News

போலிச் செய்திகளால் நீங்கள் ஏமாற்றப்பட்டிருக்கின்றீர்களா?

By In

உலகளாவிய ரீதியில் தொற்றுநோயை எதிர்கொள்ளும் வேளையில், நாம் போலி செய்திகளுக்கும் முகங்கொடுக்க நேரிட்டிருப்பது இரகசியமல்ல. குறிப்பாக சமூக ஊடகங்களைப் பயன்படுத்துபவர்கள், தங்களது தனிப்பட்ட அனுபவத்திலிருந்து இதைப் பற்றி அறிந்திருப்பார்கள். போலிச் செய்திகள் பெரும்பாலும் பகிரப்படும் தளங்களில் வாட்ஸ்அப் செயலியும் ஒன்றாகும். உலகில் கையடக்கத் தொலைபேசி பயன்படுத்துபவர்களில் கிட்டத்தட்ட இரண்டு பில்லியன் பேர் வாட்ஸ்அப்பைப் பயன்படுத்துகின்றனர். வாட்ஸ்அப் இலங்கையில் கிட்டத்தட்ட 32 மில்லியன் மக்களால் பயன்படுத்தப்படுகின்றது. அடையாளம் தெரியாத குழுக்கள் வாட்ஸ்அப்பைப் பயன்படுத்தி போலிச் செய்திகளை உருவாக்கி அவற்றை நண்பர்கள் மத்தியில் பரப்புகின்றன. மறுபுறம், சில பயனர்கள் மற்றவர்களைப் பற்றிய தனிப்பட்ட தகவல்களை சேகரிக்க இந்த தளத்தைப் பயன்படுத்துகின்றனர். 

எனவே, மேற்கூறிய விடயங்கள் குறித்த விளக்கங்களையும் மேலதிக தகவல்களையும் பெறுவதற்காக 25/05/2021 அன்று இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு CERT I cc இற்கு தகவலறியும் சட்டத்தைப் பயன்படுத்தி தகவல் அறியும் விண்ணப்பத்தினை  அனுப்பினோம். தகவலறியும் விண்ணப்பத்தைப் பற்றி குறிப்பிடுகையில், போலி இணைப்புகளை கொண்ட செய்தி (Spam) என்றால் என்ன என்று கேட்டோம். “பெரும்பாலும் வர்த்தக ரீதியான, பயனரால் ஒருபோதும் கோரபடாத பேராளவான தேவையற்ற செய்திகளாகும்” என CERT நிறுவனம் பதிலளித்திருந்தது. இந்த செய்திகளில் பெரும்பாலானவற்றில், உங்கள் தனிப்பட்ட தகவல்கள் கேட்கப்படுகின்றன, சில சந்தர்ப்பங்களில் உங்கள் நிதித் தகவல்களும் கோரப்படுகின்றன. பொதுவாக, இதுபோன்ற தேவையற்ற செய்திகளை நீங்கள் மின்னஞ்சல் வழியாகப் பெறுவீர்கள், மேலும் இதுபோன்ற செய்திகளை பார்ப்பது உங்கள் கணினி, கையடக்கத் தொலைபேசி மற்றும் பிற டிஜிட்டல் சாதனங்கள் தீம்பொருள்(Malware) தாக்கத்திற்கு உட்படக்கூடும் என்று CERT கூறுகிறது. 

2020 முதல் 2021 வரை பகிரப்பட்ட போலி இணைப்புகளை கொண்ட செய்திகள் (Spam) ஏதேனும் வந்துள்ளதா என்று நாங்கள் கேட்டோம். போலி இணைப்புகளை கொண்ட செய்திகளில் (Spam), CERT ஒரு தனி வகைப்பாட்டை செய்யவில்லை என்றும் அது கீழே உள்ள அட்டவணையின்படி தகவல்களை சேகரித்துள்ளது என்றும் CERT பதிலளித்தது. 

Incident TypeNo. of Incident
DDOS1
Ransomware18
Malicious software issue9
Phone hacking6
Scams109
Phishing15
Website compromise76
Financial / email frauds55
Intellectual property violation1
Server compromised1
Social media14284
Other35

இதன் தொடர்ச்சியாக, இதுபோன்ற செய்திகளின் தாக்கங்களை பொதுமக்கள் மதிப்பிடுவதற்கும், கோரப்படாத போலிச் செய்திகளிற்கு  எதிராக செயற்படுவதற்கும் ஏதேனும் திட்டம் உள்ளதா என்று தகவலறியும் கோரிக்கை மூலம் CERT நிறுவனத்திடம்  வினவியபோது இது சம்பந்தமாக, பொது விழிப்புணர்வு திட்டங்களை நடத்துவதே இந்த சிக்கல்களுக்கான சிறந்த நடவடிக்கை என்றும், அவ்வப்போது பொது விழிப்புணர்வு அமர்வுகளை CERT நடத்துகிறது என்றும் CERT வலியுறுத்தியுள்ளது. மேலும், CERT மேற்கொண்ட திட்டங்களை அந்தந்த சமூக ஊடக தளங்களில் பகிரங்கப்படுத்தியுள்ளதாகவும், தற்போதைய இணைய பாதுகாப்பு பிரச்சினைகள் குறித்த தகவல்களை தங்கள் வலைப்பக்கத்தில் வெளியிட்டுள்ளதாகவும் CERT தெரிவித்துள்ளது

News

இந்திய இழுவை மடி படகுகளால் பாதிக்கப்படும் இலங்கை மீனவர்களின் வாழ்வாதாரம்

க.பிரசன்னா பல தசாப்தங்கள் நீடிக்கும் இலங்கை – இந்திய மீனவர்களின் பிரச்சினையானது, இலங்கை – இந்திய இராஜதந்திர உறவுகளில் அவ்வப்போது நெருக்கடிகளைத் தோற்றுவித்து வருகின்றது. மீனவர்களின் பிரச்சினையை…

By In
News

2022 கலவரம்: பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான இழப்பீடுகளுக்கு 50 மில்லியன் ரூபா மேலதிக நிதி விடுவிப்பு?

க.பிரசன்னா உலகளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியதும் இலங்கையில் ஆட்சி மாற்றத்துக்கு வழி வகுத்ததுமான காலி முகத்திடல் (அரகலய) போராட்டம் இடம்பெற்று இரண்டு வருடங்கள் கடந்துள்ள போதும், அதனைச் சுற்றிய…

By In
News

10 வருடங்களில் பொலிஸ் சேவையில் இருந்து 2847 பேர் இடைநிறுத்தம்!

ந.லோகதயாளன் கடந்த 10 ஆண்டுகளில்  பொலிஸ் திணைக்களத்தில் இருந்து 2847 பேர் பணியிலிருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. பொலிஸ் திணைக்களத்தின் தலைமையகத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட தகவல்…

By In
News

போதையில் மூழ்கும் சமூகம்;  அதிர்ச்சி தரும் புள்ளிவிபரங்கள்

2023ஆம் ஆண்டு மாத்திரம் 162,088 பேர் கைது! மொஹமட் ஆஷிக் போதைப்பொருள் விவகாரம் இலங்கையில் மட்டுமன்றி அனைத்து நாடுகளிலும் பாரிய நெருக்கடியாக உள்ளது. எமது நாட்டில், அதை…

By In

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *