- கோட்டாபய ராஜபக்ஷவின் கீழ் 9வது பாராளுமன்றம் – ரூ. 287,340.00
- அனுர குமார திசாநாயக்கவின் கீழ் 10வது பாராளுமன்றம் – ரூ. 339,628.55339,628.55
சமந்த ஹெட்டியாராச்சி
10வது பாராளுமன்றத்தின் ஆரம்ப அமர்வைத் தொடர்ந்து, தேநீர் விருந்து மற்றும் பிற உபசரிப்புகளுக்காக மொத்தமாக ரூபா. 339,628.55 செலவிடப்பட்டதாக பதிவேடுகள் தெரிவிக்கின்றன. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட இந்தத் தகவல், பாராளுமன்ற செயலகத்தால் உத்தியோகபூர்வமாக வழங்கப்பட்டது. மேலதிகமாக, அதே அமர்வின் போது நிகழ்வு ஒழுங்கமைப்புக்களுக்கு ரூபா. 72,350.00 செலவிடப்பட்டது.
வரலாற்று ரீதியாக, புதிதாகக் கூட்டப்படும் ஒவ்வொரு பாராளுமன்றமும் ஆரம்ப விழாவுடன் தொடர்புடைய நடவடிக்கைகளுக்காக செலவினங்களை எதிர்கொள்கிறது. இருப்பினும், முந்தைய அரசாங்கங்கள் இந்த செலவினங்கள் குறித்து விமர்சனங்களையும் தவறான தகவல்களையும் எதிர்கொண்டன. சில அரசியல் பிரிவுகள் இந்த செலவினங்களை தங்களது நிகழ்ச்சி நிரல்களுக்காக சுரண்டியதுடன், பெரும்பாலும் அவற்றை அதிகப்படியான அல்லது வீணானதாக தவறாக சித்தரித்தன. இந்த வெளிப்பாடு பொதுமக்களின் பரிசீலனைக்காக சரிபார்க்கப்பட்ட புள்ளிவிவரங்களை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
பாராளுமன்றச் செலவினங்களின் ஒப்பீட்டுப் பகுப்பாய்வு
முந்தைய நிர்வாகங்களால் ஏற்பட்ட செலவினங்களையும் பதிவுகள் எடுத்துக்காட்டுகின்றன:
• 9வது பாராளுமன்றம் (கோட்டாபய ராஜபக்ஷ நிர்வாகம்): LKR 287,340.00
• 10வது பாராளுமன்றம் (அனுர குமார திசாநாயக்க நிர்வாகம்): LKR 339,628.55
7வது மற்றும் 8வது பாராளுமன்றங்களின் செலவினஅறிக்கைகள் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் பிரிவு 3 (1) இன் கீழ் கோரப்பட்ட போதிலும், கணக்கீடுகள் தனித்தனியாக மேற்கொள்ளப்படவில்லை என்று கூறி, பாராளுமன்ற செயலகத்தால் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரே மாதிரியான ஆவணப்படுத்தல் மற்றும் நிர்வாக நடைமுறைகளை மேற்கொண்ட போதிலும், பொதுமக்களின் பரிசீலனைக்கு சரிபார்க்கப்பட்ட பதிவுகள் எதுவும் கிடைக்கவில்லை.
இந்த செலவினங்களைக் கையாளும் போது பாராளுமன்ற செயலகம் நிறுவப்பட்ட சட்ட கட்டமைப்புகளைப் பின்பற்றுகிறது. தொடர்புடைய பாராளுமன்ற ஒழுங்குவிதிகளின் உறுப்புரை 3(1) இன் படி, அனைத்து நிதியியல் வெளிப்பாடுகளும் பொதுமக்களுக்கு அணுகக்கூடியதாக இருக்க வேண்டும். மேலும், உறுப்புரை 5 நிதி மேற்பார்வை மற்றும் பொறுப்புக்கூறல் நடவடிக்கைகள் தொடர்புடைய அதிகாரங்களால் அமுல்படுத்தப்படவேண்டும் என்று குறிப்பிடுகிறது.
இது மரபு தொடர்பான விடயமாகும், தவறான பயன்படுத்துகை அல்ல
ஆரம்ப பாராளுமன்ற அமர்வுக்குப் பிறகு ஏற்படும் செலவினங்கள் பாரம்பரியமான நடைமுறை என்பதுடன் ஒரு அசாதாரண நிகழ்வல்ல. இந்த செலவினங்கள் பாரம்பரிய பாராளுமன்ற நடபடிமுறைகளுக்கு ஏற்ப உள்ளன என்று பாராளுமன்ற செயலகம் உறுதிப்படுத்துகிறது.
உதாரணமாக, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கீழ் 9வது பாராளுமன்றத்தின் ஆரம்ப அமர்வின் போது, சம்பிரதாய நடவடிக்கைகளுக்கு ரூபா. 287,340.00 செலவிடப்பட்டது. இதேபோல், தற்போதைய ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் நிர்வாகத்தின் கீழ், அதே நோக்கத்திற்காக ரூபா. 339,628.55 செலவு செய்யப்பட்டுள்ளது.
இவை நிலையான செலவினங்களாக இருந்தாலும், சில அரசியல் பிரிவுகள் அவற்றை நிதி முறைகேடாக சித்தரிக்க முயற்சித்துள்ளன. இது தவறான விபரிப்புக்கு வழிவகுத்துள்ளதுடன், அங்கு புள்ளிவிவரங்கள் அரசியல் நலன்களைப் பூர்த்தி செய்வதற்காக மிகைப்படுத்தப்படுகின்றன அல்லது கையாளப்படுகின்றன. இருப்பினும், உத்தியோகபூர்வ பதிவுகள் உறுதி செய்தபடி, இந்த செலவினங்கள் அத்தகைய பாராளுமன்ற நடவடிக்கைகளுக்கு எதிர்பார்க்கப்படும் வழக்கமான மட்டுப்பாட்டிற்குள் உள்ளன.


Recent Comments