உலகளாவிய தகவல் அணுகலுக்கான சர்வதேச தினத்தை (IDUAI) முன்னிட்டு 2022 செப்டெம்பர் 26 அன்று இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் (SLPI) ‘பிரஜைகளுக்காக உழைத்த ஒரு சட்டம்: இலங்கையில் தகவல் அறியும் உரிமையின் ஐந்தாண்டுகள்; 2017-2022’ என்ற தலைப்பில் இணையவழி குழு கலந்துரையாலை நடாத்தியிருந்தது.
இந்தக் கலந்துரையாடலில், இலங்கை தகவல் அறியும் உரிமைக்கான ஆணைக்குழுவின் ஆணையாளர் கிஷாலி பின்டோ ஜயவர்த்தன, ஜூலியஸ் & க்ரீசியின் சிரேஷ்ட சட்டத்தரணி பிரசாந்தி மகிந்தாரத்ன மற்றும் தொழில்நுட்பம், ஊடகம் மற்றும் தொடர்பாடல் சட்ட ஆலோசகரும் ஆய்வாளருமான அஷ்வினி நடேசன் ஆகியோர் பேச்சாளர்களாகவும், சட்டத்தரணியும் சவூதி அரேபியாவுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவருமான திரு. ஜாவிட் யூசுப் அவர்கள் நெறியாளராகவும் கலந்துகொண்டனர்.
‘இலங்கையின் RTI பயணத்தின் வெற்றிகள் மற்றும் சவால்கள்’ என்ற தலைப்பில் கிஷாலி பின்டோ-ஜயவர்த்தன அவர்கள் பேசும் போது, ‘இலங்கையின் RTI பயணத்தின் சாதனைகள் மற்றும் சவால்கள்’ என்ற தலைப்பில் தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்ட போது, இலங்கையின் பிரஜைகள் கடந்த ஐந்து வருடங்களில் RTI சட்டத்தை பயன்படுத்தி தமது சமூகத்தை மேம்படுத்துவதற்கு பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்தார். உரையாடலுக்கு மேலும் வலு சேர்க்கும் வகையில், பிரசாந்தி மகிந்தாரத்ன குறிப்பிடுகையில், “தகவல் அறியும் உரிமைச் சட்டம் என்பது அரசாங்கமும் பிரஜைகளும் நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளின் (SDG) சாதனையை நோக்கி பயணிக்க உதவும் ஒரு பாலமாகும். ஆனால் பொது அதிகாரிகளோ அல்லது பிரஜைகளோ வெளிப்படுத்தப்பட்ட தகவல்களைப் பயன்படுத்தி தொடர் நடவடிக்கை எடுக்கத் தவறினால் அது கடக்கப்படாத பாலமாகவே இருக்கும் எனவும் தெரிவித்தார். தகவல் அறியும் உரிமையின் பயன்பாட்டிற்கும் ஊழலை குறைப்பதற்கும் அல்லது வெளிப்படைத்தன்மையை அதிகரிப்பதற்கும் இடையேயான தொடர்பை ஏற்படுத்துதல் என்ற தலைப்பில் உரையாற்றிய அஷ்வினி நடேசன், RTI ஊடாக ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை வலியுறுத்தியதோடு குறுகிய காலத்தில் இது வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் மற்றும் சிறந்த நிர்வாகத்திற்கான வாக்குறுதியை வெளிப்படுத்துகின்றது எனவும் குறிப்பிட்டார்.
இவ் இணையவழி கலந்துரையாடலானது, Media Reform Lanka இனால் வெளியிடப்பட்ட மூன்று புத்தகங்களினதும் அதாவது, “இலங்கை தகவல் உரிமைக்கான ஆணைக்குழுவின் ஆணைகளுக்கான வழிகாட்டி (2017-2021)”; “இலங்கையின் தகவல் அறியும் உரிமையின் ஆட்சி மற்றும் ஐக்கிய நாடுகளின் நிலையான அபிவிருத்தி இலக்குகள்: பிரதிபலிப்புக்கான சிந்தனைகள்”; மற்றும் “இலங்கையின் தகவல் அறியும் உரிமைக்கான ஆணைக்குழுவின் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆணைகளுக்கான சட்ட விளக்கங்கள்; 2019 – 2021”, போன்றவற்றின் வெளியீட்டையும் குறித்தது. இந் நூல்கள் கிஷாலி பின்டோ-ஜயவர்த்தன, நிவேதா ஜெயசீலன் மற்றும் இன்ஷிரா ஃபாலிக் ஆகியோரால் திருத்தப்பட்டது.
Recent Comments