டமூலத்தினூடாக பெற்றுக்கொள்ளப்பட்ட தகவலின் மூலம் அறியக்கிடைக்கின்றது. இந்நிலைக்கு முக்கிய காரணம் இப்பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறை. தகவலறியும் உரிமை சட்டத்தின் கீழ் கல்வி அமைச்சினால் வழங்கப்பட்ட தகவலினடிப்படையில் கடந்த வருடத்தின் இறுதியில் 2 இலட்சத்து 41 ஆயிரத்து 18 அரச பாடசாலைகளுக்கான ஆசிரியர்கள் உள்வாங்கப்பட்டுள்ளார்கள்.
இவ்வளவு ஆசிரியர்கள் உள்வாங்கப்பட்டுள்ளவிடத்தும் எவ்வாறு மலையகத்தில் மாத்திரம் ஆசிரியர்கள் பற்றாக்குறை அதிகளவாக ஏற்பட்டுள்ளது என்பதை சிந்திக்கவேண்டும். அண்மையில் அலரி மாளிகையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் கல்வி இராஜாங்க அமைச்சர் இராதா கிருஷ்ணனின் தலைமையில் 1150 பேருக்கு தொழில் கல்வி பாடங்களுக்கான நியமனங்கள் வழங்கப்பட்டது. அதில் 280 பேர் தமிழ் மொழியிலும் 870 பேர் சிங்கs மொழி மூலமும் தெரிவு செய்யப்பட்டனர். எமது தமிழ் பேசும் மக்கள் வாழும் பிரதேசங்களுக்கு இந்த 280 பேர் ஆசிரியர்களில் எத்தனை பேர் சென்று கடமையாற்ற போகிறார்கள். இவர்களில் ஆளணியை சேர்த்துக் கொள்வதில் காட்டப்பட்டுள்ள பாரபட்சமும், அதன் பின்னர் ஆசிரியர் பின்தங்கிய பிரதேசங்களில் கடமையாற்ற விருப்பம் தெரிவிக்காமையும் என இறுதியில் தமிழ் பேசுவோருக்கான ஆசிரியர் பற்றாக்குறை தொடர்ந்த வண்ணமே காணப்படும் என்பதற்கு இந்த நியமனங்கள் சிறந்த உதாரணமாகும்.
தோட்ட முகாமையாளர்கள் அரை மனதுடன் உருவாக்கிய சில பாடசாலைகளும் இன்றுவரையில் அதே வளங்களுடனேயே இயங்குகின்றது என்பது கசப்பான உண்மை. அதேபோல் ஆசிரியர்களை உள்வாங்குகையில் காணப்படும் அரசியல் தலையீடுகள் என்பதும் தற்போது அதிகரித்துள்ளது. 2005 ஆம் ஆண்டுக்கு பிறகு மலையகத்தை பொறுத்தவரையில் அதே பிரதேசத்தைச் சேர்ந்த ஆசிரியர்களின் நியமனங்கள் அதிகரித்துள்ளது. இவ்வாறு நியமனம் பெறும் ஆசிரியர்களும் அதிகளftpyhd கலைத்துறையிலிருந்து வருகை தந்தவர்களாகவே காணப்படுகின்றdh;.
இவ்வாறானவர்கள் நியனம் பெறுகையில் ஒரு வருடNkh அல்லது மூன்று வருடங்களோ ஆசிரியர் பயிற்சியை பெற்ற பின்னரே பாடசாலைகளுக்குள் உள்வாங்கப்படுகின்றனர். இதன் பின்னர் குறித்த ஆசிரியர்கள் தமது கல்வித் தகைமையை வளர்த்து கொண்டால் அது அவர்களுக்கும் அவர்கள் கற்பிக்கும் பாடசாலைகளுக்கும் பயனளிக்கும். ஆனால் இங்கு ஏற்பட்டுள்ள பிரச்சினையாதெனில் அவ்வாறு ஆசிரியர்கள் பயிற்சி பெற்றாலும் தமது சுயநலனுக்காக ஆசிரியர் சேவையை, சேவையாக நினைக்காமல் வெறும் தொழிலாகவே பார்க்கின்றனர் என்பதே. இதனாலேயே அவர்கள் குறித்த பாடங்களுக்கான ஆசிரியர் பற்றாக்குறை காணப்பட்டும் தமக்கு வசதியான பாடசாலைகளை விட்டு இன்னுமொரு பிரதேசத்தில் சென்று கற்பிக்க முன்வருவதில்லை. இதற்கு வலய கல்வி திணைக்களங்களின் பணிப்பாளர்களும் துணைபோவதாக பாதிக்கப்பட்ட தரப்பு மக்கள் தெரிவிக்கின்றனர்.
தோட்டப்புற பாடசாலைகள் சிலவற்றில் கற்றல் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான வளங்களும் காணப்படுவதில்லை. கற்பிப்பதற்கான ஆசிரியர்களும் காணப்படுவதில்லை. ஆனால் ஒரு சில பாடசாலைகளில் தேவைக்கதிகமான ஆசிரியர்கள் உள்ளனர். இவர்கள் ஒரே பாடத்தை கற்பிக்க முடியாதவிடத்து கணித பாடம் கற்பிக்கும் திறமைiaக் கொண்ட ஆசிரியர்கள் இன்று சமய பாடமும் அல்லது சுகாதாரமும் என அவர்களது துறைசாரா கற்பித்தலில் ஈடுபட்டுள்ளனர் என சமூகஆர்வலர் ஒருவர் தெரிவிக்கின்றார்.
மலையக சமூகத்திலிருக்கும் இந்த ஆரம்ப கட்ட பிரச்சினையின் காரணமாக பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்கள் தெரிவாவதில் மிகவும் பின்தங்கியே நிலையே. அதிலும் சிலர் தெரிவாகின் அவர்கள் பெரும்பாலும் ஏதேனும் கல்விப் புலத்தை கொண்ட குடும்ப அலகிலிருந்து வந்தவர்களாக காணப்படுவார்கள். அண்மையில் ஓர் மலையக பேராசிரியர் ஒருவரை சந்திக்க கிடைத்தது. இதன்போது அவர் இதுவரையில் மலையகத்திலிருந்து 15 பேராசிரியர்களே உருவாகியுள்ளார் எனவும் பட்டதாரி ஆசிரியர்களை விரல்விட்டு எண்ணிவிட முடியும் எனவும் கூறினார்.
இந்தg; பல்கலைக்கு மாணவர்கள் தெரிவு, பட்டதாரி ஆசிரியர்கள் இன்மை மற்றும் குறித்த கணிதம், விஞ்ஞானம் மற்றும் ஆங்கிலப் பாடத்துக்கான ஆசிரியர் பற்றாக்குறை போன்றவை உருவாகவும் பாடசாலைக்கும் மாணவர்களுக்Fkhd இடைவெளி அதிகரிக்கவும் காரணம் என்ன என்பது குறித்து சிந்திக்க வேண்டும்.
அந்த வகையில், சொந்த ஊர்களில் நியமனம் பெறும் ஆசிரியர்கள் தமது தேவைக்கேw;ப பாடசாலைகளுக்கு வருகை தருவதாகவும் 6 மணிநேர பாடசாலை கற்றல் நடவடிக்கையில் ஈடுபடுவதில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது. இவற்றுக்கு பாடசாலைகளின் அதிபர்கள் துணைப்போகின்றனர் என குற்றQ;சாட்டப்படுகின்றனர். இந்தg; பிரச்சினைக்கு ஒட்டுமொத்த ஆசிரியர்களையும் அதிபர்களையும் மாத்திரம் குறை கூறிவிட முடியாது. பாடசாலை சமூகம், வலய கல்வி பணிப்பாளர்கள், மாகாண கல்வி அமைச்சு, கல்வி அமைச்சு, ஆசிரியர் சங்கங்கள் மற்றும் கல்வி நடவடிக்கைகளுடன் தொடர்புடைய இன்னோரன்ன குழுக்களும் பொறுப்புக்கூற வேண்டியவர்களாவர்.
உலகில் பிறந்தவர்கள் அனைவரும் மேதைகள் அல்ல. மேதைகள் உருவாக்கப்படுவதும் ஒரு ஆசிரியரின் வழிநடத்தலிலே. பல மைல் தூரம் நடந்து வந்து கற்பித்த ஆசிரியர்களையும் வரலாற்றில் பார்த்திருக்கிறோம். ஆனால் தற்போது தமது சுயநலனுக்காக குறித்த வசதி குறைந்த பாடசாலைகளில் கடமை புரிய ஆசிரியர்கள் மறுப்பது எவ்வகையில் நியாயமானது. ஆனால் தமது தேவைகள், நியமனங்கள், சம்பள உயர்வுக்காகவும் வீதியில் இறங்கி போராடும் ஆசிரியர் சங்கங்களும் பாடசாலைகளில் காணப்படும் ஆசிரியர் பற்றாக்குறை குறித்து பேசவில்லை.
பொருளாதார பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ள மலையக சமூகமும் தமது விடிவுக்காய் அரசியல் தலைமைகளை எதிர்பார்த்து நிற்கின்றது. சுயமான முன்னேற்றம் குறித்து இவர்களது எண்ணப்போக்கிலேயே இல்லை. இவ்வாறு இந்த சமூகம் எவ்வழியில் செல்லவேண்டுமென்பதை அறியாது பயணிக்கின்றது என்பது உண்மையே. இதனை தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் சில அரசியல் தலைமைகள் உருவாகியிருப்பதையும் காண முடிகின்றது. தொழிw;சங்கங்கள் பல மலையகத்தில் உண்டு. இந்த தொழிw;சங்கள் பயிற்சிg; பட்டறைகளை உருவாக்கி அவற்றுக்கு தமது தலைமைகளின் பெயர்களை இடுவதில் மாத்திரமே மும்முரமாக காணப்படுவதாக மலையக பல்கலை மாணவர்கள் குறை கூறுகின்றனர். அந்த நிலையங்களpy; மேற்கொள்ளப்படும் கல்வி நடவடிக்கைகள் குறித்து வெளியிடப்பட வேண்டும். அங்கே புரளுகின்ற கல்விக்கான நிதி குறித்த அறிக்கைகள் வெளியிடப்பட வேண்டும்.
தமது சமூகத்தின் விடிவு கற்றல் நடவடிக்கையிலேயே. எதிர்கால மலையத்தை நிலைப்படுத்த பாரபட்சமற்ற கல்வியை அவர்களுக்கு பெற்றுக்கொடுக்க வேண்டும். மலையfம் தற்போது எதிர்நோக்கியுள்ள பாடசாலை மட்டங்களிலான ஆசிரியர் பற்றாக்குறைக்கு நிரந்தர தீர்வு ஒன்று காணப்படவேண்டும். இந்த பாரிய பொறுப்பு மலையக சமூகத்திடமே காணப்படுகின்றது. எமது தேவைகள் முன்வைக்கg;படாவிடின் ஒரு போதும் அது நிறைவேற்றப்படாது. அவற்றுடன் ஒரு சிலரின் குரல் மாத்திரம் பொது மேடைகளில் எடுபடாது. ஒட்டுமொத்த சமூகமே தமது தேவைகள் குறித்து குரல்கொடுக்க வேண்டும்.
அந்தவகையில் இந்தg; பாரிய பொறுப்பு அரசியல் தலைமைகளிடம் காணப்படுகின்றது. அதனை அவர்கள் சரிவர செய்கின்றார்களா என்பதே தற்போது எழுந்துள்ள கேள்வி. நாட்டின் ஒவ்வொரு மாகாணங்களுக்கிமிடையில் ஏற்றத்தாழ்வுடன் கூடிய கல்வி வரைவு காணப்படின் அது ஒட்டுமொத்த நாட்டின் அபிவிருத்தியையும் பாதிக்கும் என்பதில் சந்தேகமில்லை. இந்த ஏற்றத்தாழ்வுகளை தகர்த்தெறிந்து அனைவருக்கும் சமமான கல்வியை பெற்றுக்கொடுத்திட அனைவரும் முயற்சிக்க வேண்டும்.
எனவே இனியும் மலையகம் பிறர் கை ஏந்தக் கூடாது என்றால் கல்வி கற்பதில் அதிகளவு நாட்டம் காட்ட வேண்டும். தமது சமூகத்தின் வளர்ச்சியை தமது முயற்சிலேயே பெற்றுக்கொள்ள வேண்டும். இதற்கு மலையகத்திலுள்ள சிறுவர்கள் அனைவரும் கல்வியை பெற்றுக்கொள்ள வேண்டும். மலையக இளைஞர்களின் கல்வி அடைவு மட்டத்தில் காணப்படும் மந்தகதி குறித்து சிந்திக்க வேண்டிய முக்கியமான காலகட்டம் இதுவாகும். இப்பிரச்சினை அனைவருக்கும் சமமான கல்வி பாடசாலையிலேயே பெற்றுக்கொடுக்கப்படும். அந்த பாடசாலைகளில் கல்வி போதனை நடவடிக்கைகள் அனைத்து தரப்பினருக்கும் சமமான வகையில் காணப்பட வேண்டும்.
மலையக மக்களை சிந்திக்க விடாமல் போதைக்கு அடிமையாகவும் அதிகளவான வேலைப் பழுவையும் அவர்கள் மீது சுமத்தி முட்டாளாக மாற்றி வைத்துள்ள கலாச்சாரத்தை கல்வி எனும் ஆயுதத்தின் உதவியுடன் எதிர்கால இளைஞர் சமூகம் வெற்றிக்கொள்ள வேண்டும்.
Recent Comments